1-என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்… உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் – இளையராஜா


? ஜனனி ஜனனி பாடல் உருவான விதம் பற்றி…

♫         டைரக்டர் கே. ஷங்கர் என்னிடம் ”தாய் மூகாம்பிகை” படத்திற்கென ஒரு சிச்சுவேஷன் சொல்லியிருந்தார்.  அந்த சமயங்களில் இரவு இரண்டு மணிவரை எனக்கு கம்போஸிங் இருக்கும்.  மீண்டும் காலையில் ரெக்கார்டிங் இருக்கும்.  இவர்களுக்கு கம்போஸிங்கிற்காக எனக்கு நேரம் ஒதுக்க இயலாமல் இருந்தது. அந்த சமயத்தில் நான் ‘நார்த் உஸ்மான் ரோட்டில்’ ஒரு வாடகை வீட்டில் இருந்தேன்.

அடுத்த நாள் பூஜை..!  பாட்டு இன்னும் தயாராகவில்லையே என்று டைரக்டர் பதறத் துவங்கிவிட்டிருந்தார்.  நான் அவரிடம் ‘பதறத் தேவையில்லை.  இரவு வீட்டிற்கு வாருங்கள்.. அங்கேயே கம்போஸிங் வைத்துக்கொள்ளலாம்’ என்று கூறினேன்.
‘ஆதிசங்கரர் மூகாம்பிகையை பிரதிஷ்டை செய்கிறார்.  அவர் தியானத்தில் சர்வ சக்திகளும் ஐக்கியமாக அவருக்குக் காட்சியளிப்பதைப் போன்ற’ காட்சி என்று எனக்கு முதலிலேயே சிச்சுவேஷனைச் சொல்லியிருந்தனர்.  இரவு அனைவரும் வந்துவிட்டனர்.  நான் குளித்துவிட்டு, பூஜை அறையைக் கடந்தபோது ஆதிசங்கரரின் படம் என் கண்களில் பட்டது.  நான் நின்று, ”குருவே..! நீங்க என் பாட்டுல வர்றீங்க..” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். என் பக்தி அவ்வளவுதான்.
உள்ளே சென்றால் வாலி சார், டைரக்டர், தபலா கன்னையா அண்ணன், என அனைவரும் வந்தமர்ந்திருந்தனர்.  மீண்டும் சிச்சுவேஷனைச் சொன்னார்கள்.  வாலி சாரும் கேட்டுக்கொண்டார். கேட்டவுடன் கம்போஸிங் துவக்கினேன்.  முழுவதும் முடித்துவிட்டேன்.  டைரக்டருக்கும் பிடித்துவிட்டது.  வாலி பாடலை எழுதத் துவங்கிவிட்டிருந்தார். பல்லவி எழுதி முடித்தார். அனைவரும் காபி சாப்பிடக் கலைந்தனர்.  நானும் எழுந்தேன். வெளியே வந்து யோசித்தால், ”ஆதிசங்கரர் யார்..? எல்லாவற்றையும் துறந்தவர் அல்லவா? அந்தத் துறவறம் இந்தப் பாடலில் தெரிகிறதா? எல்லாவற்றையும் விட்டுவிட்டுப்போன அந்த Detachment தெரிகிறதா? Tune சரியாக இருக்கிறது.  ஒரு ராகத்தில் சிறப்பாய் இருக்கிறது. ஆனால் இந்தப் பாடல் ஆதி சங்கரர் பாடுவது போலவே இல்லையே..? ஒரு சங்கீத வித்வான் பாடுவதுபோலல்லவா இருக்கிறது. திருப்தியாக இல்லையே..!” என்று எனக்குத் தோன்றியது.
