சுஜாதாவைச் சந்தித்த ஜெயராமன் ரகுநாதன்…


(நான்கு வருடங்களுக்கு முன் ஒரு February மாதத்தில் எழுதியது )

ஒரே-ஒரு-மாலை… மறுபடியும்..
(என்-ஆசான்-சுஜாதாவுக்கு, வந்தனத்துடன்…)

“தெறித்தது தலைவலி. மூன்று மணி நேரம் கான்ஃபரன்ஸ் காலில் சேல்ஸ் ரிவ்யு பண்ணுகிறபோதேல்லாம் இது வழக்கம்தான் எனக்கு. ஆனால் இன்றென்னவோ மனதில் ஒரு கனம். என்னவென்று சொல்லத்தெரியாத அவஸ்தை.

“ப்ரீத்தி! ஒரு காபி அனுப்பேன்” இன்டர்காமில் விளித்துவிட்டு தலையைக் கோதி விட்டுக்கொண்டேன்.

காபிக்குப்பிறகும் தலைவலி தொடரவே ஆபிசை விட்டு சட்டென்று வெளியே வந்தேன். மாலைக்காற்று இதமாக இருக்கவே , ஓடி வந்த டிரைவரை அமர்த்திவிட்டு அப்படியே வெளியே நடந்தேன். தெருவைக்கடந்து க்வீன் மாரீசை அணுகி நின்றபோது , மெரீனா சாயங்காலக்கூட்டத்துக்கு தயாராகிக்கொண்டிருந்தது. ஒன்றிரண்டு இளைஞர்கள் வேர்க்க விறுவிறுக்க ஒடிக்கொண்டிருக்க, வேக வைத்த கடலைக்காரன் வண்டியின் விளக்கை ஏற்றிக் கொண்டிருந்தான்.

அருகம்புல்-ஜூஸ்” போர்ட் காலை நேரக்கவனிப்பின்றி அனாதையாய் கிடந்தது. ட்ராபிக்கைத்தாண்டி, காந்தி சிலையைக்கடந்து நடந்தேன். மேற்கில் சூரியன் ஆரஞ்சு ரகளை நடத்திக்கொண்டிருக்க, சில பறவைகள் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தன. அப்படியே நடந்து ஆயாசத்துடன் பெஞ்சில் உட்கார்ந்தேன். காலை நீட்டி ரிலாக்சாக கடற்கரைக்காற்றை உள்வாங்கி தலையை சாய்த்தேன். கண்களை மூடிக்கொள்ள முற்பட்டபோது,

“அட காமராஜ் அவன்யு ரகுநாதனா ” என்ற பரிச்சயமான குரல். திடுக்கென்று திரும்பிப்பார்த்தால், எழுத்தாளர் சுஜாதா!

“ஒ ஹல்லோ நீங்களா? இங்கேயா..? இப்போ..? என்று இழுத்தேன்.

“யோவ்! நான் ரெகுலர்! நீதான் புதுசு ”

“அது சரி சார்! எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளா ஒண்ணுமே எழுதலையே? கற்றதும் பெற்றதும்கூட நிறுத்திட்டீங்க ?”

“கரெக்ட் ரகு! எழுதலைதான், என்ன எழுதறது?”

“என்னவா ? சார்! நீங்களா கேக்கறீங்க ? உங்களுக்கா சப்ஜெக்ட் இல்லை?’

“இல்லையா! ஒரு ஆயாசம் வந்துடுத்து. எல்லாத்தையும் எழுதியாச்சுன்னு தோணறது’ நீதான் நாப்பது வருஷமா என் எழுத்தை படிக்கிறாயே ! நீயே சொல்லு, எழுத இன்னும் என்ன இருக்கு?”

“இப்படி கேட்டா என்ன சார் சொல்றது?
“எங்களுக்கெல்லாம் இப்படியெல்லாம் சப்ஜெக்ட் இருக்குன்னு தெரிவதே உங்க எழுத்தைப் பார்த்துத்தான். ”

“நீ இன்னும் காலேஜ் தினத்தில் போலவே பேசறே!”

“அப்படி இல்லை சார்! இப்போ நீங்க மீட் பண்றவங்களைப்பத்தி எழுதலாமே? எந்திரன் படம் எப்படி உருவாச்சுன்னு எழுதலாமே?”

