1-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இளையராஜா பற்றி எழுதும் போது நிச்சயமாக தன்ராஜ் மாஸ்டரைப் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும்.

யார் இந்த தன்ராஜ் மாஸ்டர்?

மைசூர் மகாராஜாவின் இசைக்குழுவில் வாசித்து வந்தவர்தான் இந்த தன்ராஜ். இந்த இசைக்குழுவை வழி நடத்தியவர் ஒரு ஜெர்மானியர். அவர் தொடர்பினால் மேற்கத்திய கிளாசிகல் இசையில் ஞானம் பெற்றார் தன்ராஜ். இரண்டாம் உலகப்போர் வெடித்த போது இந்தியாவில் இருந்து வெளியேறினார் அந்த ஜெர்மானியர். (பெயர் தெரியவில்லை – யாருக்காவது தெரிந்தால் தெரியப்படுத்தவும்)

சில ஆண்டுகள் வேலையில்லாமல் தவித்த தன்ராஜ்க்கு ஜெமினி வாசன் ஆதரவளித்திருக்கிறார். சந்திரலேகாவின் இசையமைப்பிலும் இவருக்கு பங்கு இருந்திருக்கிறது. ஆனால் டைட்டிலில் இவர் பெயர் இடம்பெறவில்லை. ஜெமினி வாசன் அவர்கள் எழுதிய ஒரு தொகுப்பில் இதை வெளியிட்டிருகிறார்.

சென்னை மயிலாப்பூர் பகுதியில் லஸ் கார்னரில் உள்ளது அந்த சாய் லாட்ஜ். அறை எண் 13-ல் இருந்து வாத்திய இசை எப்போதும் கேட்டுக் கொண்டிருக்கும். கிடார் இசையும், டிரம்சுகளின் ஒலியும், பியானோவின் மெல்லிசையும் வந்தபடி இருக்கும். (சாய் லாட்ஜை பார்க்க சென்றதில் எனக்கு ஏமாற்றமே… அத்தனையும் மாறியிருக்கிறது மாறித்தானே இருக்கும்)

அன்றைய காலகட்டத்தில், திரை இசை வாத்தியக் கலைஞர்கள் பலர் சாய் லாட்ஜின் படிக்கட்டுகளை ஏறியவர்கள்தான். அந்தப் படிக்கட்டுகள்தான் அவர்களது இசை அறிவின் ஆரோகணமாக விளங்கியது. அதற்கு உத்திரவாதம் தந்தவர் அந்த அறையின் நடுநாயகமாக விளங்கிய தன்ராஜ் மாஸ்டர்.

இளையராஜா – முதல் படத்திலேயே தனித்துவம் மிக்க இசைச் சேர்ப்புகளை செய்தவர் என்ற பெருமை அடைவதற்கும், வாத்தியங்களை “அரேஞ்ச்” செய்வதில் வல்லவர் என்று பெயர் பெறுவதற்கும், எல்லா வாத்தியங்களையும் வாசிக்கத் தெரிந்த இசையமைப்பாளர் என்று பெயர் பெறுவதற்கும் இந்த தன்ராஜ் மாஸ்டரும் ஒரு முக்கிய காரணம்.

எம்.எஸ்.வி. பாடல்களின் மெட்டுக்களில் அண்ணன் பாவலர் வரதராஜன் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரப் பாடல்களை பாட, அவருக்கு பின்னணி ஆர்மோனியம் வாசித்தும், கிராமீயப்பாடல்களை வாய்விட்டுப் பாடி மகிழ்ந்தும் தன்னுடைய இசை ரசனைகளை வளர்த்துக் கொண்டிருந்த இளையராஜாவிற்கு ஒரு மேற்கத்திய இசை பரிமாணத்தை தன்ராஜ் மாஸ்டர் அளித்துக் கொண்டிருந்தார்.

இதனால் சாய் லாட்ஜ் அறை எண் 13-க்கு பீதோவனும், மோசார்டும், பாஹ்கும், மேண்டல்சனும், பிராம்சும், சைக்காவ்ஸ்கியும் அடிக்கடி வந்து போனார்கள்.

இளையராஜா எழுதிய “சங்கீதக் கனவுகள்” புத்தகத்தில் இதைப்பற்றி எழுதியிருப்பது…

“வாரத்தில் இரண்டு நாள், இரண்டு மணி நேரம் பயிற்சி பெற சேர்ந்திருந்த நான், தினமும் வருகிறேன் என்றேன். சரி வா என்றார். வருமானம் இல்லாத நிலையில் இருந்த என்னிடம் அவர் பணமே வாங்கலே. பியானோ கற்றுக்கொள்வதற்காக நான் அவரிடம் சேர்ந்தேன். இசையின் அடிப்படை நுணுக்கங்களை கற்றுத்தந்தார். எனக்கிருந்த ஆர்வத்தைக் கண்ட அவர், அதைக் கற்றுக்கொள், இதைக் கற்றுக்கொள் என்று கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் கற்றுத்தந்தார்.”