நான் மறுபடியும் சென்று, ‘சார்.. ஓ.கே. பண்ணிட்டீங்க.  ஆனால் நான் வேறொன்று செய்து தருகிறேன்’ என்றேன்.  அதற்குள் பாடகர் யேசுதாஸை பாடலைப் பாடவைப்பதற்காக யோசித்துக்கொண்டிருந்தனர்.  மறுபடியும் உட்கார்ந்தோம்.  உட்கார்ந்து துவக்கினால்… ’தரரா.. தரரா… (ஜனனி ஜனனி பாடலின் மெட்டைப் பாடிக்காட்டுகிறார்) என்று முடித்தேன்.  வாலி சார், ‘ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ; ஜகத்தாரணி நீ பரிபூரணி நீ” என்று எழுதினார்.
பாடலை முழுவதும் பாடி முடித்தால், கதாசிரியர், அஸிஸ்டண்ட் டைரக்டர்ஸ் அனைவரின் கண்களும் கலங்கியிருந்தன.  ‘பாடல் ரொம்பப் பிரமாதமாக வந்திருக்கிறது சார்..!’ என்றார்கள். அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.
கம்போஸிங் முடிந்து .. அனைவரும் கலைந்து சென்றனர்.  நான் எழுந்தேன்.  ‘குருவே.. என் Tune’ல் நீங்கள் வந்தீர்கள் என்று எப்படி நான் அறிந்துகொள்வது.?’ என்று மனதுக்குள் நினைத்தேன்.  அப்போது அங்கு ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியின் காற்றில் மிதந்துவந்த காகிதம் ஒன்று என் கையில் அமர்ந்தது.  அதை விரித்தால், ‘பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்..’ என்று இருந்தது.  பாடத்துவங்கினேன்.
‘பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்..
பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்..’
(’ஜனனி ஜனனி’யின் மெட்டில் பாடுகிறார்..)
’ஜனனி ஜனனி’ பாடல்.. ‘பஜகோவிந்தம்’ Meter‘ல் அமைந்திருந்தது. ‘அடடே.. குருவே…!! இப்படித்தான் என் பாடலில் வந்தீர்களா..?’ என்று எனக்குச் சொல்லமுடியாத சந்தோஷம்.
அடுத்த நாள் ரெக்கார்டிங்.  யேசுதாஸ் ஊரில் இல்லை. டைரக்டர், ’யேசுதாஸ் பாடினால்தான் நன்றாக இருக்கும்’ என்று கூறினார்.  நான் டைரக்டரிடம், ‘நான் பாடுகிறேன்.  ரெக்கார்டிங் செய்துவிடுவோம். அதன்பின்னர் யேசுதாஸ் வந்தவுடன் அவரைப் பாடவைத்து மிக்ஸ் செய்துகொள்ளலாம்’ என்று கூறினேன்.  அந்த இடத்தில் வேறு வழியில்லாததால் நானே பாடிவிட்டேன்.
? கடந்த 35 வருடங்களாக புதுவருடம் என்றாலே ‘Hai Everybody.. wish you a happy new year..’ என்ற பாடல்தான் கேட்கிறது.  ஒவ்வொருமுறை கேட்கும்போதும் ‘Happy New Ear’ என்று சொல்லலாம் என்பதுபோல காதே புதிதாகிறது.  இந்தப் பாடலுக்கு Replacement நீங்களே கொடுத்தால்தான் உண்டு.  Replacement உண்டா.? அல்லது இதே பாடல்தான் தொடருமா.?

