2-ரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…


ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாட வேண்டும். மனதில் யார் உனக்கு அமைதியை ஏற்படுத்துகிறாரோ, அவரையே உன் குருவாக ஏற்றுக் கொள்!

–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

ரு நாள், ரமணாஸ்ரமத்தில் நல்ல கூட்டம். ஹால் நிரம்பி வழிந்தது.
அப்போது ஒருவர், அந்த ஊரில் உள்ள மோசமான ரௌடி ஒருவன் இறந்துவிட்ட தகவலை நண்பர்களிடம் தெரிவித்தார்.

இறந்தவன் மிகவும் கெட்டவன். பெரிய திருடன். மது அருந்திவிட்டு எதிர்ப்பட்டவர்களையெல்லாம் தாக்கும் குணம் உள்ளவன். அவனைப் பற்றி அனைவருக்குமே தெரியும் என்பதால் ஹாலில் சலசலப்பு ஏற்பட்டது.

“நல்ல வேளை போய்த் தொலைந்தான். எவ்வளவு பெரிய பாவி அவன்’’ என்றார் ஒருவர்.

‘‘கொடுங்கோலன். அப்பாவிகளை அடித்து மிரட்டுவான் அந்தக் கயவன்’’ என்றார் மற்றொருவர்.

‘‘அவன் குணக்கேடன். அடிக்கடி சிறைக்குச் செல்பவன்’’ என்று வெறுப்புடன் ஒருவர் சொன்னார்.

‘‘பக்தர்களிடம் கூட அவன் வழிப்பறி செய்வான்’’ என்றார் ஒரு பெண்மணி.

இப்படியாக ஹால் முழுக்க அவனை எல்லோரும் திட்டிக்கொண்டும், சபித்துக் கொண்டும் இருந்தார்கள்.

அத்தனை பேரும் ஒரு வழியாகப் பேசி முடிக்கும் வரை காத்திருந்தார் பகவான். அவருக்கும் அந்தத் திருடனைப் பற்றித் தெரியும் என்பதால் அவர் ஏதாவது  சொல்வாரா என்று பக்தர்கள் எதிர்பார்த்தார்கள்.

பகவான் ரமணர் வாய் திறந்து முதல் முறையாக அவனைப் பற்றிச் சில வார்த்தைகள் பேசினார்.

அவர் பேசியது என்ன?

‘‘அவன் ரொம்ப துப்புரவான மனிதன். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தடவை குளிப்பானே!’’

இவ்வளவுதான் அவர் சொன்னது. எத்தனை பெரிய வாழ்க்கைத் தத்துவத்தை பகவான் இரண்டே வரிகளில் சொல்லியிருக்கிறார் பாருங்கள்.

மற்றவர்களிடம் உள்ள குறைகளைப் பொருட்படுத்தாதீர்கள். அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை மட்டுமே கவனியுங்கள். அப்போதுதான் நீங்கள்  சந்தோஷமாக இருப்பீர்கள் என்று 100 பக்கம் எழுத வேண்டிய ஒரு விஷயத்தை பத்தே வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார் பாருங்கள். அதுதான் பகவான்.

எல்லோரிடமும் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் நாம் பார்க்கக் கற்றுக் கொண்டால் சண்டையோ, சச்சரவோ, பொறாமையோ, எரிச்சலோ நம்மை நெருங்குமா என்ன?

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!

Welcome to Arunachala Live!

Advertisements

One thought on “2-ரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…

  1. /// எல்லோரிடமும் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் நாம் பார்க்கக் கற்றுக் கொண்டால் சண்டையோ, சச்சரவோ, பொறாமையோ, எரிச்சலோ நம்மை நெருங்குமா என்ன? ///

    சில நேரங்களில் முடிவதில்லை… முயன்று கொண்டு இருக்கிறேன்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s