4-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

ஆனால் அந்த வகுப்புகளிலிருந்து வருகின்ற மாணவர்களுக்கு மாஸ்டர் என்னையே பாடம் நடத்தச் சொல்லி விட்டார்.

என்னடா இது! நமக்கு ஒன்றும் சொல்லிக் கொடுக்காமலேயே, நம்மைச் சொல்லிக் கொடுக்கச் சொல்றாரே? என்ன செய்வது? யோசிப்பதற்குக் கூட அங்கே நேரம் இருக்கவில்லை. மாணவர்கள் வந்து போய்க்கொண்டே இருப்பார்கள்.

Piano – Guitar – Violin – Hawain Guitar – Flute – Harmonica – Accordian. இது தவிர Theory என்று Advance Students யாராவது வந்தால் அவரே வந்து விடுவார். இடைநிலைப் பட்டவர்கள் வந்தால் மட்டும் அவர்கள் என்ன வாசிக்க வேண்டுமோ அந்தப் பாடத்தை எடுத்து Piano Stand மேல் வைத்து வாசிக்கச் சொல்லி விட்டு “சரியாக-வாசிக்கிறார்களா-என்று-பார்” எனச் சொல்லி விட்டு வெளியே போய் விடுவார் (குடிப்பதற்குத்தான்) அவருக்கு அந்தப் பழக்கம் உண்டு! அவர்கள் முன் வைக்கப்பட்டிருக்கும் அந்த Music Notation ஐ பார்த்தும் அவர்கள் வாசிப்பதைக் கேட்டும் அதில் கொஞ்சம் கொஞ்சமாக விஷயங்கள் தானாகவே விளங்க ஆரம்பித்தது.

அத்துடன் ஒவ்வோர் இசைக்கருவியின் தனித்தன்மையும் அதற்குத் தகுந்த இசைமுறையும் தெரிந்தது.

நான் G.K. வெங்கடேஷ் அண்ணனிடம் சேர்ந்தபின் அவருக்கு கன்னடத்திலும் தெலுங்கிலும் நிறையப் படங்கள் வந்த காரணத்தால் மாஸ்டரைப் பார்க்க முடியாது போய்விட்டது.

அதற்கு முன் 1970 முடியும்வரை ஓரிரு படங்களே இருந்ததால் – நிறைய நேரம் தன்ராஜ் மாஸ்டருடன் இருக்க வேண்டியிருந்தது.

அப்பொழுதெல்லாம் அவர் பேச்சில் அடிக்கடி Western Classical Music பற்றி நிறைய விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்பார். இது அங்கே வருபவர்களைப் பொறுத்து மாறுபடும். அதில்தான் Bach, Beethovan – Mozart – Tchickovarzky என்று World’s Greatest Masters அனைவரும் வந்து போவார்கள். அவற்றைக் கேட்டுக் கேட்டு அடிக்கடி மனம் கற்பனை உலகிற்குப் போய் வரும்.

இதில் முக்கியமாக திரை இசையைப் பற்றி பேச்சுத் திரும்பினாலோ கோபம் பொத்துக்கொண்டு வரும். இங்கு எவனுக்கு என்ன தெரியும் என்று ஆரம்பித்து, வசைமொழிகள் கண்டவாறு வந்து விழும். அவரிடம் திட்டு வாங்காத இசையமைப்பாளர்கள் என்று யாருமே கிடையாது.

அவருடைய நண்பரான நல்ல தமிழ்ப் புலமை மிக்க ஒருவர் அடிக்கடி வருவார். அவர் அப்போதிருந்த திரை இசையமைப்பாளர்களை வரிசைக் கிரமாகத் திட்டி ஒரு செய்யுள் இயற்றியிருந்தார்.

அதை அவர் படிக்க இவர் ரசிச்சுச் சிரிக்க வருகிறவர்களில் – அவர்களுக்குச் சம அந்தஸ்து உள்ளவர்களிடமும் சொல்லிச் சிரிக்கும் நேரங்களிலெல்லாம் பொழுதுபோக்காக அந்தச் செய்யுள் ஒரு முக்கிய இடம் வகித்தது!

