7-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

ஒரு தொகுப்பில் இளையராஜா, ஜி.கே.வி. அவர்களிடம் பெற்ற அனுபவத்தை சொன்னவை…

ஜி.கே.வி அவர்களிடம் உதவியாளராக தன்ராஜ் மாஸ்டரின் அறிமுகத்தால் சேர முடிந்தது. தன்ராஜ் மாஸ்டரிடம் அனுமதியும் ஆசீர்வாதமும் வாங்கிக்கொண்டு கிளம்பினேன். முதன் முறையாக ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு படக்கம்பெனிக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அங்கே ஜி.கே.வி, தபேலா கன்னையா, படதயாரிப்பாளரும், டைரக்டருமான பகவான் துரை ஆகியோர் இருந்தனர். ராஜ்குமார் நடிக்கும் “கோவாவில் சி.ஐ.டி. 999” என்ற கன்னடப் படத்தில் வரும் ஒரு பாடலுக்கான காட்சியை டைரக்டர் விவரித்தார். பின் பாடலை கம்போஸ் செய்து வையுங்கள் மாலையில் வந்து டியூனை கேட்கிறோம் என்று கூறி சென்றுவிட்டார்கள்.

ஜி.கே.வி. பாடலை கம்போஸ் செய்யத் தொடங்கும்போது

ஜி.கே.வி.: “ஸ்வரத்தை நோட்ஸ் எழுதி வச்சுக்கோ”

இளையராஜா: “ஸ்வரம் எல்லாம் எனக்கு தெரியாது சார்”

ஜி.கே.வி: “பிறகு எப்படி ஆர்மோனியம் வாசிச்சே? ஸ்வரம் எல்லாம் எழுதவில்லையென்றால் நான் கம்போஸ் பண்ணினதை நீ எப்படி எனக்கு திரும்ப சொல்லமுடியும்?”

இளையராஜா: “சார்! எனக்கு டியூனை இரண்டு தடவை கேட்டா மனப்பாடம் ஆயிடும், அப்படியே திரும்ப சொல்லிடுவேன்”

ஜி.கே.வி: “அதெல்லாம் சரிப்படாது” என்று கூறியவர் பிறகு “சரி பார்க்கலாம்” என்றவர் கிடுகிடுவென்று பத்து டியூன்களை கம்போஸ் செய்துவிட்டார். அதற்குள் டைரக்டர் பகவான் துரை வந்துவிட்டார்.

பகவான் துரை: “வெங்கடேஷ், டியூன்களை போடுங்கள்.. கேட்போம்” என்றார்.

ஜி.கே.வி., “முதல் டியூன் எது?” என்று என்னிடம் கேட்டார். நான் பாடினேன். உடனே அதை ஜி.கே.வி. ஞாபகப்படுத்திக் கொண்டு பாடிக்காட்டினார். “இரண்டாவது டியூன்?” என்று கேட்க, நான் பாடினேன். இப்படியே மூன்றாவது, நான்காவது என்று பத்து டியூன்களையும் நான் ஞாபகத்தைக் கொண்டே பாடிக்காட்டினேன். ஜி.கே.விக்கு ஒரே ஆச்சர்யம். தபேலா கன்னையாவைப்பார்த்து, “என்னடா இவன்!” என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து ” நீ என்ன டேப் ரிக்கார்டரா?!” என்றார். பகவான் துரையிடமும் தன் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினார். டைரக்டர் சொன்ன காட்சிக்கு மூன்றாவது சரியாக இருக்கும் என்று முடிவுசெய்தார்கள். பின், ஜி.கே.வி. என்னிடம், “நீ இப்படியே காலத்தை ஓட்டிடலாம் என்று நினைக்காதே… நீதான் இந்தப் பாடலுக்குரிய ஸ்வரங்களை வாத்தியம் வாசிப்பவர்களுக்கு சொல்லணும்” என்றார்.

அன்றிரவு எனக்கு தூக்கமே வரவில்லை. “இங்கேதான் டியூன் தொடங்குகிறது, இதுதான் ஸட்ஜமமாக இருக்க வேண்டும், இதுதான் ரி…க…ம…ப…த… நி… என்று, ஒவ்வொரு ஸ்வரமாகத் தேடிக்கண்டுபிடித்து ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்தேன். எல்லாம் சரியாக இருந்தது. எல்.ஆர்.ஈஸ்வரி பாட, கோல்டன் ஸ்டுடியோவில் ரெக்கார்டிங் நடந்தது.

இந்த நிகழ்ச்சியை சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஸ்வரம் எழுதத் தெரியாது என்று சொன்ன இளையராஜாதான் “பஞ்சமுகி” என்ற ஒரு புதிய ராகத்தை நமக்குத் தந்தார்.

தொடரும்…

Raja – ராஜா வேலாயுதம்

One thought on “7-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

  1. rathnavelnatarajan April 28, 2013 at 11:37 AM Reply

    அருமையான பதிவு.
    நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s