வாரியார் சொன்ன கற்பூர கதை…


க்தன் ஒருவன் கோயிலுக்குச் சென்றான். அவனது கூடையில் ஆண்டவனுக்குச் சமர்ப்பிப்பதற்காக வாழைப்பழம், தேங்காய், கற்பூரம் ஆகியன இருந்தன.

தேங்காய் பேச ஆரம்பித்தது: ”நம் மூவரில் நானே கெட்டியானவன், பெரியவனும்கூட!” என்றது. அடுத்து வாழைப்பழம், ”நமது மூவரில் நானே இளமையானவன், இனிமையானவன்” என்று பெருமைப்பட்டுக் கொண்டது. கற்பூரமோ எதுவும் பேசாமல் மௌனம் காத்தது.

பக்தன் சந்நிதியை அடைந்தான். தேங்காய் உடைபட்டது. பழத்தோல் உரிக்கப்பட்டது. கற்பூரமோ தீபம் ஏற்றியதும் கரைந்து ஒன்றும் இல்லாமல் போனது. பக்தர்களாகிய நாம் இதிலிருந்து ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தேங்காய் போல் கர்வத்துடன் இருந்தால், ஒருநாள் நிச்சயம் உடைபடுவோம். இனிமையாக இருந்தாலும், வாழைப்பழம் போல் தற்பெருமை பேசித் திரிந்தால் ஒருநாள் கிழிபடுவோம். ஆனால் கற்பூரம் போல் அமைதியாக இருந்துவிட்டால், இருக்கும் வரை ஓளிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம்.

–நன்றி சக்தி விகடன்

Advertisements

7 thoughts on “வாரியார் சொன்ன கற்பூர கதை…

 1. அருமை…

 2. ILAMURUGAN April 5, 2013 at 12:51 PM Reply

  superb

  • BaalHanuman April 5, 2013 at 11:19 PM Reply

   நன்றி இளமுருகன் 🙂

 3. nagarajanramakrishnan1959 April 5, 2013 at 2:08 PM Reply

  இதே கருத்துடன் பிஜேபியைச் சார்ந்த திரு இல கணேசன் 1986ல் எழுதிய ஒரு பாடலில் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.

  “பற்றியது கற்பூரம் சுற்றியது தட்டோடு

  காட்டியது உன் உருவை கண்ணா

  எரிந்தது கற்பூரம் எதுவுமே மிச்சமில்லை

  தெரிந்தது தேவையான தகுதி”

  • BaalHanuman April 5, 2013 at 11:18 PM Reply

   அருமையான பாடல். உங்கள் முதல் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

 4. ranjani135 April 5, 2013 at 3:12 PM Reply

  நல்ல கதை!

  • BaalHanuman April 5, 2013 at 11:22 PM Reply

   உங்கள் ரசனைக்கும் முதல் வருகைக்கும் மனமார்ந்த நன்றி…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s