ராஜாவைக் கேளுங்கள்…


? பகவான் ரமணர் மீது நீங்கள் மிகவும் ஈடுபாடு காட்டுவதற்கு விசேஷமான காரணங்கள் எதாவது உண்டா ?

! காரணம் இல்லாமல் சும்மா அவர் பின்னால் சுற்றுவேனா ?

? எத்தனையோ பின்னணிப் பாடகர்களும், பாடகிகளும் பாடி இருக்கிறார்கள். நீங்களும் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். இவர்களில் தனித்து நிற்கும் குரலாக எதைச் சொல்வீர்கள் ?

! இதில் பல ரகங்கள் உண்டு.

1-ஒருவகைக் குரலில் என்ன பாடினாலும் நன்றாக இருக்கும். அதில் முதலில் நிற்பது லதா மங்கேஷ்கர், மெஹதி ஹசன்.

2-இன்னொரு வகைக் குரல் சுமாராக இருந்தாலும் பாடும் திறமையினால் பாடலை நன்றாக இருக்குமாறு செய்யும். அது ஜானகி போன்றவர்கள்.

3-ஆஷாஜி தனி ரகம். குரலும் திறமையும் சிறப்பானது.

4-மற்றொரு வகை என்ன பாடினாலும் எடுபடாது.

5- கடைசியாக தனி ரகக் குரல் – குறிப்பிட்ட விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே உண்டு. அதைப் போல குரல் உலகத்திலேயே எங்கும் கிடையவே கிடையாது. அது ஒன்றே ஒன்றுதான் என்று சொல்லும் உலகக் குரல்கள்.

-நாட்கிங் கோல் (Notking Cole)

-பானுமதி அம்மா

-எஸ்.வரலட்சுமி அம்மா

-ஸ்வர்ணலதா

-என் மகள் பவதாரிணி

இவர்களைப் போல் யாருக்கும் குரல் அமைவது அபூர்வம்.

Note from BalHanuman: பவாவை ஏன் இந்த கடைசி லிஸ்ட்-டில் சேர்த்தார் ??? 😦

? தன்னம்பிக்கையுடன் செயல்பட ஒரு கதை சொல்லுங்களேன்?

! வசிஷ்டர் ராமனுக்குச் சொன்ன ஒரு கதையைச் சொல்கிறேன். கேளுங்கள்.

ஒரு ராஜா நாட்டை ஆள்வதில் மிகவும் அலுத்துப் போய் விட்டான். எப்போதும் முனிவர்களைக் கண்டால் அவர்களின் ஒளி வீசும் முகத்தைப் பார்த்து பிரமித்துப் போவான். அது அவர்களின் தவத்தினால் ஏற்படுகிறது என்று தெரிந்து அதில் ஓர் ஈடுபாடு.

ஆட்சியில் அலுத்துப் போனவன், “தவம் செய்தால் என்ன?” என்று மந்திரியிடம் பரிபாலனத்தை விட்டு விட்டு காட்டில் போய் கடுமையான தவத்தில் மூழ்கி விட்டான். அவன் தவத்தின் உக்கிரத்தைக் கண்டு முனிவர்களும், ரிஷிகளும் வியந்து போனார்கள். எந்தத் தெய்வம் அவன் முன் தோன்றினாலும் அவன் கண்டு கொள்ளவில்லை. தீவிரமான தவப்பலனால் அவன் உடலுடனே பிரம்ம லோகத்தில் பிரம்மா முன் தோன்றிவிட்டான். பிரம்மா அவனை அன்புடன் நோக்கி, “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்க, “நான் கடவுளைக் காண வேண்டும்” என்றான். “அப்படியே ஆகட்டும்” என்றார் பிரம்மா.

ராஜா கேட்டான் – “நீங்களோ பிரம்மா. நீங்கள் “அப்படியே ஆகட்டும்” என்பதால் நான் கடவுளைக் காணப் போகிறேனா? அல்லது என்னுடைய தவத்தினாலா? என் தவத்தினால் என்றால் உங்களது வாக்கு அர்த்தமற்றதாகி விடுகிறது. உங்கள் வாக்கினால் என்றால் என் தவம் தேவையற்றதாகி விடுகிறது. இது எப்படி? என்றான்.

பிரம்மா, “ராஜனே, எல்லாம் வல்ல இறைவன் என்னை இந்த இடத்தில் அமர்த்தி வைத்து, ‘இங்கே உன்னிடம் தகுதி உள்ளவனே வர முடியும். அப்படி வருகிறவன் என்ன கேட்டாலும், ‘அப்படியே ஆகட்டும்’ என்று மட்டும் சொல் என்று ஆணையிட்டிருக்கிறார். அதைத்தான் சொன்னேன்! நான் சொல்வதால் ஒன்றும் ஆவதில்லை! உன் தவத்தால் உனக்கு அந்தத் தகுதி வந்தது. மற்றபடி யார் கையிலும் ஏதுமில்லை!” என்றார்.

தன்னம்பிக்கைதான் தவம்!

–நன்றி குமுதம்

Advertisements

4 thoughts on “ராஜாவைக் கேளுங்கள்…

 1. பவதாரிணியின் குரலை பற்றிதான் அவர் கூறுகின்றார். அவரின் பாடும் திறமையை பற்றி அல்ல :). அது ஒரு வித்தியாசமான குரல். க்றீச்சிடும் குரல், ஆனால் கேட்க முடியும். அவரின் பாடல்கள் திரையில் கேட்கும்படிதான் இருக்கின்றது. ஒரு வேளை ஏகப்பட்ட டேக் வாங்கி சரியாக பாடும் வாய்ப்பு மேடையில் இல்லாததால் அப்படி தோன்றுகின்றதோ என்னவோ. காற்றில் வரும் இசையே என் கண்ணனை அறிவாயோ, மயில் போல பொண்ணு ஒண்ணு இரண்டும் என் ஃபேவரைட்.

 2. ramanans March 14, 2013 at 3:02 AM Reply

  //Note from BalHanuman: பவாவை ஏன் இந்த கடைசி லிஸ்ட்-டில் சேர்த்தார் ??? //

  காதல் வானிலே.. காதல் வானிலே.. , மயில் போல பொண்ணு ஒண்ணு… பாடலைக் கேளுங்கள், தெரியும் 🙂

 3. n.k.senthil nathan mks March 14, 2013 at 5:42 AM Reply

  good story

 4. S K March 15, 2013 at 3:11 PM Reply

  S P B?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s