4-என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்… உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் – இளையராஜா


இதன் முந்தைய பகுதி…

? எம்.எஸ்.வி. அவர்களின் பாடலில் உங்களுக்குப் பிடித்த பாடலாக ‘மலரே குறிஞ்சி மலரே’ பாடலை ஒருமுறைக் குறிப்பிட்டிருந்தீர்கள். அதே போல எம்.எஸ்.வி. அவர்களும் உங்களின் பாடல்களில் அவருக்கு மிகவும் பிடித்த பாடலாக ‘இவன்’ படத்தில் வரும் ‘அப்படிப் பாக்கிறதென்ன என் மாமா?’ என்ற பாடலைக் குறிப்பிட்டிருந்தார்.  இப்படி ஒரு பாடல் நமக்குப் பிடிப்பதற்குக் காரணம் அந்த இசையா? அல்லது அந்தப் பாடலின் வரிகளா?


♫ “இது ரொம்ப பிரச்சினையான கேள்வி. எம்.எஸ்.வி. அண்ணாவின் காலத்தில் நல்ல கவிஞர் அவருக்குக் கிடைத்தார். அவர் பாடல்களில் வாழ்வின் உயர்ந்த கருத்துகளை, கவிஞர் மிக எளிய வார்த்தைகளில் சாதாரணமாகச் சொல்லியிருப்பார். அதனால் பாடலின் அழுத்தம் சிறப்பாக இருந்தது. ஆனால் ஒரு பாடல் ஹிட் ஆவதற்கு இதுதான் காரணம் என்று உறுதியாகச் சொல்லமுடியாது. ஒரு நல்ல ட்யூன் என்பது வார்த்தையே இல்லாவிட்டாலும் உங்களுக்குப் பிடிக்கவேண்டும்.

இரண்டு பாடல்களை நான் உதாரணமாகச் சொல்லுகிறேன்.

“தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன்; ஒரு தூதுமில்லை; ஒரு தோற்றம் இல்லை; கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை” என்ற வரிகளை நீங்கள் எப்படி உணர்ச்சிமயத்துடன் கூறினாலும் அதின் உண்மையான உணர்வு புரியாது. ஆனால் அண்ணா போட்ட ட்யூனில், (‘நெஞ்சம் மறப்பதில்லை’ பாடலை பாடிக்காட்டுகிறார்) அது வெளிப்பட்டது. நல்ல ட்யூன் இல்லையென்றால் அந்த உணர்வு சரியாக வந்திருக்காது.

“அ.ஆ.. இ.ஈ.. உ.ஊ..எ.ஏ…” (ஏதோ மோகம்; ஏதோ தாகம்” பாடலை ‘அ..ஆ..’ போட்டுப் பாடிக்காண்பிக்கிறார்). இது நன்றாக இருக்கிறதா இல்லையா? இப்படி ‘அ.ஆ… என்று போட்டு பாடினாலும் ஒரு ட்யூன் நன்றாக இருக்கவேண்டும். எதைப் போட்டுப் பாடினாலும் நன்றாக இருக்கவேண்டும். யார் பாடினாலும் நன்றாக இருக்கவேண்டும்”.

? இந்த தலைமுறைக்குப் பின்னர் நல்ல இசைக்கலைஞர்கள் இல்லை. இன்னும் பத்து வருடங்கள் கழித்து Strings Section என்ற ஒன்றே இல்லாமல் போய்விடுமோ என்பது போல இப்போது வருபவர்கள் எல்லோரும் கீபோர்டு வைத்துத்தான் பாடல்கள் போடுகிறார்கள். வரும்காலத்தில் Live Instruments வேண்டுமென்றால் நாம் abroad போய்தான் record செய்யவேண்டும் என்கிற ஒரு சூழல் வரும். இதை எப்படி சரிசெய்வது?

