7-San Francisco Bay Area வுக்கு வந்த இசைஞானி இளையராஜா…


இதன் முந்தைய பகுதி…

IR

நிகழ்ச்சி முடிவுக்கு வரும் நேரமும் வந்து விட்டது. எஸ்.பி.பி, “இது வெறும் கமா தான். முற்றுப் புள்ளி அல்ல” என்றார்.

ராஜா, “இந்த நாள் உங்களுக்கும் உங்கள் சந்ததியினருக்கும் மறக்க முடியாத ஒரு அனுபவம். நான் மற்றவர்கள் மாதிரி மேடையில் கலர்ஃபுல் ஆக டான்ஸ் ஆடி மயக்கும் Show Man அல்ல. நான்கைந்து Key Boards-ஐ வைத்துக் கொண்டு உங்களை ஏமாற்ற எனக்குத் தெரியாது. என்னுடையது முழுக்க முழுக்க Symphony Style Live Orchestra என்று யாருக்கோ மறைமுகமாக செய்தி சொன்னார்.

கலைய மனமில்லாமல் கூட்டம் மெல்லக் கலைந்தது.

என் மனதுக்குத் தோன்றிய சில விஷயங்கள்:
பவதா மிக மோசமான பாடகி என்று ராஜா உணர மறுப்பது ஏன் ? அவரை அடுத்து உடனே ஹரிஹரன் பாடும்போதே நம் அனைவராலுமே இந்த வித்தியாசத்தை உணர முடிகிறதே 😦

யுவனாரின் தமிழ் உச்சரிப்பு கொலைகள் மற்றும் பாடல் வரிகளை மாற்றிப் பாடுதல். அனைவரும் நன்கு அறிந்த நினைவோ ஒரு பறவை பாடலில், ‘விரிக்கும் அதன் சிறகை’ என்று பாடுவதற்கு பதிலாக ‘சிரிக்கும் அதன் சிறகை’ என்று பாடுகிறார். ஒரு வார்த்தை மாற்றிப் பாடியதற்காக மனோவுடன் மல்லுக் கட்டிய ராஜா யுவனாரின் அபத்தங்களைக் கண்டு கொள்ளவே இல்லை. என்னவோ போங்க…

ராஜாவின் சமீபத்திய படமான ‘நீ தானே என் பொன் வசந்தம்’ படத்தில் இருந்து கார்த்திக் ஒரு பாடல் கூட பாடவில்லை. ஆனால் நல்ல வேளை யுவனாரின் ‘சாய்ந்து சாய்ந்து’ கேட்பதில் இருந்தும் தப்பித்தோம் 🙂

நிறைவடைந்தது. (பொறுமையாகப் பின்தொடர்ந்த உங்கள் அனைவருக்கும் நன்றி)

@haranprasanna
இசையில் பாவம் என்பது அடிப்படை. அது நுட்பமல்ல. பிராண வாயு போல. பவதாரிணி அதைப் பிடுங்கிப் போட்டுவிட்டுத் தான் பாடுகிறார்.

@nchokkan
ராஜாவின் பலவீனம் பவதாரிணி.

@pa.raghavan
பேச்சு மற்றும் எழுத்திலிருந்து இளையராஜாவை யாராவது காப்பாற்றிவிட முடியுமானால் அவரால் இன்னும் 100 ஆண்டுகளுக்கு நன்றாக இசையமைக்க முடியும்.

–குற்றியலுலகம் – பா.ராகவன்
(தேர்ந்தெடுத்த ட்விட்டர் குறிப்புகளின் தொகுப்பு)

பற்பல வருடங்களாகத் தன் மனசுக்குள் பூஜித்து வந்திருக்கும் லட்சிய ஹீரோவை நேரில் காணும்போது எந்த ரசிகருக்கும் பேச்சு வராது.   ஆனால் டாக்டர் ரவிச்சந்திரன் சற்று ‘ஹோம் வொர்க்’ செய்து கொண்டு வந்திருந்ததால் பணிவோடு தன் எண்ணங்களைத் தெரிவித்தார்.