இப்படி சினிமா இசையமைப்பாளர்களை முட்டாள்கள் என்று அவர் திட்டுவதைக் கேட்டுக் கேட்டு – எனக்கும் அந்தக் கிறுக்கு ஏறிக் கொண்டது. நானும் கிட்டத்தட்ட ஒருவருக்கும் ஒன்றும் தெரியாது என்ற முடிவுக்கு வந்திருந்தேன். ஆனால் நான் கொண்டிருந்த கருத்து தவறானது என்று உணரவைக்க – விரைவிலேயே ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

G.K.V. யுடன் வேலை செய்துகொண்டிருக்கும்போதே திரு. M.S.V. அவர்களின் ரெக்கார்டிங்கில் Combo Organ வாசிக்க அழைப்பு வந்தது. அன்று G.K.V. க்கு ஏதும் வேலை இல்லாததால் மிகவும் உற்சாகமாக ஒத்துக் கொண்டு, ஒரு மிகப் பெரிய இசை மேதையிடம் வாசிக்கப் போகிறோம் என்று ஆவலுடன் A.V.M. Studio சென்றேன்.

7.00 மணிக்கே போய்விட்டேன். இசைக்குழுவினர் ஒவ்வொருவராக… 7.30 மணியிலிருந்து தொடங்கி 8.45க்குள் வந்துவிட்டார்கள்.

M.S.V. அவர்கள் ஒன்பது-மணிக்கு வந்தார்.

இசைக்குழுவினர் எல்லாம் அவரவர்க்குரிய இடத்தில் அமர்ந்தார்கள்.

பாடலைப் பாட ஆரம்பித்தார். பக்கத்திலிருந்த கலைஞர்கள் அவர் சொன்னதற்கேற்ப வாசிக்க வாசிக்க, அங்கேயே அதற்கான இசையை வாயாலே பாட உதவியாளர்கள் Notes எழுதிக்கொண்டு அப்படியே வாசிக்க ஒரு 45 நிமிடங்களுக்குள் அந்தப் பாடலுக்கு Orchestration ரெடி ஆகி விட்டது.

எனக்கு அதிசயமாக இருந்தது.

இவர் மாதிரியான Composer-ஐ தன்ராஜ் மாஸ்டர் எப்படித் திட்டலாம் ? அப்படியே அவர் திட்டினாலும், நானும் அவரைப் போல் இவரை நினைக்க எனக்கு என்ன தகுதி இருக்கிறது ?

பீத்தோவனையும் மொஸார்ட்டையும் compare செய்து இவர்களை மட்டமாகப் பேசுவது தன்ராஜ் மாஸ்டருக்குச் சரியே. ஆனால் ஒன்றும் தெரியாத நான், இவர்களுக்கு என்ன தெரியும் என்று தன்ராஜ் மாஸ்டரைப் போலவே எப்படி நினைக்கலாம் என எனக்குள் ஒரு அலசு அலசி தவறான என்னுடைய கருத்தை மாற்றிக்கொண்டேன்.

அன்று அந்தப் பாடல் நான் வாசித்த Combo-Bit உடன்தான் ஆரம்பமானது. அது டைரக்டர் ஸ்ரீதர் இயக்கிய ‘அவளுக்கென்று-ஒரு-மனம்‘ படத்தில் ‘மலர்-எது-என்-கண்கள்தான்‘ என்ற பாடலாகும்.

அதன்பின் என்னுடைய நோக்கம் முற்றிலும் மாறி, முன்னை விட தீவிரமாக இசையைக் கற்றுக்கொள்ள முடிவு செய்தேன்.

ஆனால் தன்ராஜ் மாஸ்டரிடம்தான் அடிக்கடி போக முடியவில்லை.

தொடரும்…

பால் நிலாப்பாதை

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s