அசோகா அல்வா – ஞானாம்பிகா ஜெயராமன்


தேவையான பொருட்கள்:

பயத்தம் பருப்பு : 100 கிராம்
சம்பா கோதுமை : 50 கிராம்
சர்க்கரை : 250 கிராம்
கோவா : 50 கிராம்
ஏலக்காய் பொடி : 5 கிராம்
உலர்ந்த திராட்சை : 10 கிராம்
முந்திரி : 10 கிராம்
நெய் : 500 கிராம்

செய்முறை:

முதலில் பயத்தம் பருப்பைக் கடாயில் போட்டு நன்றாக வறுத்து எடுக்கவும். பின்னர் அதை அரை வேக்காட்டில் வேக வைக்கவும். வாணலியில் நெய் தேவையான அளவு ஊற்றிக் கொள்ளவும். அதன் பின் சம்பா கோதுமை மாவை வறுத்துக் கொள்ளவும். வேக வைத்த பயத்தம் பருப்பை சேர்த்துக் கொள்ளவும்.  சர்க்கரையைக் கொட்டிக் கிளறவும். நல்ல கொதி வந்தவுடன் இறக்கி வைக்கவும். அதன் பின் வாணலியில் நெய்யை ஊற்றி திராட்சையையும், முந்திரியையும் வறுத்து சேர்த்துக் கொள்ளவும். அதன் மேல் ஏலக்காய்ப் பொடியைத் தூவவும். இப்போது வாயில் வைத்தாலே தித்திக்கக் கூடிய அசோகா அல்வா ரெடி!

ஒவ்வொரு டிசம்பர் சங்கீத சீஸனிலும் சென்னை நாரதகான சபாவில் ஞானாம்பிகாவின் கேன்டீன் ரொம்பப் பிரபலம். சபாவில் நடக்கும் கச்சேரிகளைக்கூட இரண்டாம் பட்சமாக்கிவிட்டு ஞானாம்பிகாவின் அடை & அவியலுக்கு அணி திரண்டு வருபவர்கள் அநேக‌ர்! இங்கு சாப்பிட வருபவர்களை, வாங்கோ… வாங்கோ.. என்று வாய் நிறைய வாஞ்சையோடு அழைத்து விருந்தோம்பல் செய்யும் ஞானாம்பிகா ஜெயராமனின் குழுவினர் அதிகம் சம்பாதிப்பது நற்பெயரை!

தமது நிறுவனத்தின் பெயரை வாசித்தாலே, வயிறு நிறைகிற அளவுக்கு புகழையும் பூரிப்பையும் சம்பாதித்து வைத்திருக்கிறார் ஜெயராமன். தனது வாழ்வின் ஆரம்ப காலத்தில் ஒரு வேளை உணவுக்குக்கூட வழியின்றி ஏங்கித் திரிந்த சோகத்தை அவர் சொல்கிறபோது மனது சுருக்கென வலிக்கிறது. வாழ்க்கை ஒவ்வொருவரையும் சுற்றிப் போடும் வலைப் பின்னலையும், அதன் திணறடிப்புகளையும் அவை அழுத்தமாக உரைக்கின்றன. அதே நேரம் உழைப்பும் திறமையும் இருக்குமிடத்தில் கண்டிப்பாக உயர்வு ஓடோடி வந்து ஒட்டிக் கொள்ளும் என்பதற்கும் இந்த அனுபவங்கள் சாட்சியாகின்றன!

தனது வாழ்வில் ஏற்பட்ட வலிகளையும், உள்ளத்தை உளியாக்கி அவற்றை உடைத்தெறிந்த வழிகளையும் தெளிந்த நீரோடையாக ஜெயராமன் சொல்வதை இந்த நூலில் படிக்கும்போது நெகிழ்ச்சியில் நெஞ்சு புடைக்கும். ஒரு சமையல்காரரால் இதெல்லாம் எப்படி சாத்தியமானது!என்ற வியப்பு மனம் முழுக்க வியாபிக்கும்.

வறட்டி விற்று ஆகாரத்துக்கு வழி தேடிய ஆரம்ப காலப் போராட்டங்கள் தொடங்கி, சாப்பாட்டு உலகில் எவரும் எட்ட முடியாத அளவுக்கு சாம்ராஜ்யம் படைத்தது வரையிலான தமது அனுபவங்களை இதில் சுவையாக விவரிக்கிறார் ஜெயராமன்.

Advertisements

2 thoughts on “அசோகா அல்வா – ஞானாம்பிகா ஜெயராமன்

  1. செய்து விடலாம்… நன்றி…

    • BaalHanuman March 12, 2013 at 5:41 PM Reply

      உங்களுக்கு அடிக்கடி அல்வா கொடுக்கிறேனோ 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s