எது கேட்டாலும் முதலில் ‘அது சரி’  என்று சொல்கிறார் இளையராஜா.   நல்ல  மேனரிசம் இது.   ‘அது சரி’  என்று முதலில் கூறி விட்டுப் பிறகு தன் கருத்தைச் சொல்கிறார்.  அது நம்மைப் பணிவுடன் கேட்க வைக்கிறது.

“ஓரோர் சமயம் உங்கள் பாட்டைக் கேட்கும்போது அதே ட்யூனை முன்பே வேறொரு பாட்டில் கேட்ட மாதிரி இருக்கிறதே ?”  என்று கேட்டார் ரவிச்சந்திரன்.

“அது சரி.  மொத்தம் இருப்பது ஏழு ஸ்வரங்கள் தான்.  எப்படி ட்யூன் போட்டாலும் ஏதாவது ஓர் இடத்தில் ஏதாவது ஒரு சாயல் வருவது சகஜம்தான்”  என்றவர்,  “வீடு வரை உறவு”  என்ற அடிகளைப் பாடிக் காட்டி,  அதே போல் வரும் வேறு சில பாடல்களையும் பாடினார்.  (ரவை புரளும் சன்னமான சாரீரம் அவருக்கு இருக்கிறது.)

“உங்கள் பாடல்களைப் பல முறை கேட்டு வருகிறேன்.  மெட்டையும்  சாகித்தியத்தையும் தவிர இன்னும் ஏதோ ஒன்று பாட்டுக்குள் இருப்பதாகத் தோன்றுகிறது.  அது என்ன ?”  என்று டாக்டர் கேட்டார்.

இதே கேள்வியை பம்பாயிலிருந்து வந்த ஒரு பெண் என்னிடம் கேட்டாள்.  அது என்னவென்று என்னால் எப்படி விளக்க முடியும் ?  ஆரம்ப காலத்தில்,  நான் கற்றுக் கொண்ட, தெரிந்து கொண்ட,  நாட்டுப்புற  ட்யூன்கள் மொத்தத்தையும் கொட்டிவிட்டேன்.  ஐயோ,  இனிமேல் என்ன செய்யப் போகிறோம் என்று திகைத்திருந்த போது,  தானாகவே பாட்டு வர ஆரம்பித்தது.  சிவாஜி காலமான சமயம் அவருடைய மனைவி என்னிடம் அழுதார்.   ‘அவருக்கு பாத்ரூம் சுத்தமாக இருக்க வேண்டும்.  அன்று என்ன படம் இருக்கிறது,  என்ன நடிக்கப் போகிறோம் என்ற திட்டங்களை பாத்ரூமில் தான் யோசித்து வைத்துக் கொள்கிறேன் என்பார்.  வீட்டில் எந்த இடம் சுத்தமாயில்லாவிட்டாலும்  பாத்ரூம் மட்டும் சுத்தமாக இருக்கும்படி நான் பார்த்துக் கொள்வேன்’  என்று சொல்லி கண்ணீர் வடித்தார்.  எனக்கு அந்த மாதிரி இல்லை.   ஆர்மோனியத்தின் முன்னே உட்கார்ந்ததும் இசை வருகிறது.  பறவை ஒருத்தர் சொல்லியா பறக்கிறது ?  ‘It  happens.  Music  happens “  என்றார் ராஜா.

“உங்களுடைய ஆயிரக்கணக்கான பாடல்களில் உங்கள் உள்ளம் கவர்ந்த பாட்டு எது ?”  என்று நான் கேட்டேன்.  உடனே “ஜனனி ஜனனி“  என்றார்.  ‘கொஞ்சம் பாடிக் காட்டுங்கள்’  என்று நான் கேட்டுக் கொண்டேன்.  ‘சௌந்தர்ய லஹரி‘  ஸ்லோகத்தை முதலில் சொல்லி விட்டு,  ஆர்மோனியத்தின் துணையுடன் பாடினார்.  அப்பப்பா!  அந்த பாட்டு என்ன சுகம்,  என்ன சுகம்!

