வாத்தியார் தேனீ – என்.சொக்கன்


ப்போதும் ஓய்வின்றி உழைக்கிற ஒருவரை ‘தேனீ மாதிரி சுறுசுறுப்பு’ என்று சொல்வார்கள்.தேனீக்கள் சுறுசுறுப்பானவை மட்டுமில்லை, அவற்றிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் இன்னும் ஏராளமாக உண்டு என்கிறது ஒரு சமீபத்திய புத்தகம்!

பலவிதமான தேனீக்களின் வாழ்க்கைமுறையை அலசி ஆராய்ந்து அதிலிருந்து 25 முக்கியமான பாடங்களை உறிஞ்சித் தந்திருக்கிற அந்தப் புத்தகத்தின் பெயர் ‘தி விஸ்டம் ஆஃப் பீஸ்’ (The Wisdom Of Bees). ஆசிரியர் டாக்டர் மைக்கேல் ஓ’மாலெ. பெங்குவின் வெளியீடு. விலை ரூ. 399/-

சமூக ஆய்வாளரான மைக்கேல் ஓ’மாலெ,எட்டு வருடங்களுக்கு முன்னால் பொழுதுபோக்காக தேனீ வளர்க்கத் தொடங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக அதில் ஆர்வம் அதிகரித்து மூழ்கிப்போனார்.தேனீக்கள் நமக்கு நல்ல ‘வாத்தியார்’களாகவும் இருப்பதைக் கண்டுகொண்டார். அதை இந்தப் புத்தகத்தில் இறக்கி வைத்திருக்கிறார்.

தேனீக்களை மையமாக வைத்து ஓ’மாலெ விவரிக்கும் இருபத்தைந்து வாழ்க்கைப் பாடங்களில் முக்கியமானவை இங்கே:

1. தேவையானதை மட்டும் பேசுங்கள், அநாவசியச் சுற்றி வளைத்தல் வேண்டாம்:

தேனீக்கள் தங்களுக்குள் தகவல் பரிமாறிக்கொள்ளும் ‘மொழி’ மிகவும் விநோதமானது. அதில் தேவையில்லாத குசல விசாரிப்புகளோ, வம்பு வழக்குகளோ இருக்காது.இதுதான் தகவல்,நான் அந்தப் பக்கம் போகிறேன், நீ இந்தப் பக்கம் போ, இந்த வேலையைச் செய் என்று மேட்டரைச் சொல்லிவிட்டு டாட்டா கூடக் காட்டாமல் போய்க்கொண்டே இருக்கும். இப்படி மனிதர்களும் நடந்துகொண்டால் அரட்டை குறையும், செயல்திறன் அதிகரிக்கும்.

2. தொலைநோக்குப் பார்வை அவசியம்:

ஒரு தேனீக் கூட்டம். பறந்து செல்லும் பாதையில் ஒரு பூந்தோட்டத்தைப் பார்த்தால் சட்டென்று பூந்தோட்டத்துக்குள் புகுந்துவிடாது.அது பாதுகாப்பான இடம்தானா, அல்லது வேறு ஆபத்துகள் உண்டா என்று தெரிந்துகொள்வதற்காகச் சிலரை மட்டும் உள்ளே அனுப்பி வைக்கும்.எல்லாம் ஓகே என்று தெரிந்த பிறகுதான் மொத்தமாக ‘அட்டாக்‘.

3. எதையும் அலசி ஆராய்ந்து முடிவெடுங்கள்:

ஒரு பிரச்னை என்றால் அதை ஏழெட்டுத் தேனீக்கள் நுணுக்கமாக அலசி ஆராயும்.அப்புறம் அவை எல்லாம் தங்களுக்குள் கலந்து பேசி (அட நெஜமாத்தாங்க!)அதன் பிறகுதான் ஒரு முடிவுக்கு வருகின்றன. நீங்களும் பின்பற்றிப்பாருங்கள்.

4. வேலைகளையும் அதிகாரங்களையும் பகிர்ந்து கொடுங்கள்:

ஒரு தேன் கூட்டில் ஒரே ஒரு ராணித் தேனீ தான் இருக்கிறது.மற்ற எல்லா வகைத் தேனீக்களுக்கும் அதுதான் தலைவி.ஆனாலும், ராணித்தேனீ தனது அதிகாரங்களை அடுத்தடுத்த மட்டங்களில் உள்ளவர்களுக்குப் பகிர்ந்துகொடுக்கிறது.

