2-பரிசு – சுஜாதா


இதன் முந்தைய பகுதி…

Madhyamar

இங்கேயும்இல்லாமல் அங்கேயும் செல்ல முடியாமல் ஒரு வர்க்கமே இருக்கிறது.  ஏறக்குறைய நல்லவர்.

மத்யமர்.
இவர்களை பற்றிய கதை இது.
– சுஜாதா

“உங்க ஹஸ்பண்டு ரொம்ப லக்கி மிஸஸ் கிருஷ்ணசாமி. பத்தாயிரம் பேர் கலந்து கொண்ட வாக்கியப் போட்டியில முதல் பரிசு! நாலே நாலு வார்த்தை…”

“சொர்க்கத்தை எண்ணி செய்தது வின்னி! சிம்பிள்!”

“என்ன பரிசு?”

“ஒரு வாரம் நாம இரண்டு பேரும் டில்லி, ஆக்ரா எல்லாம் சுத்திப் பார்க்கறாப்பல, ஏரோப்ளேன்! அஞ்சு நட்சத்திர ஓட்டல், இன்னும் என்ன சார்?”

“அப்படியா!” என்றாள் நெஞ்சை இரு கைகளாலும் அழுத்திக்கொண்டு.

“நாம அன்னிக்கு வின்னி சோப் வாங்கினமா? அதில் ஒரு போட்டி வெச்சிருந்தது. நாலஞ்சு சினிமாக்காரனை அடையாளம் கண்டுபிடிக்கறா மாதிரி சுலபமா இருந்தது. அப்புறம் நாலு வார்த்தைல ஒரு வாக்கியம் எழுதும்படி கேட்டிருந்தா. ஏதோ தோணினதை எழுதி அனுப்பிச்சேன். கிடைச்சுடுத்து!”

“நம்பவே முடியலை. நாம் ஏதாவது பணம் போடணுமா?” என்றாள்.

“அப்படியெல்லாம் இல்லை. இங்கே புறப்பட்டதிலிருந்து திரும்ப வீடு வந்து சேர்ற வரைக்கும் எல்லாம் விண்டாஸ் செலவு!”

“மன்னி, இந்த வாரம் வாரப்பலன்ல ‘வடக்கேயிருந்து தனலாபம்’னு போட்டிருந்தது. அப்படியே பலிச்சுப் போச்சுது!” என்றான் பாச்சா.

“எங்க கம்பெனி மேற்கு சார்! பாம்பே!”

“எப்படியோ கொஞ்சம் வடக்கும் இருக்கு இல்லையா?”

“என்னவோ பட்சி சொல்லித்து. கிடைச்சாலும் கிடைக்கும்னு, சாருக்குக் காபி கொடு.”

“இல்லை சார், வேண்டாம். எனக்கு செகண்ட் ப்ரைஸ் ஆசாமியைச் சந்திக்க போகணும். இதுல ஒரு கையெழுத்துப் போட்டுட்டீங்கன்னா ஒரு ஃபார்மாலிட்டிக்கு!”

அந்த இளைஞன் சென்றதும் பல பேர் சாமியைச் சூழ்ந்து கொண்டார்கள். “எப்படி சார் தோணித்து?”

“இந்த ஸ்டோர்லயே முதல் தடவையா ப்ரைஸ் விழுந்திருக்கு.”

“நாணாவுக்கு ஒரு முறை பூட்டான் லாட்டரியில கிடைச்சுதே!”

“நூறு ரூபாய்!”

எதிர் போர்ஷன் பட்டம்மாள், “என்ன பூர்ணிமா, ப்ரைஸ் கிடைச்சிருக்காமே! டில்லி போகப் போறியா?”

“இன்னும் சரியாத் தெரியலை மாமி.”

“பூர்ணிமா ஆண்ட்டி, கங்க்ராசுலேஷன்ஸ். எப்ப ட்ரீட்?”

“எனக்கு ரெண்டு மோடாவும், சப்பாத்திக் கல்லும் வாங்கிண்டு வந்துடு. காசு கொடுத்துடறேன்.”

“அதுக்கென்ன…!”

“டில்லியிலே அல்பகோராப் பழம் சீப்பு இல்லை?” என்று கேட்டார் ஆதிநாராயணன்.

“இப்ப சீசன் இல்லை” என்றான் பாச்சா.

“நம்பவே முடியலை பூர்ணிமா?”

“ஏதாவது ட்ரிக்கு இருக்கப் போறது. எல்லாமே ப்ளேனா?”

“ஆமாம்.” அந்தக் கடிதத்தைப் பிரித்தான் பாச்சா.

“அண்ணா! மன்னி! இதிலே எல்லாம் புட்டுப் புட்டு வெச்சிருக்கான்!”

‘ அன்புள்ள திரு. கிருஷ்ணசுவாமி,

லிண்டாஸ் நிறுவன சார்பில் வரவேற்புகள். நவம்பர் மாதம் நாங்கள் நடத்திய போட்டியில் நீங்கள் முதல் பரிசு பெற்றிருக்கிறீர்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துக்கள். இந்தப் பரிசுத் திட்டத்தின்படி உங்களுக்கும் உங்கள் மனைவி அல்லது நண்பர் – இருவருக்கு விமான டிக்கெட் போக வர சென்னை – டில்லி – ஆக்ரா – ஜெய்ப்பூர் – டில்லி – சென்னை தரப்படும்.

ஐடிசி நிறுவனத்தைச் சார்ந்த ஓட்டல்களில் டீலக்ஸ் அறையும் டூரிஸ்ட் பஸ்ஸுக்கான சுற்றுலாக் கட்டணங்களும் காலை உணவு, மாலை உணவு, மாலை தேநீர், இரவு உணவு அனைத்தையும் எங்கள் நிறுவனம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும்.

உங்கள் வழிச் செலவுக்காகத் தினம் தலா ரூ. 300 அளிக்கப்படும்.

உங்கள் உல்லாசப் பயணம் இனிதே ஈடேற வாழ்த்துக்கள்.

இவண்,
அருண் ஷிவதஸானி’

தொடரும்…

Advertisements

5 thoughts on “2-பரிசு – சுஜாதா

 1. R. Jagannathan March 31, 2013 at 6:36 AM Reply

  கதையை 2 பார்ட்டாகப் போடும்போது மகேஸ்வரனின் கதை முடிவை இங்கு வெளியிட்டிருக்க வேண்டாம்! இருந்தும் எழுத்தாளரின் கதை நடைக்காக காத்திருப்போம்! – ஜெ.

  • BaalHanuman March 31, 2013 at 3:55 PM Reply

   உண்மைதான் ஜெ. நீங்கள் கூறுவது 🙂

 2. vidya (@kalkirasikai) March 31, 2013 at 8:59 AM Reply

  3 வது பகுதியை அதிகம் காக்க வைக்காமல் வெளியிடும்படி வேண்டிக் கொள்கிறேன்.

  • BaalHanuman March 31, 2013 at 3:54 PM Reply

   கண்டிப்பாக வித்யா. 3-ம் பகுதி உடனே வெளி வரும் 🙂

 3. G KAILAS April 3, 2013 at 10:00 AM Reply

  சுஜாதாவால் மட்டும்தான் இது முடியும். சந்தேகமே இல்லை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s