டாக்டர் கௌரிசங்கர்,  “நீங்கள் ரொம்பப் பிரமாதமான படங்களுக்கும் பாட்டுப் போடுகிறீர்கள்.  சில சமயம் ரொம்ப சாதாரணமான படங்களுக்கும் பாட்டுப் போடுகிறீர்கள்.  அது எதனால் ?”  என்று கேட்டார்.

ராஜா சிரித்தார்.  “இன்னாருக்குப் பாட்டுப் போடுவேன்,  இன்னாருக்குப் போட மாட்டேன் என்று நான் சொல்வதில்லை.  ‘நீங்கள் மியூசிக் போடுகிறீர்கள் என்று சொன்னால் உடனே விநியோகஸ்தர்கள் வாங்கிக் கொள்கிறார்கள்.  அதனால் ஒப்புக் கொள்ள வேண்டும்’  என்று கேட்கிறார்கள்.  ஒப்புக் கொள்கிறேன்.  படம் நன்றாக அமைவதோ,  மோசமாக அமைவதோ அவரவர் கொடுப்பினை.  சிக்னலில் கார் நிற்கிறது.  ஏழையொருவன் வந்து கை நீட்டுகிறான்.  பையில் கையைவிட்டுக் காசை எடுப்பதற்குள் சிக்னல் கிடைத்து,  கார் நகர்ந்து விடுகிறது.  இன்னொரு சிக்னலில்,  வேறொரு ஏழை கை நீட்டுகிறான்.  ஒரு ரூபாய் போடலாம் என்று எடுத்தால் பத்து ரூபாய் நோட்டாக வருகிறது.   போடுகிறோம்.  அதை என்னவென்று சொல்வது ?”

உன்னிகிருஷ்ணன் ரெக்கார்டிங்குக்கு வந்திருப்பதாக இன்டர்காமில் தெரிவித்தார்கள். ராஜா எழுந்து கொண்டு எங்களிடம் கை குலுக்கினார்.  “கொஞ்ச நேரம் உங்கள் ரெகார்டிங்கையும் பார்க்க வேண்டும்”  என்று டாக்டர் ரவிச்சந்திரன் கேட்கவே,  “தாராளமாக வாருங்கள்”  என்று அழைத்துப் போனார்.

உன்னிகிருஷ்ணன் ஜீன்ஸில் கட்டம் போட்ட முழுக்கை ஷர்ட்டை  ‘இன்’ செய்து கொண்டு கல்லூரி மாணவன் போல் இருந்தார்.  பந்தா எதுவும் இல்லை.  பிளாஸ்கிலிருந்து வெந்நீர் எடுத்து சிறிது சிறிதாக உறிஞ்சினார்.   ஸ்டாண்டின் மீது நோட்டுப் புத்தகத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு,  நின்றபடியே அடி அடியாகப் பாடினார்.  மறுபுறம் கம்ப்யூட்டர் பதிவைப் பார்த்தபடி ராஜா இருந்தார்.

உன்னிகிருஷ்ணன் பாடுவது சரியாக இருப்பதாகத்தான்  எங்களுக்குத் தோன்றியது.  ஆனால் ஒவ்வொரு வரியிலும் ஒரு சுளிவை,  ஒரு நெளிவை,  ஒரு கூட்டலை, ஒரு குறைத்தலை சொல்லித் திருத்தம் வழங்கிக் கொண்டேயிருந்தார் ராஜா.  கூடக்கூட ஸ்வரங்களை சொல்லிப் பாடியும் காட்டினார்.  ஐந்து நிமிடப் பாட்டுக்கு ஒரு மணி நேரம் ஆயிற்று.

இப்படிக் கடுகத்தனை ‘சங்கதி‘ க்காக இவர் மலையத்தனை சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டுமா என்று நினைத்தேன்.  ஆனால் அப்படியொரு perfectionist ஆக இருப்பதால்தான்  இளையராஜா மகாராஜாவாக இருக்கிறார்.