5. எதிலும் சமநிலை இருக்கட்டும். ஒரு விஷயத்துக்காக மற்றொன்றை இழக்காதீர்கள்:

ஒவ்வொரு தேன் கூட்டிலும்.எந்த வகைத் தேனீ எத்தனை எண்ணிக்கையில், எவ்வளவு விகிதாச்சாரத்தில் இருக்கவேண்டும் என்கிற கச்சிதமான கணக்குகூட உண்டு.இந்த எண்ணிக்கைகள் எப்போதும் பிசகிவிடாதபடி தேனீக்கள் கவனமாகப் பார்த்துக் கொள்கின்றன.

6. தொடர்ந்த முன்னேற்றம் அவசியம்:

ஒவ்வொரு தேனீயும் எப்போதும் ஒரு மாணவனாகவே இருக்கிறது. தன்னை மேலும் மேலும் மேம்படுத்திக்கொண்டு முன்னேறுகிறது.

இவை நம்மால் முடியுமா என்று சந்தேகமாக இருக்கிறதா? தேனீக் கூட்டத்தைப் பாருங்க, அதுக்குக் கத்துக் குடுத்தது யாருங்க?!.

–நன்றி குமுதம்

Rs.120N. Chokkan

நூலின் தலைப்பு : வெற்றிக்கு சில புத்தகங்கள்
நூலின் ஆசிரியர் : என். சொக்கன்
பதிப்பகம்         : மதி நிலையம் , சென்னை 86
மொத்த பக்கங்கள்: 184, விலை ரூ 120

வெற்றிக்கு சில புத்தகங்கள் (சுய முன்னேற்ற வகையைச் சேர்ந்த முப்பது ஆங்கிலப் புத்தகங்களைப் பற்றிய சிறு அறிமுகக் கட்டுரைகள், நூல் சுருக்கம், குமுதம் வார இதழில் இரண்டரை ஆண்டுகள் வெளிவந்த ‘வெற்றிக்கு ஒரு புத்தகம்’ தொடரின் முதல் பகுதி)

புத்தகம் படிக்கும் பழக்கமே குறைந்துவரும் காலகட்டம் இது. என்னதான் பயனுள்ள விஷயங்களைப் புத்தக வடிவில் தந்தாலும், ‘அதையெல்லாம் உட்கார்ந்து படிச்சுகிட்டிருக்க முடியாதுங்க. சுருக்கமா அஞ்சு நிமிஷத்துல சொல்லுங்க சார்’ என்று கேட்கிறவர்கள் ஏராளம்.


குமுதம் இதழில் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வெளியான ‘வெற்றிக்கு ஒரு புத்தகம்’ தொடர் இதனைச் சாதித்துக் காட்டியது. பல பிரமாதமான புத்தகங்களை எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு வாரமும் நான்கே பக்கங்களுக்குள் அதனைச் சுருக்கமாகவும், சுவை குறையாமலும் அறிமுகப்படுத்திய விதம், லட்சக்கணக்கான வாசகர்களை ஈர்த்தது. இதைப் படித்துவிட்டு அந்தப் புத்தகங்களைத் தேடிச் சென்று முழுப்பலன் பெற்ற வாசகர்களும் ஏராளம்

அந்தத் தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நூல் அறிமுகங்களை இங்கு தொகுத்து அளித்திருக்கிறோம். ஒரு அலமாரி முழுக்க நிரம்பக்கூடிய புத்தகங்களை ஒன்றிரண்டு மணி நேரத்துக்குள் படித்துப் புரிந்துகொள்ளக்கூடிய அபூர்வமான வாய்ப்பை இது உங்களுக்குத் தரும்!

Advertisements

2 thoughts on “வாத்தியார் தேனீ – என்.சொக்கன்

  1. தேனீ மட்டுமல்ல… எறும்பிடம் இருந்தும் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் நிறைய இருக்கின்றன…

    நல்லதொரு புத்தக அறிமுகத்திற்கு நன்றி…

  2. n.k.senthil nathan mks March 25, 2013 at 5:05 AM Reply

    matter first class

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s