அப்பாவின்-ரேடியோ 
சிறுகதைகள் 
பத்து-பைசா-பதிப்பகம் 
பக்கம்-169
விலை-ரூ-110/=

https://www.nhm.in/shop/home.php?cat=1207

“இல்லை ரகு ! நான் யாரையுமே மீட் பண்றதில்லை, வெகு சிலரைத்தவிர! தேசிகனைப் பார்த்தேன் சமீபத்தில்… அவர் சிறுகதைத் தொகுப்புக்கு ஒரு முன்னுரை எழுதித் தருவதாகச் சொல்லியிருந்தேன்… அவருடைய பதிப்பகத்தின் பெயரே மிக வித்தியாசமாக இருக்கிறது!”

“நிறைய படிப்பீங்களே, அது பத்தி எழுதுங்களேன்”

“சொன்னா நம்பமாட்டே! இப்ப எங்கிட்ட புத்தகங்களே இல்லை!”

Dont tell me, sir

“நிஜந்தான்யா! படிக்கறதே இல்லை! இன்டர்நெட், கம்ப்யூட்டர் பக்கமே போகவில்லை!”

“சத்தியமா என்னால நம்பமுடியலை சார்!” ஏன் இப்படி ஒரு வன வாசம்?”

இனிமே இப்படிதான்யா! அப்பப்போ சந்திக்கறவங்களைப் பார்க்கறது , புரிஞ்சுக்க முடியறது, பிரமிப்பா இருக்கு!

“உங்க கிட்ட கேக்கணும்னு இருந்தேன்! ராவணன் படத்திற்கு மணிரத்னம் உங்களோட discuss பண்ணினாரா?”

“இல்லைய்யா!”

ஏன் சார்?”

“அவர் ட்ரை பண்ணினார், நான்தான் அகப்படலை!”

“படம் பார்த்தீங்களா?”

“இல்லை, பார்க்கவும் முடியாது !”

“அது சரி சார், என்னதான் பண்ணப்போறீங்க ?நாங்கள்லாம் ஏங்கிண்டு இருக்கோம், இன்னொரு கணேஷ் வசந்த் கதைக்காக !”

” இல்லை ரகு! இனிமே கணேஷ் வசந்த் கதை எழுதறதா இல்லை!” விட்டுப்போச்சு!”

” கருப்பு சிவப்பு வெளுப்பு நேர்ந்தபோது ஏற்பட்ட மாதிரியா சார்?”

“ச்சே ச்சே !இப்போ நினைச்சுப்பார்க்கும்போது அந்த கோபம், வருத்தம் உளைச்சல், பயம், எதுவுமே முக்கியமா படலை” அந்த phase ஒரு இறந்த காலம்!

” அதெல்லாம் சரி, இப்போ என்ன பண்ணப்போறீங்க? என்னதான் யோசிக்கிறீங்க? எப்போதான் எழுதுவீங்க?”

” கொஞ்சம் யோசிக்கிறேன்யா’ சமீபத்தில் எஸ் எஸ் வாசன், எஸ் ஏ பி அப்புறம் தி ஜானகிராமன் பார்த்து பேசிண்டு இருந்தேன். இப்பவும் அவங்களோட எண்ணமும் வீச்சும் அபாரமா இருக்குய்யா”

“என்னது?”

” ஆமாம்யா ! சரி, லேட்டாயிடுத்து! இதுக்கு மேல எனக்கு அனுமதியில்லை. மறுபடி முடிஞ்சா சந்திக்கலாம்!..ம்ஹூம்!  நான் அப்படி சொல்லக்கூடாது!வரேன்யா!”

சடுதியில் ஒரு காற்றுச்சுழலில் எழும்பி மறைந்து போனார். முற்றிலுமாக இருண்டு போயிருந்தது!

மனசு இன்னும் கனத்தது.

இந்தக் கட்டுரை நண்பர் ஜெயராமன் ரகுநாதன் முகநூலில் பகிர்ந்து கொண்டது…

Note from BalHanuman…

இந்தப் பதிவில் நண்பர் தேசிகன் பற்றி சுஜாதா குறிப்பிட்டிருப்பது மட்டும் என்னுடைய கற்பனை. நண்பர் ஜெயராமன் ரகுநாதன் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்று நம்புகிறேன்.

Advertisements

2 thoughts on “சுஜாதாவைச் சந்தித்த ஜெயராமன் ரகுநாதன்…

  1. rathnavelnatarajan March 28, 2013 at 6:25 AM Reply

    அருமையான பதிவு.
    நன்றி.

  2. R. Jagannathan March 28, 2013 at 8:40 AM Reply

    Yes, for Mr. Jayaraman Raghunathan and millions of Sujaatha fans, the writer is not dead and he has just stopped writing anything new due to tiredness and we expect as Netaji’s followers that Sujaatha will also resurrect one day. A poignant piece by the article writer. Let him know he is not alone. – R. J.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s