3-என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்… உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் – இளையராஜா


இதன் முந்தைய பகுதி…

? ‘ஏதோ மோகம்‘ பாடல் பற்றி…

இந்த ‘ஏதோ மோகம்’ பாடல் உங்களுக்கு எதனால் பிடித்ததென்றால், அதில் ஸட்ஜமமே காட்டியிருக்கமாட்டேன்.

(ஆர்மோனியத்தில் சுருதி பிடித்து தாரா.. தாரா.. துவக்குகிறார் இசைஞானி)

”ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேற்று வரை நெனக்கலையே
ஆசை விதை முளைக்கலையே
சேதி என்ன.. வனக்கிளியே”.. அங்கேதான் ஸட்ஜமமே வருகிறது. இது யாருக்கும் தெரியாது.

லதாங்கி’ என்னும் ராகத்தில் லதாங்கியே தெரியாமல் ‘யார் தூரிகை தந்த ஓவியம்?’ (பாடுகிறார்) பாடல் போட்டிருக்கிறேன்.

? ‘சங்கத்தில் பாடாத கவிதை’ பாடல் பற்றி…

♫ அந்தப் பாடலும் அப்படியே நடந்ததுதான்…! ஆர்மோனியத்தில் கை வைத்ததில் இருந்து நிற்கவே இல்லை. At a stretch’ல் அப்படியே பாடிவிட்டேன். அதேபோல திருவாசகத்திலும், ”பூவார் சென்னிமன்னன்” பாடலை முதல்முறையாக வாசித்தேன். வாசிக்கும்போதே அதை உரைநடை போலல்லாமல் ‘tune’ஆகத்தான் வாசித்தேன்.

? நீங்கள் வெகு நாட்களாக வாசித்துக்கொண்டிருந்த பழைய Guitar உங்கள் பின்னால் இருக்கிறது. அந்த guitar’க்கு, நீங்கள் அதை வாசிக்கவேண்டும் என்று நிறைய ஆசை…

♫ “ஒரு நாளைக்கு மணிக்கணக்கில் ப்ராக்டிஸ் பண்ணிக்கொண்டிருந்த நாட்கள் எல்லாம் போய்விட்டது. இசையமைக்கத் துவங்கியபின்னரும் திரு. டி.வி.ஜி. அவர்களிடம் இசை கற்றுக்கொண்டேன். அதிகாலை நான்கு மணிக்கு எனக்காகத் தயாராய் இருப்பார். அதன்பின்னர் ஸ்டுடியோ வந்து ரெக்கார்டிங் முடித்து மறுபடியும் இரவு பத்து மணிக்குச் செல்வேன். எனக்காகக் காத்திருப்பார். இரவு 12 மணி வரை சொல்லித் தருவார். இது ‘இளையராஜா’ என்ற ஒரு இசையமைப்பாளர் உலகத்திற்கு தெரியவந்ததற்குப் பின் நடந்த விஷயங்கள். இந்தப் பயிற்சி பல வருடங்கள் தொடர்ந்தது. அப்போதும் என்னுடைய Guitar Practice நிற்கவே இல்லை.

இங்கே இருக்கும் கிட்டாரிஸ்ட் சதா’வும் நானும் தன்ராஜ் மாஸ்டரிடம் ஒன்றாக கிட்டார் கற்றுக்கொண்டோம். அந்த சமயத்தில் கிட்டார் பாடல்களை கிட்டாரிலேயே நான் கம்போஸ் செய்வது வழக்கம். இப்போது கிட்டார் வாசித்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன.

கவுதம் மேனன் என்னிடம் வந்து ‘சார்.. ‘சாய்ந்து சாய்ந்து’ பாடலுக்கு நீங்கள் கிட்டார் வாசித்து அதை நான் ரெக்கார்ட் பண்ணப் போகிறேன்” என்றார். ‘ஐயோ.. கிட்டார் டச்’சிலேயே இல்லையே..? நான் எப்படி வாசிப்பேன்?’ என்று சொல்லி, எடுத்து வாசித்துப் பார்க்கிறேன். வரவில்லை..!”

? இசையமைப்பாளர் சலீல் சௌத்ரியிடம் நீங்கள் கிட்டார் வாசித்திருக்கிறீர்கள். அவர் ஒருமுறை, ‘இளையராஜா பிற்காலத்தில் மிகப்பெரிய இசையமைப்பாளர் ஆவார்’ என்று அப்போதே கணித்துக் கூறினாராம். அவருடன் நீங்கள் இணைந்து பணியாற்றிய அந்த அனுபவத்தைப் பற்றி…


♫ “சலீல் சௌத்ரி எனக்கு மிகவும் பிடித்த இசைமைப்பாளர்களுள் ஒருவர். அவர் ‘ஆனந்த்’ என்ற இந்திப் படத்தில் ஒரு பாடல் போட்டிருந்தார். அது எனக்கு மிகவும் பிடித்த பாடல். பாலுமகேந்திரா சாரின் படத்திற்கென ஒருமுறை பாம்க்ரோவ் ஹோட்டலில் கம்போஸிங்கில் இருந்தோம். நான் தினமும் கிட்டார் எடுத்துக்கொண்டு கம்போஸிங்கிற்குச் செல்வேன். ‘NaaJeeyaa..” என்ற அந்தப் பாடலின் Tuneஐ “அழியாத கோலங்கள்” என்ற படத்திற்கென பாலுமகேந்திரா ஓ.கே. செய்துவிட்டிருந்தார் (‘நான் என்னும் பொழுது’). அப்போது நாங்கள் Musicians எல்லோரும் அமர்ந்து “பிரமாதமாக ட்யூன் போட்டிருக்கிறார்’ என்று பேசிக்கொண்டிருந்தபோது, எங்களுடன் இருந்த ஒரு இசைக்கலைஞர், ‘இந்தப் பாடலை போடுவதற்கு மூன்று மாதங்கள் ஆயினவா?’ என்று விளையாட்டாகக் கேட்டார். அதற்கு நான் அவர் போட்டுக்கொடுத்த எத்தனையோ பாடல்களுள், இந்தப் பாடல்தான் வேண்டும் என்று தேர்ந்தெடுக்கத்தான் மூன்று மாதங்கள் ஆயின’ என்று கூறினேன். அது இச்சமயத்தில் என் நினைவுக்கு வருகிறது.

அவர் எப்போது சென்னை வந்தாலும் என்னுடைய ரெக்கார்டிங்கைப் பார்க்க வருவார். ப்ரியா படத்தின் ரெக்கார்டிங்கின்போதும் வந்தார். அவர் வந்து என்னிடம் கற்றுக்கொள்வதற்கு எதுவும் இல்லை. அவர் வந்ததே அவர் எனக்கு செய்த ஆசீர்வாதமாகத்தான் நான் பார்க்கிறேன். அவர் என் மேல் வைத்திருந்த அன்பிற்காகவும், சக Composer என்றவகையில் அவர் என்மீது காட்டிய மரியாதைக்காகவும், அவருக்கு என்றும் நன்றியுடையவனாக இருக்கிறேன்.

? உங்கள் முந்தைய படங்களின் பின்னணி இசையை (background score) மட்டுமே வைத்து ஒரு Concert’ஐ நீங்கள் செய்யமுடியுமா?

♫ “கண்டிப்பாகக் கொடுக்கலாம்.”

Advertisements

One thought on “3-என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்… உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் – இளையராஜா

  1. ராஜா ராஜா தான்…

    நன்றி…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s