2-என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்… உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் – இளையராஜா


இதன் முந்தைய பகுதி…

?  ’Spirituality சரி.. இந்த Love..? அது எப்படி உங்கள் பாடல்களில் அந்த Feel வருகிறது’?

♫         ”சப்தஸ்வரங்களை நான் நேசிக்கவில்லையென்றால் அவை என்னை நேசிக்குமா? ஒவ்வொரு ஸ்வரமும் என்னுடைய ஸ்வரம்தான்.  எனக்குச் சொந்தமானதுதான்.  எனக்குச் சொந்தமானது என்றால் அது உங்களுக்குச் சொந்தமானது.  ஒருமுறை ஒரு பாடல் நான் போட்டுட்டேன்னா அது என்னுடையது அல்ல. ‘சார்.. அந்தப் பாட்டு நல்லாயிருக்குது’ என்று யாராவது சொன்னால், ‘சரி.. சரி’ என்று சொல்லிவிட்டு கடந்துபோய்விடுவேன்”.
? ”சரி Love ஓ.கே..! யாராவது டைரக்டர் வந்து ’கோபம் வருவதுபோல ஒரு பாட்டு போட்டு தாருங்கள்’ என்று கேட்டால் ..??”
♫         ”மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்” பாடலை ‘தரரா.. தரரா..’ போட்டுப் பாடிய இசைஞானி, ‘கோபம் வரவில்லையா?’ என்று சிரித்தபடி… ‘ம்யூஸிக்கிற்கும் கோபத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? என்று புன்னகைத்தார்.
? உங்களுக்கு இதுவரையில் மிகவும் Challenging’ஆக இருந்து இசையமைத்த பாடல் எது?

♫         எனக்கு ஒவ்வொரு பாடலும் Challenge’தான்.  ஏனென்றால் டைரக்டர் எதிர்பார்த்து வருவதை விட சிறப்பாகக் கொடுக்கவேண்டும்.  அது எனக்குப் பிடிக்கவேண்டும்.  உங்களுக்குப் பிடிக்கவேண்டும்.  நீங்கள் கேட்டதினால் எனக்கு இந்த Spot’ல் ஒரு விஷயம் தோன்றியது.  ஆரோகணத்தில் பாடல் போடலாம். அவ்ரோகணத்திலும் போடலாம்.  ஆனால் எந்த Connection’ம் இல்லாமல் Static’ஆக இருக்கும் நான்கு Notes’ஐ வைத்தும் ஒரு பாடல் போடலாம் (தனித்தனி Keys’ஆக ஆர்மோனியத்தில் இசைத்து விளக்கினார் இசைஞானி).
? ‘என் இனிய பொன் நிலாவே’ பாடல் பற்றி…
♫         ”மூடுபனி படத்திற்கென பாலுமகேந்திரா சார் ஊட்டியில் ஷூட் பண்ணிக்கொண்டிருந்தார்.  அவர் சொன்ன Situation’க்கு நான் முதலில் போட்ட Tuneஇளைய நிலா பொழிகிறதேtune’தான். அதை அவர் Select செய்யவில்லை.  ‘ராஜா.. இன்னொண்ணு பார்த்துடலாமே?’ என்றார்.  அதன்பின்னர்தான் ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலின் tune உருப்பெற்றது.  இந்தப் பாடலில் முக்கியமான விஷயம்.. பாடலின் தாளம் ‘என் இனிய பொன் நிலாவே’.. 1..2..3.. 1.2..3.. என்று மூன்று மூன்றாகப் போகும்.  சரணத்திலும் ‘பன்னீரைத் தூவும் மழை..’ என்று தாலாட்டுப் போல Waltz’ல் மூன்று மூன்றாகப் போய்க்கொண்டிருக்கும்.  ஆனால் உள்ளே சந்தங்கள் ‘இரண்டு இரண்டாக’ பின்னப்பட்டிருக்கும்.  அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன இந்தப் பாடலில்.
?  ‘அம்மா என்றழைக்காத’ பாடல் உருவானது… …?

♫         பி.வாசு. என்னிடம், அம்மாவுக்கு ரஜினி சேவை செய்கிறார். அதற்கு ‘ஜனனி ஜனனி’ போல ஒரு பாடல் வேண்டும் என்று கேட்டார்.  ஒரு பாட்டு மாதிரி இன்னொன்று வேண்டும் என்று கேட்டாலே எனக்குப் பிடிக்காது.  ஆனால் கேட்கும்போது கொடுக்காமல் போனால் அது சரியில்லை என்பதால் ’ஜனனி ஜனனி’ சாயலிலேயே ‘அம்மா என்றழைக்காத’ பாடலை உருவாக்கிக்கொடுத்தேன்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s