4-San Francisco Bay Area வுக்கு வந்த இசைஞானி இளையராஜா…


இதன் முந்தைய பகுதி…

IR

“இதுதான் நீங்க இங்க வெளிநாட்டில் வந்து வாழற லட்சணமா ? இசை என்பது தெய்வீகம். இசை தான் கடவுள். நீங்கள் இப்படிக் கத்த வேண்டிய அவசியம் என்ன ? எந்துக்கு ஷௌட் செஸ்துனாரு? உங்களால் அமைதியாக இந்த நிகழ்ச்சியை கேட்க முடியாதா ? இந்த நிகழ்ச்சிக்காக நானும் எனது இசைக் கலைஞர்களும் எந்த அளவு உழைத்துள்ளோம் என்று உங்களுக்குத் தெரியுமா ?” என்று கடுங்கோபத்தில் கத்தித் தீர்த்து விட்டார் ராஜா.

உணர்ச்சி வசப்பட்டு கத்தியவர்களைத் தானே அவர் கோபித்துக் கொள்கிறார் என்று எங்களை நாங்களே சமாதானம் செய்து கொண்டோம். சொல்ல மறந்து விட்டேனே, இந்த நிகழ்ச்சி முழுவதையும் அமைதியாக ரசிக்கும்படியும், கை தட்டலையோ, தங்கள் விருப்பமான பாடலை பாடச் சொல்லி கூச்சலிடுவதையோ ராஜா சிறிதும் விரும்ப மாட்டார். அமைதியாக முழு நிகழ்ச்சியை ரசிப்பதையே அவர் விரும்புகிறார் என்று BATA சார்பாக வரவேற்ற விஜயா அசூரி தெலுங்கில் அறிவித்தார். ஆனால் என்ன காரணத்தாலோ இதைத் தமிழில் அறிவிக்கத் தவறி விட்டார் Kalalaya கலா ஐயர். அதனால் வந்த குழப்பம் தான் இது.

ராஜா புகைப்படம் – நன்றி திரு. ஸ்டில்ஸ் ரவி

இளையராஜாவை வரவேற்கும்போது உணர்ச்சி வசப்பட்ட கலா ஐயர், “இது ஆரம்பம் தான். ராஜா வருடா வருடம் இங்கு வந்து எங்களை மகிழ்விக்க வேண்டும்’ என்றார். அதற்கு ராஜா புன்னகையுடன், ‘கடவுளாக இருந்தாலும் எப்போதாவது வந்தால் தான் மதிப்பிருக்கும். அடிக்கடி வந்தால் மதிப்பிருக்காது’ என்றார். என்ன ஒரு அசாத்தியமான தன்னம்பிக்கை!

ஒளியிலே தெரிவது தேவதையா என்று ஆரம்பித்த கார்த்திக்குடன் இணைந்து கொண்டார் பவதா. பாடல் முடிந்தவுடன், ராஜா செல்லோ சேகரை தனியாக வாசிக்கச் சொன்னார். பிறகு மொத்த ஆர்கெஸ்ட்ராவும் அவருடன் இணைந்த போது மிகப் பிரமாதமாக இருந்தது.

அடுத்து எஸ்.பி.பி கீதாஞ்சலி படத்திலிருந்து ஒ ப்ரியா ப்ரியா பாட ஆரம்பித்தார். முதலில் ஹார்மனி துணையில்லாமல் பாடிய எஸ்.பி.பி பின்னர் ஹார்மனியுடன் இணைந்து பாடியபோது, ஆர்கெஸ்ட்ரா இந்தப் பாடலை வேறொரு புதிய பரிமாணத்திற்கு எடுத்துச் செல்வது தெளிவாகப் புரிந்தது.

“சொர்க்கமே என்றாலும்” பாடலை கடல் கடந்து வாழும் அயல் நாட்டு ரசிகர்களுக்காக முழுக்க முழுக்க வரிகளை மாற்றி சித்ராவுடன் இணைந்து பாடினார் ராஜா. பாடலை நடு நடுவில் நிறுத்தி விளக்கவும் செய்தார்.

யுவனும் என்.எஸ்.கே. ரம்யாவும் இணைந்து அடுத்து பாடிய பாடல் ‘நினைவோ ஒரு பறவை’. ஒரு அருமையான பாடலை கூட எப்படிக் கெடுக்க முடியும் என்று யுவன் மீண்டும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்தார். மிகவும் அருமையாகப் பாடி தன்னால் முடிந்த வரையில் இந்தப் பாடலைக் காப்பாற்ற முயற்சி செய்தார் என்.எஸ்.கே. ரம்யா.

இதன் தொடர்ச்சி விரைவில்…

Karthik developed an interest in music, early in his life. He is a trained Carnatic music vocalist and has been training since his school days. As a playback singer, he has sung a number of songs for many popular music directors, including Ilaiyaraaja, A.R.Rahman, Hamsalekha, Vidyasagar, Yuvan Shankar Raja, Harris Jeyaraj and Mani sharma. Karthik has sung songs in several languages – Hindi, Tamil, Kannada, Telugu and Malayalam. Won numerous awards including Filmfare Best Male singer in multiple languages, ITFA Best Male singer, Nandi Award, Tamil Isaiaruvi and much more.

Geeta Madhuri is an Indian playback singer. She has recorded several songs in Telugu including the soundtrack fro O Manasa. She was born on August 24, 1989 to Prabhakar Sastry and Lakshmi. She was the finalist in S.P.Balu’s Padutha Theeyaga on ETV. Her first song was Bakka Sikkina (folk song)

Geeta Madhuri’s first recording was for Kulasekhar’s film Premaleksh Rasa, though the film was not been released. It was the song Chamka Chamka from Ram Charan Tej’s debut making block buster Chiruta which got her recognition. Another super hit song from her is “Parvaledhu” from Manasara and also Ninne ninne title song from ‘NACHAVULE’ movie. She won Film Fare Award for Best Female Playback Singer – Telugu for the song “Magaallu Otti Maayagaalle” from the movie Golimar in 2011.

3 thoughts on “4-San Francisco Bay Area வுக்கு வந்த இசைஞானி இளையராஜா…

 1. சொர்க்கமே என்றாலும்…

  மாற்றிப் பாடிய பாடல் வரிகளையும் பதிவிடலாம்…

  • BaalHanuman March 5, 2013 at 9:20 PM Reply

   மன்னிக்கவும் தனபாலன். வரிகள் ஞாபகமில்லை. கடல் கடந்து வாழறீங்களே, நீங்கள் பாவம் என்று ஏதோ பாடினார்.

 2. கிரி April 7, 2013 at 11:01 AM Reply

  “ருடம் இங்கு வந்து எங்களை மகிழ்விக்க வேண்டும்’ என்றார். அதற்கு ராஜா புன்னகையுடன், ‘கடவுளாக இருந்தாலும் எப்போதாவது வந்தால் தான் மதிப்பிருக்கும். அடிக்கடி வந்தால் மதிப்பிருக்காது’ என்றார்”

  சரியா தான் கூறி இருக்காரு..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s