5-San Francisco Bay Area வுக்கு வந்த இசைஞானி இளையராஜா…


இதன் முந்தைய பகுதி…

IR

அடுத்த பாடல் கீரவாணி சிலகலா தெலுங்கு பாடல் – அனிதாவும் எஸ்.பி.பி யும் அருமையாகப் பாடினார்கள். இந்தப் பாடல் முடிந்தவுடன், ஜானி படத்தில் இருந்து காற்றில் எந்தன் கீதம் பாடலைப் பாடிக் காட்டி இந்த இரண்டு பாடல்களும் ஒரே ராகம் தான் என்று குறிப்பிட்டார் ராஜா. காற்றில் எந்தன் கீதம் பாடலைப் போல் தனக்கு ஒரு பாடல் வேண்டும் என்ற டைரக்டரின் வேண்டுகோளுக்கிணங்க இந்தப் பாடலை தான் கம்போஸ் செய்ததாகக் குறிப்பிட்டார்.

ராஜாவின் பஞ்ச்: “கேட்டுக் கேட்டுக் கெடுத்துடறாங்க :-)”
இதற்கு எஸ்.பி.பி, “கொடுத்துக் கொடுத்தும் கெடுத்துடறாங்க சார்!”

ராஜா புகைப்படம் – நன்றி திரு. ஸ்டில்ஸ் ரவி

ஒரு காலத்தில் ராஜாவும் வைரமுத்துவும்  இவ்வளவு நெருக்கமாக இருந்தார்கள் என்று உங்களால் நம்ப முடிகிறதா ?  இந்த நிகழ்ச்சி முழுவதும் வைரமுத்துவின் ஒரு பாடல் கூட கிடையாது. Toronto மற்றும் New Jersey நிகழ்ச்சிகளிலும் அதே போல் தான் என்று கேள்வி. அவர்களுக்குள் என்ன சண்டையோ தெரியவில்லை.

அதே போல் Toronto நிகழ்ச்சியில் ராஜாவிடம் திட்டு வாங்கிய பாடகி சாதனா சர்க்கம் அமெரிக்கா வந்ததாகத் தெரியவில்லை. அங்கிருந்து நேராக இந்தியா சென்று விட்டாராம்.

சித்ராவும், அனிதாவும் ‘தம்தன தம்தன தாளம் வரும்’ பாடலைப் பாடினார்கள். இந்தப் பாடலுக்காக புதிய இண்டர்லூட்களை தனது குழுவினருக்காக எழுதியதாக ராஜா குறிப்பிட்டார்.

அடுத்த வந்த சுந்தரி கண்ணால் ஒரு சேதி நிச்சயமாக ஒரு memorable performance. ராஜா இந்தப்பாடலுக்கு 13/3/91ல் எழுதிய ஸ்கோர்ஷீட்டை எடுத்து வந்திருந்தார். மும்பையில் பதிவு செய்யபபட்ட இந்தப் பாடலின் ஒலிப்பதிவின் போது, அனைவரும் எழுந்து நின்று கைதட்டி ராஜாவின் இந்த காம்போசிஷனை வியந்து ரசித்ததாக எஸ்.பி.பி குறிப்பிட்டார்.

எனக்குத் தெரிந்த வரையில் தளபதி தான் ராஜா இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றிய கடைசிப் படம். 1992-ல் பாலசந்தர் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜாவில் ஏ.ஆர்.ரெஹ்மான் அறிமுகம் ஆனார்.

சுந்தரி பாடல் முடிந்தவுடன் ரசிகர்களுக்கு எஸ்.பி.பி ஒரு வேண்டுகோள் விடுத்தார். “தயவு செய்து நீங்கள் யாரும் calculator உபயோகித்து இன்று நாங்கள் எவ்வளவு தமிழ் பாடல்கள் மற்றும் எவ்வளவு தெலுங்கு பாடல்கள் பாடினோம் என்று கணக்கிட வேண்டாம். நாம் அனைவரும் Tamil Community அல்லது Telugu Community அல்ல. நாம் அனைவரும் Music Community. நாங்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சி சிறப்பாக வருவதற்காக கடுமையாக உழைத்துள்ளோம். அதனால் நீங்கள் யாரும் இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற எந்த இசைக் கலைஞரையும் பற்றி மோசமாக உங்கள் blog-கிலோ, முக நூலிலோ தயவு செய்து எழுதாதீர்கள்.

இந்த நிகழ்ச்சியில், யுவனார் மற்றும் பவதாவின் சொதப்பல்களைப் பற்றி நான் இங்கே பகிர்ந்து கொண்டது கூட ஒரு ஆதங்கத்தில் தான். நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

இதன் தொடர்ச்சி விரைவில்…

Sadhana Sargam is an Indian playback singer. She is a recipient of the National Film Award and Film Fare Awards South.

Sargam has sung in many Indian languages for films, television serials and music albums. She is well known for her 1990s Hindi songs and recent South Indian songs. She holds a record for being the only North Indian to have the won the National Award for a South Indian song. She is also a trained Hindustani classical singer. She has ventured into the Southern Carnatic classical style with ease.

Advertisements

5 thoughts on “5-San Francisco Bay Area வுக்கு வந்த இசைஞானி இளையராஜா…

 1. அரிய புகைப்படங்கள்…

 2. தளபதி படம்தான் மணிரத்தினத்தின், பின்னணி இசை பிரமாதமாக அமைந்த கடைசி படம். அவர் ஏ.ஆர் ரகுமானுடன் இணைந்த அனைத்து படங்களிலும் பாடல்கள் சிறப்பாக இருக்கும் தனியே கேட்பதற்கு மட்டும். திரையில் வெகு அபூர்வமாகவே பொருந்தும் (தெய்வம் தந்த பூவே போல), பின்னணி இசை சுத்தம்.

  ராஜாவை விட்டால் பின்னணி இசைக்கு வேறு யாரும் இவ்வளவு முக்கியத்துவம் தருவதில்லை. தளபதியில் கடைசி காட்சியில், வேறு வழியிருக்கின்றது என்று கிட்டி கூறும் போது அது என்ன என்பதை பின்னணி இசை மூலம் உடனே காட்டுவார்.

 3. யுவனின் குரல் பற்றி நீங்கள் கூறுவது கொஞ்சம் சரி, அவருக்கென்று ஒரு சில பாடல்கள் உள்ளது. அது அவருக்கு செட்டாகும். வேறு வகையான பாடல்களை அவர் முயற்சி செய்யும் போது, ஏதோ வயிற்றுவலிக்காரன் முனங்குவது போலவே உள்ளது.

 4. rathnavel natarajan March 18, 2013 at 12:04 PM Reply

  அருமையான பதிவு.
  நன்றி.

 5. கிரி April 7, 2013 at 10:55 AM Reply

  “இந்த நிகழ்ச்சி முழுவதும் வைரமுத்துவின் ஒரு பாடல் கூட கிடையாது. Toronto மற்றும் New Jersey நிகழ்ச்சிகளிலும் அதே போல் தான் என்று கேள்வி. அவர்களுக்குள் என்ன சண்டையோ தெரியவில்லை.”

  இப்படியே ஒவ்வொருவரையும் சொல்லிக்கொண்டே போனால் ராஜா மேடை நிகழ்ச்சி நடத்த படங்களே இல்லாமல் சென்று விடும். எதற்கு இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறார்?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s