நாலு மூலை  –  ரா.கி.ரங்கராஜன்  (கிழக்கு பதிப்பகம்)

இதுவரைக்கும் நான் செய்திருப்பதெல்லாம் வெறும் அப்பளமும் ஊறுகாயும்தான்.

கல்கி: நீங்கள் அறுசுவை உணவையே பரிமாறுகிறீர்கள் என்றுதான் நாங்கள் உணர்கிறோம்.
♫ வெறும் அப்பளம் ஊறுகாய்க்கே இப்படிச்சொல்கிறீர்கள் என்றால் நான் அறுசுவை உணவை நிஜமாகவே பரிமாறினால் நீங்கள் என்ன ஆவீர்கள் (சிரிப்பு). அப்படியெல்லாம் பரிமாறுகிற சந்தர்ப்பம் எனக்கு இன்னும் வரவில்லை.

கல்கி: என்ன இப்படிச் சொல்கிறீர்கள்?
♫ சினிமா என்பது ஒருவித ஃபார்முலாவாகப் பழகிப்போன விஷயம். இதற்குத்தான் மக்கள் தலையாட்டுவார்கள். என்னிடம் கொண்டுவரப்படுகிற பாத்திரம் காலியாக இருந்தால்தானே நான் அதில் ஏதாவது போட முடியும்? நீங்கள் கொண்டுவருகிறபோதே எதையாவது போட்டு நிரப்பித்தான் கொண்டு வருகிறீர்கள். அதற்கு மேலும் அதில் நான் எதைப்போட முடியும்? எல்லா சினிமாவிலும் லவ் சாங் வருகிறது. கிண்டல் பண்ணுகிற பாடலும் வருகிறது. இதில் யார் என்ன புதுமை செய்துவிட முடியுமென்று கருதுகிறீர்கள்?

கல்கி: அப்படி ஒரு ஆதர்சமாக ஒரு படம் பண்ணவேண்டும் என்ற கனவு உங்களுக்கு இருக்கிறதா?
♫ சினிமா என்பது ஒரு வரையறைக்குட்பட்டதுதான். இரண்டு மணி நேரத்தில் முடிந்து விடுகிற ஒரு விஷயம். அதில் வருகிற ஒரு மூன்று நிமிஷப் பாடலில் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்துக் கட்டிப்போடவேண்டுமானால், அதற்கான கதையோட்டமும் காட்சியமைப்பும் அந்தப் படத்தில் இருக்கவேண்டும் அல்லவா?

கல்கி: இதுமாதிரியான வரையறைகள் சினிமாவில் எப்போதும் இருக்கும்தானே?
♫ இப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் உங்கள் மனத்தை இழுத்திருக்கிறேனல்லவா? எத்தனையோ ஆன்மீகவாதிகள் சொல்லியும் கட்டுப்படாத உங்கள் மனது அந்த மூன்று நிமிஷ நேரம் கட்டுப்பட்டிருக்கிறதல்லவா?

கல்கி: அதை இன்னும் பூரணமாகச் செய்யவேண்டும் அல்லவா?
♫ அதற்கான சாத்தியக்கூறுகள் சரியாக அமையவேண்டும். அப்போதுதான் செய்யமுடியும். நான் எது போடவேண்டுமென்றாலும் ஒரு பாத்திரத்தில்தான் போடவேண்டியிருக்கிறது. நான் போடுகின்ற எதுவும் அந்தந்தப் பாத்திரத்தின் வடிவைத்தான் எடுத்துக்கொள்கின்றன. தண்ணீரை எந்தப் பாத்திரத்தில் ஊற்றுகிறோமோ, அந்தப் பாத்திரத்தின் வடிவையே தானும் எடுத்துக்கொள்கிற மாதிரி… ஊற்றுவது தண்ணீரோ, பாலோ, அமுதமோ.. அதை வாங்கியவனுக்கு அது உடலில் சேரவேண்டும்.

