6-என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்… உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் – இளையராஜா


இதன் முந்தைய பகுதி…

? “உங்களை அதிகமாக inspire செய்த இசையமைப்பாளர் யார்?”

♫    “ஒருவரா.. இரண்டுபேரா? எம்.எஸ்.வி. அண்ணா, மதன்மோகன், ரோஷன்.. என்று நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். எம்.எஸ்.வி. அண்ணாவின் இசைதான் நான் கேட்டு வளர்ந்தது. ஏனென்றால் அந்த சமயம் Ceylon ரேடியோவில் அவரது பாடல்கள் தான் வரும்.

Ilayaraja sir first movie poster

? “உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது பாடல் கம்போஸ் செய்திருக்கிறீர்கள். அதைப் பற்றிக்கூற முடியுமா?”

♫    “அது பாடல் அல்ல… background score. ஒரு மலையாளப் படத்திற்கென 25 நாட்கள் தொடர்ந்து அப்படி வேலை செய்திருக்கிறேன்.”

? “How to name it? Nothing but wind..! அடுத்து என்ன..?”

♫    “நிறைய இருக்கிறது. சந்தர்ப்பம் அமையும்போது பார்க்கலாம்..! (புன்னகை)”

? “நீங்கள் உங்கள் சிறுவயதில் முதல்முதலில் ட்யூன் போட்டது எந்தப் பாடலுக்கு? அதை எங்காவது பயன்படுத்தியிருக்கிறீர்களா?”

♫    “முதன்முதலில் போட்ட ட்யூனை எங்கும் பயன்படுத்தியதில்லை. தம்பி பாட்டெழுதுவான். அதற்கு நான் ட்யூன் போட்டுப் பழகுவதுண்டு. சிறுவயதில் பாரதியார் பாடல்களுக்கு ட்யூன் போட முயற்சித்தேன். வரவில்லை. பின்னர் அதை விட்டுவிட்டேன். பாரதிராஜா நாடகங்களுக்கு நிறைய ட்யூன்கள் போட்டிருந்தேன். பின்னர் அவற்றைப் பெரும்பாலும் திரைப்பாடல்களில் உபயோகப்படுத்திவிட்டேன்.

? ‘நீங்கள் பயன்படுத்தாத இசைக்கருவிகள், இசைவடிவம் ஏதேனும் உள்ளனவா?”

♫    “நான் பயன்படுத்தி உங்களுக்குத் தெரியாத இசைக்கருவி ஒன்று இருக்கிறது. அதை உபயோகிக்காமல் இசையமைக்கவே முடியாது. அந்த உண்மையான, அற்புதமான இசைக்கருவி உங்கள் எல்லோரிடத்திலும் இருக்கிறது. அதுதான் உங்கள் மனம்”

? ரீரெக்கார்டிங் என்ற விஷயத்தைப் பற்றி யாருமே கேட்கவில்லை.  ‘பா’ படத்தின் ரீரெக்கார்டிங் மிகச் சிறப்பாய் இருக்கும்.  அதைப் பற்றிச் சொல்லுங்கள்.
♫    ’பா’ படத்தில் பின்னணி இசை மிகச்சிறப்பாக வந்தது. பால்கியும் கவுதம்மேனன் மாதிரிதான்.  இருவருமே இசையில் நல்ல taste உடையவர்கள்.  பால்கி என்னிடம் வந்து படத்தைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.  எப்படி ம்யூஸிக் வேண்டும் பால்கி? என்று கேட்டதற்கு, நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். என் மேல் எவ்வளவு நம்பிக்கை இருந்திருந்தால் 20 நிமிடத்துக்கு வசனமே இல்லாமல் Climax Scene அமைத்திருப்பார்..?  வெகு சில வசனங்களே அந்த Climaxல் வரும். பின்னணி இசை கோர்த்து முடித்ததும் வந்தார். அவருடன் சேர்ந்து அவர் மனைவியும் வந்திருந்தார்.  காட்சியை இசையுடன் பார்த்தவுடன் அவர் மனைவியின் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.  ‘பா’ என்றவுடன் அந்த Reaction’தான் எனக்கு ஞாபகத்தில் வரும்.
?  Rerecording’ன் போது எந்த இடத்தில் இசை தேவையில்லை என்பதை எப்படி முடிவு செய்கிறீர்கள்?

♫    அதுவும் அந்த நேரத்தில் தோன்றுவதுதான்.  இந்த இடத்தில் அவன் பேசிக்கொண்டிருக்கிறானே.. நாம் வேறு எதற்கு இசையை நிரப்பவேண்டும் என்று விட்டுவிடுகிறேன் (சிரிப்பு..).  உண்மையைச் சொன்னால், Silenceதான் Music.
? அதேபோல Instruments எப்படி தேர்வு செய்கிறீர்கள்? உதாரணத்திற்கு ‘நித்தம் நித்தம் நெல்லுச் சோறு’ பாடலுக்கு மிகக் குறைந்த Instruments மட்டுமே உபயோகித்திருப்பீர்கள்..??
♫    அந்தப் பாடலுக்கு அதற்கு மேல் தேவையில்லை. அவ்வளவுதான்.  ஒரு பாடலில் வாத்தியத்தின் தேவை இருக்கவேண்டும் இல்லையா?
காட்டுவழி போற பொண்ணே’ பாடலுக்குக் கூட மிகக் குறைவான Instruments’ஐயே பயன்படுத்தியிருந்தேன்.
? உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது ‘காதலின் தீபம் ஒன்று’ பாடலை எஸ்.பி.பி. அவர்களுக்கு விசிலடித்து காண்பித்துப் பாடவைத்தீர்கள் என்று ஒரு செய்தியைப் படித்தோம். அது ..??
♫    அந்த சமயம் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. பஞ்சு அண்ணன் வீட்டிற்கு வந்தார்.  ’இந்த நிலைமையில் உன்னிடம் கேட்பதற்கே கஷ்டமாக இருக்கிறது.  ஒரு Love Song வேண்டும்.. என்ன செய்வது?’ என்றார்.  அந்த சமயத்தில் என்னைப் பாடக்கூடாது என்று Doctor சொல்லியிருந்தார்.  “சரிண்ணே .. இந்த Tune’க்கு பாடல் எழுதிவிடுங்கள்’ என்று சொல்லி விசிலடித்து அதை record செய்து எஸ்.பி.பி.க்கு அனுப்பிவைத்தேன்.  (முழுப் பல்லவியையும் விசிலடித்துக் காண்பித்து இசைஞானி பிரமிப்பூட்டி முடிக்க ஏகப்பட்ட ‘Once more..’ குரல்கள்).  காலையில் சுந்தரராஜனை வீட்டுக்கு வரச்சொல்லி அங்கேயே Notes எழுதிக்கொடுத்து அனுப்பினேன்.  அப்படி Record செய்ததுதான் ‘காதலின் தீபம் ஒன்று’ பாடல்.

நிறைவடைந்தது.

4 thoughts on “6-என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்… உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் – இளையராஜா

 1. அனைத்தும் ரசிக்கும் பாடல்கள்…

  நன்றி…

  • BaalHanuman March 26, 2013 at 4:40 AM Reply

   ரசித்த உங்களுக்கு நன்றி 🙂

 2. n.k.senthil nathan mks March 26, 2013 at 4:40 AM Reply

  super O super

  • BaalHanuman March 27, 2013 at 12:14 AM Reply

   Thanks for your appreciation and encouragement 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s