5-என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்… உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் – இளையராஜா


இதன் முந்தைய பகுதி…

? இசையில் நீங்கள் நிறைய சாதித்துவிட்டீர்கள். இன்னும் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று உங்களுக்கு ஆசை இருக்கிறது?

Gautham Menon & Ilayaraja at London for Nee Thaanae En Pon Vasantham

♫ “இந்தப் பிறவியே தேவையில்லாதது என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். கெளதம் மேனன் என்னிடம் வந்து, “சார்.. இது ஒரு teenage love story. இதை நீங்கள்தான் செய்யவேண்டும்” என்று சொன்னார். நான் ஒரு படத்தை ஒப்புக்கொள்வதற்கும், ஒப்புக்கொள்ளாததற்கும் காரணமே இருக்காது. அந்த நொடியில் எனக்கு என்ன தோன்றுகிறதோ அதுதான். கெளதம் மேனன் என்னிடம் கேட்டபோதும் யோசித்தேன்.. “teenage love story என்று சொல்கிறாரே? ஏன் நம்மிடம் வந்தார்?” என்று நினைத்தேன். பிறகு, நாம் பண்ணினால் என்ன என்று தோன்றியது. ’OK கெளதம்’ என்றேன். Composing’ன்போதும், அவரிடம் இது பாட்டு.. இது இப்படித்தான் வரப்போகிறது என்று எதுவுமே சொல்லவில்லை. Composing முடிந்தபின்னர் அவர் என்னிடம் ‘சார்.. இதை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் ரெக்கார்ட் செய்யலாம்’ என்றார். ‘அவ்வளவு பட்ஜெட் இருக்கிறதா?’ என்று கேட்டேன். ‘பரவாயில்ல சார்.. எங்கு செய்யவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுகிறதோ அங்கு செய்யலாம்’ என்றார். எட்டு பாடல்களையும் ரெக்கார்ட் செய்தபிறகுதான், என்னால் அந்தமாதிரி செய்யவரும் என்பது எனக்கே தெரியவந்தது. அதுபோல .. நிறைய செய்யவேண்டும் என்று எனக்கு ஆசை இருக்கிறது. எதுவும் நம் கையில் இல்லை. திருவாசகம் செய்யவேண்டும் என்று நினைத்தது ஒரு நிமிட Thought தான். ஆனால் அதை முழுவடிவமாக்க மொத்தம் நான்கு வருடங்கள் பிடித்தது. திருவள்ளுவர் தெரிந்த குறட்பாக்களையா எழுதினார்? இப்படி எழுத வரும் என்பது எழுதும்போதுதானே அவருக்குத் தெரிந்திருக்கும்? எழுதும்போது அவருக்கே தெரியாததுதானே அது. எனவே.. செய்யவேண்டும் என்றால் எவ்வளவோ செய்யலாம். ஆனால் அதற்குரிய சூழல் அமையவேண்டும். கெளதம் மேனன் போல யாராவது அந்த தாகத்துடன் வந்தால் கண்டிப்பாய் புதிதாக நிறைய செய்யலாம்.

? என்னுடைய ஆசை, கனவு என்று சொல்லவேண்டுமென்றால், உங்களை வைத்து ஒரு ஆல்பம் செய்யவேண்டும். அதில் நீங்கள் என்னவெல்லாம் புதிதாக செய்யவேண்டுமென்று நினைத்திருக்கிறீர்களோ அதை செய்யலாம்.

♫ “(யுவனைப் பார்த்து சிரிக்கிறார்)… எனக்கு என்ன ஆசையென்றால், நீ வீட்டில் Pianoவில் F Sharp Majorல் ஒரு Piece வாசித்தாய் அல்லவா? அதற்கு ஒரு Symphony எழுதவேண்டும்.

? நீங்கள் கடவுளைப் பார்த்தால் என்ன கேள்வி கேட்பீர்கள்?

♫ “கடவுளை நான் எப்போது பார்க்கவில்லை? அவரிடம் எனக்குக் கேட்பதற்கு ஒன்றுமில்லை. அவர் எனக்கு கஷ்டத்தைக் கொடுத்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான். நமக்குள் இல்லாத கடவுள் வெளியே எங்கே இருக்கிறான்? நம் மனதுதான் கடவுள். அது காணக்கூடிய பொருளா? நமக்கு அறிவு இருக்கிறது என்று நமக்குத் தெரியும். அந்த அறிவைக் கண்ணால் காண இயலுமா? அப்படிப்பட்ட அறிவையே காண முடியாதபோது, கடவுளைக் காணவேண்டுமென்பது கமல்ஹாசன் கேட்டதுபோல இருக்கிறது (சபையில் பலத்த கரவொலி.. சிரிப்பு). ‘இவர்தான் கடவுள் என்று சொல்லுங்கள். நான் ஒப்புக்கொள்கிறேன் .. Worship செய்கிறேன்’ அப்டின்னு கமல் கூறினார். அப்படி கண்ணால் பார்த்து நம்பும் விஷயமா கடவுள்? எனக்கு என்னென்ன தேவையோ அவை அனைத்தையும் கடவுள் கொடுத்திருக்கிறார். உன்னைக் கொடுத்திருக்கிறார், கார்த்திக், பவதா, ஜெயேஷ்வர், யதீஷ்வர்… இத்தனை அன்புள்ளம் கொண்ட ரசிகர்கள்.. இவ்வளவையும் கொடுத்திருக்கிறார். இதற்கு மேல் அவரிடம் என்ன கேட்பது?

? சரி.. இது ஒரு Game. 1970கள் என்றதும் உங்கள் மனதில் தோன்றும் முதல் விஷயம் என்ன?

♫ “… … .. (யோசிக்கிறார்).. 1968ல் நான் இங்கே வந்தேன். ஜி.கே.வெங்கடேஷிடம் அஸிஸ்டென்டாக வேலை செய்ததுதான் ஞாபகத்துக்கு வருகிறது.

? சரி… கார்த்திக்ராஜா?

♫ “… … .. கார்த்திக்ராஜா, என் அண்ணன் பாவலர் என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனென்றால், ஜெயகாந்தனும் அண்ணனும் மிகவும் நெருக்கமானவர்கள். ஒருமுறை அண்ணனுடைய நினைவு நாளை ஏ.வி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடத்திக்கொண்டிருந்தோம். அங்கே ஜெயகாந்தன் பேசுவதற்கு வருகிறார். அதற்குமுன் கார்த்திக் ஜெயகாந்தனைப் பார்த்ததே கிடையாது. ஆனால் அங்கே அவருடன் மிகவும் நெருக்கமாக இருந்தான். அதேபோல அண்ணனுடன் பழகியவர்கள் அனைவருடனும் கார்த்திக் உடனே நெருக்கமாகிவிடுவான். அதனால் அண்ணன்தான் எனக்கு மகனாகப் பிறந்திருக்கிறார் என்று எனக்கு எப்போதும் தோன்றுவதுண்டு. அவனுடைய எண்ணங்களும் எப்போதும் அண்ணனைப் போலவே இருக்கும்.

 

Advertisements

One thought on “5-என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்… உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் – இளையராஜா

  1. முன்பு பெரியார் ஞாபகம் வந்தது… இப்போது கமல்… !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s