கல்கி: ஒரு சீனியர் என்ற முறையில் ரஹ்மானின் இசையமைப்பு எப்படி என்று சொல்லுங்களேன்.
♫ நன்றாகச் செய்கிறார். நானும் உங்களைப்போல இசைக்கு ரசிகன்தானே?

கல்கி: உங்கள் மகன் கார்த்திக்ராஜா?
♫ அவனும் நன்றாகவே செய்கிறான்

கல்கி: உங்களுடைய பாடல்களைச் சிலர் வெளிப்படையாகக் காப்பியடிக்கும்போது உங்களுடைய உணர்வு எப்படியிருக்கும்?
♫ இல்லாதவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். அதுபற்றி என்ன இருக்கிறது? (சிரிப்பு)

கல்கி: உங்களுக்கு என்று விருப்பமான ராகங்கள் எதுவும் உண்டா? எதன்மீதாவது உங்களுக்கு அதீத லயிப்பு உண்டா?
♫ அப்படியெல்லாம் எதுவும் இல்லை. எல்லாமே Music.. Music.. Music.. அதில் எப்படிப் பிரித்துப் பார்க்கமுடியும்?

–இசைமயமாய் ஒரு சந்திப்பு – கல்கி 17.8.1997

கல்கி சார்பாக பேட்டி கண்டவர்கள்:
திரு. பா.ராகவன் மற்றும் அவரது இதழியல் முன்னோடியான திரு. இளங்கோவன்.

Ilaiyaraaja

About Ilaiyaraaja

Isaignani Padmabhushan Ilaiyaraaja: In a land of over a billion people, where watching movies is a way of life, ‘The Maestro’ Ilaiyaraaja is truly the ‘Raaja’ of the world of music. For nearly four decades, Isaignani Ilaiyaraaja has been synonymous with the magic the seven notes create under his illustrious baton.

Regarded as one of the finest music composers ever, Ilaiyaraaja has composed over 4500 songs in nearly 1000 films in six languages. But it is not just his songs that reserve the very special place for him in Indian music, it is his background score that has elevated many a film, many a scene from ordinariness to sheer ecstasy for the viewers.

Cheeni Kum Banner

It won’t be an exaggeration to say that Superstars and Matinee idols and generations of playback singers and other music directors owe a part of their success to Ilaiyaraaja’s music. Director Balki descibes Ilaiyaraaja as someone whose power of music resides in his background score. ‘You want to see a majic show, go to Raaja Sir’s studio, there is sheer melody even in his background score”, he says.

In 2003, according to a BBC international poll, people from 155 countries voted his composition ‘Rakkamma Kaiya Thattu’ from the 1991 Mani Ratnam film ‘Thalapathi’ fourth in the world’s top 10 most popular songs of all time. Director Mani Ratnam describes Ilaiyaraaja as “a genius, who could compose music with just one look at the scene”.

ராஜா புகைப்படம் – நன்றி திரு. ஸ்டில்ஸ் ரவி

Actor Kamal Haasan who never tires of talking about Ialiyaraaja’s influence on him often mentions how he ends up discussing the maestro’s music even with other music directors. “I am such a big fan of his music”, says Kamal Haasan.

Ilaiyaraaja’s childhood was spent in rural Tamilnadu exposing him to a rich of variety of Tamil folk music. Travelling with a music troupe from a young age helped mould his musical talent. In his later years, he would combine that with using Western classical music harmonies and string arrangements in Indian film music.

The influence of musicians like Bach, Mozart and Beethoven on Ilaiyaraaja was immense and his versatility drew comparisons with greats like John Williams and Hans Zimmer. As listeners marvelled at the never before heard tapestry of sound that he created for films, Ilaiyaraaja broadened the range of film music with his unique approach to arranging, recording technique and diversity of musical styles. It goes to Ilaiyaraaja’s credit that just about every celebrated vocalist has sung to his tunes at some point or the other.

Ilaiyaraaja is also a poet and an accomplished singer, winner of four National awards and the Padma Bhushan. Among the several accomplishments to his credit include being the first Asian composer to perform at the Royal Philharmonic Orchestra and his song was featured at the Olympic Games 2012 in London, among the music from 85 countries.