தன்ராஜ் மாஸ்டர்தான் ராசையா என்ற பெயரை ராஜா என்று மாற்றி அழைத்தவர். (பின்னாளில் ராஜா என்ற பெயரை இளையராஜா என்று மாற்றியவர் அன்னக்கிளி பட தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் அவர்கள்; ராஜா என்று ஏற்கனவே ஒரு இசையமைப்பாளர் இருந்ததால்)

தன்ராஜ் மாஸ்டரிடம் இசை பயின்று வந்த காலத்தில்தான் ஜி.கே. வெங்கடேஷ் அவர்களிடமிருந்து தன்ராஜ் மாஸ்டருக்கு ஒரு அழைப்பு வந்தது தன் இசைக்குழுவில் ஒரு பாடலுக்கு “ஆர்கன்” வாத்தியத்தை வாசிக்க. தன்ராஜ் மாஸ்டர் தனக்கு உதவியாக இளையராஜாவை அழைத்துச் சென்றார்.

(ஜி.கே.வி – எம்.எஸ்.வி அவர்களிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். ” நெஞ்சில் ஓர் ஆலயம்” படத்துடன் தனியாக பிரிந்து இசையமைப்பாளராக ஆனவர். அதிகமான கன்னடப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தவர்.)

தன்ராஜ் மாஸ்டர் ஜி.கே.வி யிடம் இளையராஜாவை அறிமுகப்படுத்திய போது தன் மாணவன் என்று மட்டுமே அறிமுகப்படுத்தாமல் மியூசிக் டைரக்டர் என்றும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதன்பின் இளையராஜாவிடம் இது பற்றி சொன்ன போது, உன்னை என் மாணவன் என்றுதான் அறிமுகப்படுத்த நினைத்தேன். ஆனால் என்னை அறியாமல் அப்படி சொல்லிவிட்டேன் என்றாராம்.

தன்ராஜ் மாஸ்டர் பற்றி இசைஞானி இளையராஜா என்ன கூறுகிறார் (பால் நிலாப் பாதை) என்று வரும் சில பதிவுகளில் பார்ப்போம்…

தொடரும்…

Raja – ராஜா வேலாயுதம்

வார இதழ் ஒன்றில் வாசகர் கேள்விக்கு, இளையராஜா இப்படி பதிலளித்துள்ளார்.

? “விருமாண்டி“”மும்பை எக்ஸ்பிரஸ்“க்கு பின் அவரும், “வள்ளி“”வீரா“வுக்குப் பின் இவரும் உங்களோடு சேரவில்லையே? அதுபற்றி எண்ணியதுண்டா ?

♫   என்னை வைத்துதான் இசையமைக்க வேண்டும் என எங்களுக்குள் எந்த ஒப்பந்தமும் கிடையாது. ஏன் அப்படி யாரிடமும் ஒப்பந்தம் போட்டது இல்லை.

அவர்கள் இந்தப் படத்திற்கு “இளையராஜா“வின் இசை சரியாக இருக்காது என்று கணித்திருக்கலாம். ஆனால் அது தவறு என்று அவர்களுக்குத் தெரியாது. காரணம், நான் எந்தப் படத்திற்கு எந்த இடத்திற்கு எந்த மாதிரி இசையமைப்பேன் என்று என்னாலேயே கணிக்க முடியாது. பிறகு எப்படி மற்றவர்களால் அதை கணிக்க முடியும்?

எனக்கு இந்த இசைதான் தெரியும் என்று யாரும் லேசில் எடை போட வேண்டாம். ஏனென்றால் எந்தக் காலத்துக்குள்ளும் என் இசை அடங்காது. என்னை வேண்டாம் என்பது அவர்கள் இஷ்டம். அதனால் நஷ்டம் அவர்களுக்கே. ஆனால் காலாகாலத்திற்கும் நின்றிருக்கும், நிலைத்திருக்கும் என் இசை.

Advertisements

3 thoughts on “1-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

  1. தன்ராஜ் மாஸ்டர் பற்றி அறிய காத்திருக்கிறேன்…

  2. சேக்காளி April 11, 2013 at 2:26 PM Reply

    விருமாண்டிக்கு பின் வந்த படம் மும்பை எக்ஸ்பிரஸ்.வள்ளிக்கு பின் வந்த படம் வீரா.கேள்வியே தப்பாயிருக்கிறதே.

    • BaalHanuman April 11, 2013 at 4:33 PM Reply

      நன்றி சேக்காளி. இப்போது சரி செய்து விட்டேன் 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s