♫         ”அது அந்த நேரத்தில் வந்தது.  அதற்குப் பின்னர் அது போல வேண்டும் என்று யாரும் கேட்டு வரவில்லை. அப்படி யாரும் வந்தால் புதிய பாடல் வரும்..!” (சிரிப்பு..).
?  உங்கள் பாடல்களின் Originality உங்களுக்கே தெரியும்.  உங்கள் பாடலின் சாயலில் வேறு ஒருவர் பாடலைப் போட்டால் அதற்கு உங்களது Immediate reaction பெருமையா? அல்லது கோபமா?

♫         நீங்கள் மேடையில் பேசுகிறீர்கள். பெர்னாட்ஷாவைக் Quote செய்கிறீர்கள்.  அதை பெர்னாட்ஷா கேட்டால் கோபப்படுவாரா? ஜெயகாந்தன் ‘புதிய வார்ப்புகள்’ என்று தனது கதை ஒன்றுக்குத் தலைப்பிட்டிருந்தார்.  பாரதிராஜா அதே தலைப்பை ஒரு படத்திற்கு வைத்தார்.  அப்போது ஜெயகாந்தனிடம் வந்து ஒருவர் ’அதெப்படி உங்கள் தலைப்பை அவர் வைக்கலாம்?  இதை நீங்கள் தட்டிக் கேட்கவேண்டும்…!’ என்று கூற பதிலுக்கு ஜெயகாந்தன், ‘இல்லாதவன் எடுத்துக்கொள்ளுகிறான்’ என்று சொல்லி விட்டு விட்டார்.
ஜெயகாந்தன் எனக்கு குரு ஸ்தானத்தில் இருப்பவர்.  எங்களுக்கு அவர் ஒரு ஹீரோ.  சென்னை வந்த புதிதில் நான், பாரதிராஜா, மற்றும் பாஸ்கர் மூவரும் அவரை சென்று பார்த்து, ‘உங்களை நம்பித்தான் வந்திருக்கிறோம்’ என்று பேச்சுவாக்கில் சொல்லிவிட்டோம்.  உடனே கடும்கோபமடைந்த அவர், ‘என் அனுமதியில்லாமல் என்னை நம்பி நீங்கள் எப்படி வரலாம்? நீங்கள் உங்களை நம்பியல்லவா வந்திருக்கவேண்டும்?’ என்றார்.  வந்த சுவடே தெரியாமல் நாங்கள் மூவரும் வெளியே வந்து பயங்கரமாய் சிரித்தோம். ‘என்ன இவர்.? ஒரு பேச்சுக்காக கூட ‘சரி பார்க்கலாம்’ என்று சொல்லவில்லையே?’ என்று மூவரும் பேசிக்கொண்டோம்.  பின்னர் யோசித்துப் பார்த்தால் அவர் கூறியது சரி .. அவர் ‘ஜெயகாந்தன்’… நமக்கு அறிவுரைதானே சொல்லியிருக்கிறார் என்று எனக்குத் தோன்றியது.
? உங்களிடம் இயக்குனர்கள் வந்து, ‘இன்று மாலைக்குள் ஒரு ட்யூன் வேண்டும்’ என்று கேட்பது Pressure’ஆ இல்லையா?

♫         ”எதுவுமே Pressure கிடையாது.  இசை என்பது Pressure’ஆ? இன்று ஆறு பாட்டு ரெக்கார்ட் பண்ணித் தாருங்கள் என்று கேட்டால் ஆறு பாடல்கள் செய்து தருவேன்”.
?  ’வளையோசை கலகலகலவென’ பாடலை எப்படி யோசித்து இசைத்தீர்கள்? அந்தப் பாடல் ஒரு Flash’ல் வந்ததா? எப்படி வந்தது?

♫         ”அது ‘How to Name itAlbum’க்காக Hariprasad Chaurasia வாசிப்பதற்காக நான் எழுதிய tune.  அந்த சமயம் ரெக்கார்டிங் வந்த கமல்ஹாசன், ‘புதுசா என்ன போட்டிருக்கீங்க?’ என்று கேட்டார். நான் அவரிடம், ‘ஒரு புது ட்யூன் போட்டேன்.. Hariprasad Chaurasia’வுக்காக.. ஆனால் அதை ரெக்கார்ட் செய்யாமல் விட்டுவிட்டேன்’ என்று கூறினேன். ‘என்ன ட்யூன்?’ என்றார்.  நான் வாசித்துக்காட்டினேன். ‘ரொம்ப நல்லாயிருக்கே.. இதை நம்ம படத்துல போட்டுடுவோம். இதை அப்படியே பாட்டாக்கிவிடுங்கள்’ என்று கூறி வாங்கிக்கொண்டார்.”
Advertisements

2 thoughts on “1-என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்… உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் – இளையராஜா

  1. ஆகா… எல்லாமே மிகவும் விரும்பி கேட்கும் பாடல்கள்…

    நன்றி…

  2. ILAMURUGAN March 24, 2013 at 5:42 AM Reply

    wow enna solla raajavin talentai ketgavum ,rasikkavum mattumthaane thavira ontrumillai,,,,,i

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s