4 thoughts on “7-San Francisco Bay Area வுக்கு வந்த இசைஞானி இளையராஜா…

 1. vathsala March 8, 2013 at 3:51 PM Reply

  He is not ilayaraja, he is isairaja.

 2. R. Jagannathan March 9, 2013 at 9:17 AM Reply

  //@pa.raghavan
  பேச்சு மற்றும் எழுத்திலிருந்து இளையராஜாவை யாராவது காப்பாற்றிவிட முடியுமானால் அவரால் இன்னும் 100 ஆண்டுகளுக்கு நன்றாக இசையமைக்க முடியும்.//
  இதைவிட சுருக்கமாக யார் நேர்மையாகக் கணிக்க முடியும்? இப்போது குமுதத்தில் வரும் ராஜாவின் பதில்கள் அவரைப் பற்றிய பிம்பத்தை உடைத்து நொறுக்குவதாகவே உள்ளது. இதை MSV யின் பதில்களுடன் (விகடன்) ஒப்பிட்டுப் பார்த்தால் சுலபமாக புரியும்! – ஜெ.

 3. கிரி April 7, 2013 at 11:36 AM Reply

  “இந்த நாள் உங்களுக்கும் உங்கள் சந்ததியினருக்கும் மறக்க முடியாத ஒரு அனுபவம். நான் மற்றவர்கள் மாதிரி மேடையில் கலர்ஃபுல் ஆக டான்ஸ் ஆடி மயக்கும் Show Man அல்ல. நான்கைந்து Key Boards-ஐ வைத்துக் கொண்டு உங்களை ஏமாற்ற எனக்குத் தெரியாது. என்னுடையது முழுக்க முழுக்க Symphony Style Live Orchestra என்று யாருக்கோ மறைமுகமாக செய்தி சொன்னார்.”

  ராஜா பேசாமல் இசை நிகழ்ச்சி மட்டும் நடத்தினால் நன்றாக இருக்கும். நண்பர் ஒருவர் கூறியது போல இவருக்கு விரல்களில் சரஸ்வதியும் நாக்கில் சனியும் குடி கொண்டு இருக்கிறார்கள்.

  “@pa.raghavan
  பேச்சு மற்றும் எழுத்திலிருந்து இளையராஜாவை யாராவது காப்பாற்றிவிட முடியுமானால் அவரால் இன்னும் 100 ஆண்டுகளுக்கு நன்றாக இசையமைக்க முடியும்.”

  100 % உண்மை. அவரின் அருமையான இசையை கூட அவரது பேச்சு ரசிக்க முடியாமல் செய்து விடுகிறது.

  “வீட்டில் எந்த இடம் சுத்தமாயில்லாவிட்டாலும் பாத்ரூம் மட்டும் சுத்தமாக இருக்கும்படி நான் பார்த்துக் கொள்வேன்’ என்று சொல்லி கண்ணீர் வடித்தார். எனக்கு அந்த மாதிரி இல்லை. ஆர்மோனியத்தின் முன்னே உட்கார்ந்ததும் இசை வருகிறது. பறவை ஒருத்தர் சொல்லியா பறக்கிறது ? ‘It happens. Music happens “ என்றார் ராஜா.”

  உண்மையிலே மிக மிக எரிச்சலை தருகிறது. அவங்க என்ன ஒரு மனநிலையில் கூறி இருக்கிறார்கள்.. அதை இவர் எதனுடன் ஒப்பிடுகிறார்? இவர் மாதிரியே அனைவரும் இருக்கணும் என்று நினைப்பது…

  இவருக்கு ஆர்மானியப் பெட்டி முன்பு அமர்ந்தவுடன் பாட்டு வருகிறது என்பதைக் கூற வேற உதாரணமே கிடைக்கவில்லையா?

  ராஜ ரசிகராக எழுதி இருந்தாலும் அதில் உள்ள நிறை குறைகளை எழுதி சிறப்பான விமர்சனமாக எழுதி விட்டீர்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s