♫ “இது சிந்திக்கவேண்டிய விஷயம். இதில் நான் Personalஆக ஏதேனும் செய்யவேண்டுமென்றால், நான் ஒரு இசைக்கல்லூரியோ, பல்கலைக்கழகமோ துவக்கலாம். அப்படி ஒரு எண்ணமும் எனக்கு இருக்கிறது. நாம் அங்கே போய் ரெக்கார்ட் செய்வதுபோல அவர்கள் இங்கே வந்து ரெக்கார்ட் செய்துவிட்டுப் போகும் காலம் வரவேண்டும். உலகத்திலேயே மிகவும் அதிகம் திறமை கொண்ட, Energy, Purity, Focus கொண்ட நாடு இந்த நாடு. ஆனால் பெரும்பாலான நேரங்களில் இந்த Focus தவறிவிடுகிறது. எனவேதான் என்னிடமிருக்கும் இசைக்கலைஞர்களை, ‘சிறப்பாக இசைப்பதில் இவர்கள்தான் கடைசித் தலைமுறை’ என்ற எண்ணத்துடன் நான் கடுமையாக வேலைவாங்குகிறேன். இங்கே வயலின் வாசிக்கும் பிரபாகர், என்னுடைய நாடகங்களுக்கு ஐம்பது பைசாவுக்கு வயலின் வாசித்திருக்கிறார். பிரபாகர்…! இங்கே வா.. ! இன்று இருக்கும் இசைக்கலைஞர்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியாத விஷயங்களை நீ சொல்லு..!

சிரித்துக்கொண்டே.. வயலினிஸ்ட் திரு. பிரபாகர் எழுந்து வந்து மைக் பிடித்தார். இசைஞானிக்கும் அவருக்கும் இடையே உரையாடல் தொடர்கிறது.

♫ ‘பிரபாகர்.. நீ சொல்லு.. இந்தியாவில் மிகச் சிறந்த வயலின் இசைக்கலைஞர்கள் என்று எத்தனை பேர் இருப்பார்கள்’?

‘நல்ல கலைஞர்கள் ஒரு 600 பேர் இருப்பார்கள் என்று சொல்லலாம்’

♫ “சரி.. இந்த 600 பேரில் மிகச்சிறப்பாய் வாசிப்பவர்கள் என்று எத்தனைபேரைச் சொல்லலாம்”?

‘ஒரு 20 முதல் 25 வரை இருப்பார்கள்”

♫ ‘இந்த 25 பேரில் நான் கொடுக்கும் Notations’ஐ வாசிக்கக் கூடிய கலைஞர்கள் எத்தனைபேர் இருப்பார்கள்?”

‘வெளியிடங்களில் வாசிப்பது என்பது வேறு. ஆனால் சார்’கிட்ட வாசிப்பது என்பது முற்றிலும் வேறு விஷயம். ஒரு சின்னத் தவறு இருந்தாலும் கண்டுபிடித்துவிடுவார்.” (சிரிக்கிறார்).

♫ “இந்த ஒரு சில இசைக்கலைஞர்களைத் தவிர மிகச் சிறப்பாய் வாசிப்பதற்கு அடுத்த தலைமுறையில் ஆளில்லை. இதை எப்படி சரி செய்வது? இசை என்பது ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாயப் பாடமாக்கப்படவேண்டும். அப்போதுதான், ‘இசை படித்தால் வேலை கிடைக்கும்’ என்ற நம்பிக்கையிலாவது ஒருவன் Instrumentஐக் கையில் எடுப்பான். இசையில் மட்டும்தான் பாலிடிக்ஸ் கிடையாது. இசையில் மட்டும்தான் ஜாதி மதம் கிடையாது.”

நான் யாரையும் குறை சொல்லவில்லை. ஆனால் இப்போது இருப்பவர்களில், இசைக்கலைஞர்களை வேலைவாங்குவதற்கு இவரை விட்டால் வேறு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இந்த Generationல் எல்லோரும் Keyboard, Guitar, Drums என்றுதான் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். வயலின் கற்க விரும்புபவர்கள் மிகவும் குறைவு.

