4-ரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…


சிலந்திப் பூச்சி,எப்படி தன் வாயிலிருந்து வெளியில் நூலை நூற்று, மறுபடியும் தன்னுள் இழுத்துக் கொள்கிறதோ அப்படியே மனமும் தன்னிடத்திலிருந்து உலகத்தைத் தோற்றுவித்து, மறுபடியும் தன்னிடமே ஒடுக்கிக் கொள்கிறது.

–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

திருவண்ணாமலையின் தென்கிழக்குச் சரிவில் அமைந்திருக்கும் விரூபாட்ஷி குகையில் பகவான் பல வருடங்கள் இருந்தார்.அப்போது குகைக்கு வெளியே, மலைச் சரிவு அருகில் ஒரு பாறை இருந்தது. அதன் மேல் பகவான் தினமும் அரை மணி நேரம் அமர்ந்திருப்பார்.அங்கே உட்கார்ந்துதான் தினமும் பல் துலக்குவார்.

கடும் பனியாக இருந்தாலும் சரி, கொட்டும் மழையாக இருந்தாலும் சரி, பகவான் அந்தப் பாறையில் அமர்வதை தவறவிட்டதே இல்லை..

பக்தர்களுக்கு இது வியப்பாக இருந்தது. “பகவானே, மழை, பனியில் கூட ஏன் பாறையில் போய் அமர்கிறீர்கள்.உடம்பு சுகம் இல்லாமல் போய்விடாதா? குகைக்குள் இருந்தபடியே பல் தேய்த்தால் என்ன?’’ என்று துணிந்து ஒருவர் கேட்டுவிட்டார்.

பகவான் கேள்வி கேட்டவரைப் பார்த்துப் புன்னகைத்தார்.”கீழே மலையடிவாரத்தில் சௌபாக்கியத்தம்மாள் என்று வயதான பெண்மணி ஒருத்தி குடியிருக்கிறாள். அவள் தினமும் இங்கே வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போய்தான் உணவருந்துவாள்.ஒரு நாள் அவள் வரவில்லை. ஏன் வரவில்லை என்று மறுநாள் கேட்டேன். “வயசாச்சு சாமி. மலையேறி வர முடியல. உடம்பு முடியல. ஆனா உங்களைத் தரிசனம் செய்யாம எப்படி இருக்கறதுன்னு தவிச்சபடியே மலை மேலே பார்த்தேன். அந்தக் காலை நேரத்துலதான் நீங்க வெளியில இருக்கற பாறை மேல உட்கார்ந்து இருந்தீங்க. கீழே இருந்தபடியே உங்களைவிழுந்து கும்பிட்டேன் சாமி’’ன்னு கண் கலங்கினா.

பாவம், வயசான காலத்துல அவளால எப்படி மலையேறி வரமுடியும்? அதனாலதான் அவளுக்காக தினமும் காலையில் இந்தப் பாறையில் உட்கார்ந்துக்கறேன். மழை, பனி எதுவா இருந்தாலும் அந்த வயசான அம்மா ஏமாந்துடக் கூடாதே? பாவம், அவ அண்ணாந்து பாத்துக்கிட்டிருப்பாளே. அதான்’’ என்றார் பகவான்.

நீங்களே சொல்லுங்கள். யாரோ ஒரு ஏழை பக்தைக்காக பல வருடங்கள் தினமும் அரை மணி நேரம் ஓர் பாறையில் அமர்ந்திருந்த ஓர் அளவற்ற கருணை கொண்டவரை, ரமணரைத் தவிர உலகம் எங்காவது கண்டிருக்கிறதா?

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!

Welcome to Arunachala Live!

Advertisements

3 thoughts on “4-ரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…

 1. அருமை…

  நன்றி…

  • BaalHanuman March 31, 2013 at 3:56 PM Reply

   நன்றி தனபாலன் உங்கள் தொடர்ந்த ஆதரவிற்கு…

 2. G. Arunagiri April 4, 2013 at 4:26 AM Reply

  ரமணர் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் யாவும் மனித வாழ்க்கையில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள். மிகவும் அருமை. நன்றிகள் பல உரித்தாகுக.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s