யாகாவாராயினும் நாகாக்க – சிவா கிருஷ்ணமூர்த்தி


c

Note from BalHanuman…

Essex_Siva

நண்பர் சிவா எழுதி சொல்வனத்தில் சமீபத்தில் வெளியான இந்தக் கதை என்னை மிகவும் கவர்ந்தது. இங்கிலாந்தில் வசிக்கும் நண்பர் சிவா Essex சிவா என்ற பெயரிலும் மிகவும் பிரபலம். எழுத்து அவருக்கு வசப்பட்டிருக்கிறது. உங்கள் பார்வைக்கு இதோ அந்தக் கதை…

யாகாவாராயினும் நாகாக்க…

thirukural

திருக்குறளுக்கு சுஜாதா எழுதிய இப்புதிய உரை திருக்குறளின் சாராம்சத்தை எளிய முறையில் சமகாலத் தமிழ் நடையில் கச்சிதமாக முன்வைக்கிறது. வெளிவந்த நாள் முதல் பெரும் கவனத்தைப் பெற்றுவந்திருக்கும் இந்த நூல் இப்போது ஐந்தாம் பதிப்பாக வெளிவருகிறது.

யாகாவா ராயினும் நாகாக்க – திருவள்ளுவரின் பார்வையில்…

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

எதை அடக்க முடியாவிட்டாலும் நாக்கை அடக்க வேண்டும். இல்லையேல் சொல்லடிபட்டு சோகமடைவர்.

(திருக்குறள் புதிய உரை – சுஜாதா)

Advertisements

6 thoughts on “யாகாவாராயினும் நாகாக்க – சிவா கிருஷ்ணமூர்த்தி

 1. R. Jagannathan March 9, 2013 at 9:04 AM Reply

  நல்ல கதைக்கு லிங்க் கொடுத்ததற்கு நன்றி. கதை நடை நம்மையும் கூடவே சம்பவங்களில் இருப்பது போல் உணர வைக்கிறது. பால் பொங்கும் சிமிலி நன்றாக உபயூலப் படுத்தப் பட்டிருக்கிறது. உங்கள் எண்ணத்துடன் (‘சிவாவுக்கு எழுத்து வசப்பட்டிருக்கிறது’) நான் முற்றிலும் உடன் படுகிறேன் உங்கள் நண்பருக்கும் என் பாராட்டு / வாழ்த்துக்களை தெரியப்படுத்தவும். – ஜெ.

 2. natbas March 9, 2013 at 5:17 PM Reply

  இந்தக் கதையைப் படிக்கும்போது இப்படியெல்லாம் நம்மால் எழுத முடியவில்லையே என்று எனக்கு பொறாமையாக இருந்தது. நீங்கள் சொல்வது முழுக்க முழுக்க உண்மை (‘சிவாவுக்கு எழுத்து வசப்பட்டிருக்கிறது’)

 3. சிவா கிருஷ்ணமூர்த்தி March 10, 2013 at 8:28 PM Reply

  கதை உங்களுக்கு பிடித்திருந்தது குறித்து மகிழ்ச்சி ஜெகன்னாதன், நட்பாஸ் ஸார்.
  கூடவே இதை வெளியிட்ட பால ஹனுமான் அவர்களுக்கும்.
  சும்மா இருந்துவிடாமல் மேலும் ஏதாவது செய்ய உங்கள் பாராட்டுகள், பெரிய ஊக்குவிப்பு.
  நன்றி

  சிவா கிருஷ்ணமூர்த்தி

 4. balagopal March 11, 2013 at 1:28 AM Reply

  மிக்க நன்றி. பால் பொங்குவது போல் எண்ணுவதை உடனே சொல்வது ஒரு குணமானால் சொல்ல நினைப்பதை சொல்லமுடியாமல் (என்னைப் போல்) தவிப்பவர்கள் எண்ணில் அடங்காது

 5. natbas April 24, 2013 at 3:27 AM Reply

  நண்பர் சிவா கிருஷ்ணமூர்த்தி, சொல்வனம் இணைய இதழில், “மணியம் செல்வன்” என்ற சிறுகதையை எழுதியுள்ளார். http://solvanam.com/?p=25116

  மேம்போக்கான பார்வையில் எளிய, பொழுதுபோக்கு சிறுகதை. ஆனால், வானத்தையும் அதிலுள்ள மேகங்களையும் எப்போதும் பார்த்து பலவகை கற்பனைகளையும் வளர்த்துக் கொள்ளும் நாயகனைக் கொண்டு கதைக்கு ஒரு புதிய பரிமாணம் தந்திருக்கிறார் சிவா. தலைப்பும் பொருத்தம்.

  படிமம் என்றாலே கனமாக இருக்க வேண்டும் என்ற பாவனையை உடைக்கும் நுட்பமான படைப்பு, இலக்கியத்தின் இறுக்கமான குரலில் துள்ளலைச் சேர்க்கும் ஆக்கம்.

  இக்கதையை தங்கள் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினால் மகிழ்வேன்.

  நன்றி.

 6. R. Jagannathan April 24, 2013 at 6:01 AM Reply

  ‘மணியம் செல்வன்’ – நல்ல தலைப்பு. அந்தப் பெண்ணை வர்ணனை செய்யாமலேயே வாசகனின் மனக் கண்ணுக்குத் தெரிய வைத்துவிட்டார் சிவா!

  நீண்ட கதை – ஆனால் இழுத்துப் பிடித்துவைக்கும் நடை.

  //கண்டிப்பாய் குள்ளமாகத்தான் இருக்கவேண்டும் அந்த குண்டு கரிச்சட்டி.// படிக்கும் நான் புன்னகைத்தேன். கதையிலும் அவன் புன்னகைத்தான்!

  //மகா யோக்ய முகம். பஸ் ஸ்டாண்டில் நம்பி சூட்கேஸ்களைப் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு பாத்ரூம் போகலாம் போன்ற முகம்.
  ஆனால் உண்மையில் உள்ளே இருக்கிறது. ஒரு கொழ கொழ, கரிய, அருவருப்பான ஜெல்லி…// என்ன ஒரு எழுத்து! பலரும் அல்லது எல்லோரும் ஏதாவது சில சமயங்களில் இப்படித்தானோ என்று எண்ண வைக்கிறது!
  சிவாவுக்கு வாழ்த்துக்கள். இதை சிபாரிசித்தவருக்கு நன்றி!

  -ஜெ

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s