♫ “ஆர்மோனியம் என்று ஒரு கருவி இருக்கிறது. இதில் யார் கைவைத்தாலும் சப்தம் வரும்..! இதேபோலத்தான் Keyboard’லும் கைவைத்து ஏதோ செய்துவிட்டுப் போய்விடலாம். ஆனால் வயலின் என்ற ஒரு கருவியை சரியாகப் பிடிப்பதற்கே, அந்த Bow movement சரியாய் வருவதற்கே ஆறு மாதங்கள் ஆகும். நான் வயலின் teach பண்ணியிருக்கிறேன். விரலின் Position கொஞ்சம் தவறினாலும் அபஸ்வரம் வந்துவிடும். அவ்வளவு கஷ்டமான வாத்தியம். இப்படி ஒரு வாத்தியத்தை யார் கையில் எடுப்பார்கள்? இதை எடுத்தால் உடனே பணம் வருமா? இசை படிப்பவர்களுக்கு உடனே பணம் வேண்டும் என்கிற ஆசை இருக்கக்கூடாது.”

தொடரும்…

Advertisements

3 thoughts on “4-என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்… உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் – இளையராஜா

 1. ரசிக்க வைக்கும் பாடல்கள்…

  எத்தனை விளக்கங்கள்…!

  நன்றி…

 2. இளையராஜா மாதம் போல. இளையராஜாவின் தொடர்ச்சியான பேட்டிகளை படிக்கும் போது அவருக்கு இசை மேல் இருக்கும் பக்தி புரிகின்றது. அவர் இசையை கடவுளுக்கு இணையாக கருதுகின்றார். அப்படிபட்ட கடவுளை அவர் எளிதாக கைக் கொண்டுவிட்டார். அவருக்கு கைவந்த ஒரு விஷயத்தை சாதரணமாகவும் அதே சமயம் மிக உயர்வாகவும் பேசுகின்றார். அது மற்றவர்களுக்கு அகந்தையாக உள்ளது.

  கையெழுத்து கூட ஒழுங்காக போட முடியாதவனுக்கு ஒரு ஓவியன், என்னப்பா பெரிய ஓவியம், கை வச்சா தானா வருது என்றால் கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருக்கும். அதோடு ஓவியம் என்பது பெரிய கலை என்றால் இன்னும் கோபம்தான் வரும். அதுதான் இவருக்கு நடக்கின்றது.

  இதைப் படித்துவிட்டு மற்ற பதில்களை படித்தால் அது அகந்தையாக தெரியாது, ஒரு கலைக் கர்வம். இது கூட இல்லாமலிருக்க அவர் என்ன கடவுளா, அவரும் மனிதர்தானே. அவரை சும்மா ஞானி என்று பில்டப் கொடுத்தவர்களால் வந்த வினை.

  அவரை தூற்றுபவர்கள் ஏற்றி பிடிப்பது ரகுமானை. சிரிப்புதான் வருகின்றது. ரகுமான் இசை பெரும்பாலும் காதுகளுடன் நின்று விடுகின்றது. ஒன்றிரண்டு பாடல்கள் மட்டும் உள்ளே செல்கின்றது. ராஜாவின் இசையில் முக்கால்வாசி பாடல்கள் உள்ளே சென்றுவிடுகின்றது. சில குப்பை பாடல்களும் இருக்கின்றது. தொந்தரவு தாளாமல் ஒழிந்து போ என்று ஏதாவது கைக்கு வந்ததை கொடுத்துவிடுவார் போல. உளியின் ஓசை 🙂

  இதனால் வந்த வினை இரவு முழுவது ராஜாவின் பாடல்களாக ஓடுகின்றது.

  • BaalHanuman March 26, 2013 at 4:39 AM Reply

   அருமையாகக் கூறியிருக்கிறீர்கள் ரெங்கசுப்ரமணி 🙂 நன்றி…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s