குமுதம் vs குங்குமம் – சுப்ரஜா ஸ்ரீதரன்


பத்திரிக்கையாளர் பால்யூ பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது . ஆனால் அவரை முதன் முதலில் நான் சந்தித்த போது அவர் குன்சாய் அடித்து விட்டார். ” உன்னை எனக்கு தெரியும்பா..”. எப்படி என்று எனக்கு கேட்க தெரியவில்லை . காரணம் இல்லாமல் இல்லை. எத்தை தின்னால் பித்தம் தெளியும் என்கிற நிலையில் நான் இருந்த காலம். குமுதம் பத்திரிகை பற்றி எனக்கு நல்ல அபிப்ராயம் இருந்த மோசமான காலக் கட்டம். ஒரு பத்திரிக்கையாளன் என்றாலோ அல்லது ஒரு எழுத்தாளன் என்றாலோ அவன் அல்லது அவள் படைப்பு குமுதத்தில் வந்திருக்க வேண்டும் என்கிற ஒரு தவறான கணிப்பு இருந்த காலம்.

தனக்கு எல்லாம் தெரிந்தது போலவும் எல்லாரையும் தெரிந்தது போலவும் காட்டிக் கொள்வதில் கில்லாடி அவர். நான் தொடர்ந்து குமுதத்திலும், குங்குமத்திலும் , சாவியிலும், சுஜாதா மாதமிருமுறை இதழிலும் எழுதி வந்த போது பால்யூ மிகத் தந்திரமாக குமுதத்திற்கு மட்டும் எழுத வேண்டும் என்று ஆசிரியர் எதிர்பார்க்கிறார் என்று ஓரமாய் ஒதுக்கி சொன்னார். குமுதத்தை பொறுத்த வரை அதில் எழுதும் சுதந்திரப் பத்திரிகையாளர்கள் யாரும் குமுதத்திற்ககாக பேட்டி எடுக்கப் போகும் போது குமுதத்தின் பெயரை சொல்ல கூடாது என்பது எழுதாத விதி. நான், ரஜத், சுதாங்கன் மற்றும் சில பத்திரிகையாளர்கள் அப்படித்தான் செயல்பட்டோம். ஆனால் பத்திரிகையாளர்கள் அவர்களது சொந்த தொடர்பின் மூலம் தான் பேட்டி எடுப்பார்கள் . பேட்டி எடுக்கும் போது பேட்டி கொடுப்பவர்களுக்கும் தெரியும் பேட்டி வரும் வரை எதுவும் உறுதி இல்லை என்று.

என்னை பொறுத்தவரை சினிமா நண்பர்களும் சரி அரசியல்வாதிகளும் சரி எனக்கு பேட்டி கொடுக்கும் போதே சொல்லி விடுவேன். ”இது பொதுவாக எடுக்கும் பேட்டி … ஓன்று குமுதத்தில் வரும் அல்லது குங்குமத்தில் வரும்.. இரண்டிலும் இல்லை என்றால் சாவியிலோ சுஜாதாவிலோ வந்து விடும்” என்று சொல்வேன். அப்படியெல்லாம் பத்திரிகையாளர்களை குமுதம் சுரண்டிய காலம் அது. இன்று துடைத்து போடும் நிலைக்கு குமுதம் வந்து விட்டதன் காரணம் பல பத்திரிகையாளர்கள் சாபம் கூட காரணமாய் இருக்கலாம். மாறாக குங்குமத்தின் பாவை சந்திரனும் அதன் அப்போதைய ஆசிரியர் முரசொலி மாறனும் பத்திரிகையாளர்களையும் புகைப்பட நிபுணர்களையும் அணைத்தே செல்வார்கள். குங்குமம் உச்சத்தில் வந்ததிற்கு அதுவே மூல காரணம். குமுதத்தில் மட்டும் எழுதிய நிறைய பேர் காணாமல் போனார்கள்.

சுப்ரஜா ஸ்ரீதரன்

Advertisements

One thought on “குமுதம் vs குங்குமம் – சுப்ரஜா ஸ்ரீதரன்

  1. balagopal April 6, 2013 at 6:55 AM Reply

    அந்தக் காலத்தில் நான் ஒரு குமுதம் விசிறி. குமுதம் சினிமா விமர்சனம் ஒரு தனி மதிப்புடைத்து . சாண்டில்யன், எஸ் எ பி
    ,ஜ ரா சு ,ராகி ரங்க ,என்ற முத்துக்களின் படைப்புகளுக்காக ஏங்கி
    காத்திருந்த காலம். தற்கால நிலை குறித்த இந்த கட்டுரை என்னை
    மிகவும் வருத்துகிறது . எப்பொழுது குமுதம் வாங்குவதை நிறுத்தினேன் என்பது நினைவில்லை தொழில் ஒய்வு , பிற பணிகள் பத்திரிக்கைகளின் மீதிருந்த பற்றுக்குறைவு அவற்றின் தரக்குறைவு என்ற பல் காரணங்கள் . ஆனால் மேற்கூறியது போல் தொய்வு அடைந்திருக்கும் என்று எண்ணவில்லை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s