1-ரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…


நீ ஒருவனுக்குக் கொடுத்தால் அது உனக்கே கொடுத்துக் கொண்டதாகும். நீ பிறருக்குத் தீங்கு செய்யும்போது உனக்கே தீங்கு செய்து கொள்கிறாய். ஏனெனில் பிறர் வேறு நீ வேறல்ல.

–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

1947-ம் ஆண்டு ஆகஸ்ட்  15ம் நாள்.

திருவண்ணாமலை ஆசிரமத்தில் சுதந்திரதினக் கொண்டாட்டம் நடைபெற்றது.

அன்று பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள், பகவானை தரிசனம் செய்தார்கள்.

ரமண மகரிஷி ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அப்போது ஜன்னல் வழியே ஒரு குரங்கு எட்டிப் பார்த்தது.  அன்றுதான் பிறந்தது போல் இருந்த ஒரு குட்டியையும் அது வைத்திருந்தது. குட்டி, தாயை இறுகப் பற்றிக் கொண்டு, அச்சத்துடன் இருந்தது.

தாய்க்குரங்கு,  உள்ளே வரவேண்டும் என்று முயற்சித்தது. உள்ளே இருந்த பக்தர்கள்,அந்தக் குரங்கை விரட்டினார்கள்.குரங்கு பயந்து ஓடி அங்குமிங்கும் அலை பாய்ந்தது.

பகவான், குரங்கை விரட்டியவர்களைப் பார்த்தார். “அதை ஏன் துரத்துகிறீர்கள்? அது இங்கே என்னிடம் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறது. தன் இளம் குழந்தையை எனக்குக் காட்டுவதற்காக வருகிறது. அது தவறா என்ன? உங்களுக்குக் குழந்தை பிறந்தால் என்னிடம் காட்டுவது இல்லையா? அப்படிக் கொண்டு வரும்போது யாராவது உங்களைத் தடுத்தால் எப்படி இருக்கும்? நீங்கள் குழந்தையைக் கொண்டு வரலாம். குரங்கு கொண்டு வரக்கூடாதா? இது என்ன நியாயம்?’’ என்றார்.

பக்தர்கள் குரங்குக்கு வழிவிட, அது குஷியாக உள்ளே வந்து, தன் குட்டியை பகவானிடம் பெருமையாக, சந்தோஷமாகக் காட்டிற்று. பகவான் அதன் முதுகை ஆதுரமாகத் தடவிக் கொடுத்தார்.

அது மட்டும் அல்ல, ஆசிரம நிர்வாகிகளிடம், “சுதந்திர தினம் என்பதால் எல்லோருக்கும் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்.நம்முடைய தோழர்களாகிய குரங்குகளுக்கு விருந்து ஒன்றும் இல்லையா? அவர்களை மறந்து விடாதீர்கள். ஏனென்றால் நீங்கள் எல்லாம் இப்போது வந்தீர்கள். அந்தக் காலத்தில் இந்தக் குரங்குகள்தான் எனக்கு நண்பர்கள். அப்போது இவர்களைப் பார்த்திருக்க வேண்டும். எல்லாம் இவர்கள் ராஜ்ஜியம்தான்!’’ என்றார்.

அப்புறம் என்ன? மளமளவென குரங்குகளுக்கும் தடபுடலாக விருந்து தயார் ஆயிற்று.

நீங்களே சொல்லுங்கள்.உலகத்திலேயே சுதந்திர தினத்தன்று குரங்குகளுக்கும் விருந்து வைத்த மகான்கள் யாராவது உண்டா? பகவான் ரமண மகரிஷியைத் தவிர!

ஓம்-நமோ-பகவதே-ஸ்ரீ-ரமணாய!!

Welcome to Arunachala Live!

2 thoughts on “1-ரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…

  1. n.k.senthil nathan mks March 28, 2013 at 5:47 AM Reply

    a different man

  2. இன்று – எந்த மனிதரையும் வேறுபாடின்றி மனிதர்களாக மதித்தால் போதாதா…?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s