6-San Francisco Bay Area வுக்கு வந்த இசைஞானி இளையராஜா…


இதன் முந்தைய பகுதி…

IR

அடுத்து வந்த பாடல் – போட்டு வைத்த காதல் திட்டம் – சிங்காரவேலன் படத்தில் இருந்து… பாடியவர்கள்: கார்த்திக், சத்யன் மற்றும் யுவன். கார்த்திக்கும் சத்யனும் அருமையாகப் பாடினார்கள். யுவன் – Sorry no comments 😦

ராஜாவின் ஒப்புதலுடன், கார்த்திக் Audience-ஐ இந்தப் பாடலுக்காக இணைந்து clap செய்யச் சொன்னார். ராஜா கிண்டலாகச் சிரித்த மாதிரி தோன்றியது 🙂

தக்கிட ததுமி (சாகர சங்கமம்) பாடலை தெலுங்கில் எஸ்.பி.பி. பாடினார்.  இந்த முழு நிகழ்ச்சியில் அவர் சிறிது சிரமப்பட்ட ஒரே பாடல் இதுதான் என்று தோன்றியது 😦

அடுத்து ராஜா பாடிய பாடல் 1979-ல் வெளி வந்த பொண்ணு ஊருக்கு புதுசு படத்தில் இருந்து ஓரம் போ பாடல். அந்தக் காலத்தில் இலங்கை வானொலியில் வெகு நாட்கள் முன்னிலையில் இருந்த ‘என்னடி மீனாட்சி’ பாடலை பின்னுக்குத் தள்ளிய பெருமை இந்தப் பாடலுக்கு உண்டு.

இந்தப் பாடல் எருமை மாடு பாடுவதைப் போல் இருக்கிறது என்று சொல்லி பாடகர் T.M.S சொல்லி இளையராஜாவின் எரிச்சலை சம்பாதித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

ராஜா அடுத்து பாடிய பாடல் ‘நிலா அது வானத்து மேலே’.

எஸ்.பி.பி. இளையராஜாவிடம்: “ராஜா, இந்தப் பாட்டைப் பற்றி நான் ஒன்று கேள்விப்பட்டிருக்கேன். You have done it for a different situation. இது ஒரு lullaby – song – க்காக பண்ணினதுன்னு கேள்விப்பட்டேன். உண்மையா ? என்றார்.

ராஜா அதற்கு, ‘உண்மைதான். “தென்பாண்டி சீமையிலே”–ன்னு ஒரு பாட்டு இருக்குதில்லையா ? (கூட்டம் ஆர்ப்பரிக்க…) இதே படத்துல வர “தென் பாண்டி சீமையிலே” – அதுக்குப் போட்ட alternative lullaby tune இது.

எஸ்.பி.பி உடனே, ‘அது எப்படி? இந்தப் பாட்டை lullaby மாதிரி பாடிக் காட்டுங்க!” என்றார்.

ராஜா சிரித்துக் கொண்டே, “Lullaby மாதிரி இல்ல. Lullaby-க்காக போட்ட பாட்டு அது. மாதிரி-ன்னா வேற. மாதிரி-ன்னா model.” என்று கூறி அந்தப் பாடலை தாலாட்டாகவே பாடிக் காண்பித்தார். ரசிகர்கள் மத்தியில் பலத்த கரகோஷம். கீழ்க்காணும் வீடியோ இணைப்பில் ராஜாவின் தாலாட்டை நீங்களும் கேட்டு மகிழலாம் 🙂

இந்தத் தாலாட்டின் முடிவில் அப்படியே ‘தென் பாண்டி சீமையிலே’ பாடலை ராஜா ஆரம்பிக்க, எஸ்.பி.பி. தெலுங்கு ரசிகர்களுக்காக அந்தப் பாடலை தெலுங்கில் பாட ஆரம்பிக்க, ராஜா அதன் தொடர்ச்சியாக, தென்பாண்டிச் சீமையிலே மெட்டில்

“ஏழேழு கடல் கடந்து இங்கு வந்து வாழ்பவரே என்றென்றும் உமக்கெனவே இசை தொடுப்பேனே!

இசை தொடுப்பேனே ! இசை தொடுப்பேனே!

எங்கோர் மண்ணில் பிறந்தாலும், ஏதோர் மண்ணில் வாழ்ந்தாலும்
உனையும் எனையும் இணைப்பதெல்லாம்
உயிரின் மேலாம் இசைதானே!” என்று முடித்தார்.

வந்திருந்த கூட்டம் மொத்தமும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில்…

இதன் இறுதிப் பகுதி விரைவில்…

Advertisements

One thought on “6-San Francisco Bay Area வுக்கு வந்த இசைஞானி இளையராஜா…

  1. பாடல்களை ரசித்தேன்… நன்றி…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s