1-San Francisco Bay Area வுக்கு வந்த இசைஞானி இளையராஜா…


IR

சென்ற ஆண்டு நவம்பர் மாதமே நடந்திருக்க வேண்டிய நிகழ்ச்சி இது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் மார்ச் 1, 2013 வெள்ளி இரவு நடைபெற்றது.

நிகழ்ச்சியிலிருந்து சில துளிகள்…

வெள்ளி இரவு 7.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை (கிட்டத்தட்ட 4.30 மணி நேரம்) நடைபெற்ற நிகழ்ச்சி.

Bay Area Telugu Association – ம் (BATA), Kalalaya – ம் இணைந்து ஸ்பான்சர் செய்ததால் 50% தமிழ் மற்றும் 50% தெலுங்கு பாடல்கள். (மொத்தம் கிட்டத்தட்ட 36 பாடல்கள்)

இந்த நிகழ்ச்சியின் முக்கிய பாடகர்கள்:
SPB, சித்ரா, ஹரிஹரன், மனோ (நாகூர் பாபு), யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் மற்றும் கீதா மாதுரி

ஐம்பதுக்கும் மேற்பட்ட வாத்தியக்கலைஞர்கள். ஏகப்பட்ட வயலின்கள் மட்டும். ஒரு சிதார் பெண்மணி. தபலா, டபுள் பாஸ், ட்ரம் பேட்ஸ், அருண்மொழி புல்லாங்குழல் – இவர் பாடகரும் கூட. எல்லோரையும் co-ordinate செய்ய பள பள மொட்டைத் தலையுடன் கோட் சூட்டில் பிரபாகர்.

பளீரென்ற தும்பைப்பூ நிற வேஷ்டி சட்டையில், வழக்கமாக அணியும் சந்தனக் கலர் துண்டுடன் ராஜா நுழையும்போது அவருக்கு ஆரவாரமான வரவேற்பு -standing ovation – உடன். வந்தவுடன் ‘ஜனனி ஜனனி’ என்று அட்டகாசமாக ஆரம்பிக்கிறார். அரங்கம் முழுவதும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில். கருப்பு சிவப்பு உடையில் உற்சாகத்தின் மறு உருவமாக கார்த்திக்கின் entry – ‘ஓம் சிவோஹம்’ பாடலுடன். உடுக்கை ஒலியுடன் இடை இடையே ஒலிக்கும் ருத்ர மந்திரங்களுடன் இந்தப் பாடல் மீண்டும் நம் அனைவரையும் கட்டிப் போடுகிறது.

‘ஜகதானந்த காரகா’ என்ற தெலுங்குப் பாடல் – ஸ்ரீராமராஜ்யம் படத்திலிருந்து. பாடியவர்கள் எஸ்.பி.பி மற்றும் கீதா மாதுரி என்ற தெலுங்குப் பாடகி. இந்தப் பாடல் பாடுவதற்காக எஸ்.பி.பி நுழையும்போது அவருக்கு பிரமாதமான வரவேற்பு. ஒன்று நிச்சயம் குறிப்பிட வேண்டும். மனிதர் மிக மிக இனிமையாகப் பேசுகிறார். இளையராஜாவுடன் நிகழ்ச்சி முழுவதும் பேசிக் கொண்டே இருக்கிறார். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சித்ராவைக் கலாய்க்கிறார்.

‘இசையில் தொடங்குதம்மா’ என்று பாடியபடியே ஹரிஹரன் உள்ளே நுழைகிறார்…

இதன் தொடர்ச்சி விரைவில்…

Sripathi Panditaradhyula Balasubrahmanyam
 • Born 4 June 1946 is an Indian playback singer, actor, music director, voice actor and film producer.
 • He is referred to as S.P.B. or Balu.
 • He won the National Film Award for Best Male Playback Singer, Six times and the Nandi Awards, a record 25 times from Government of Andhra Pradesh.
 • He has sung over 40,000 songs in varios Indian languages.
 • He is the only playback singer in India to have won National Film Awards across four languages.
 • He has also won a National Award, three Filmfare Awards South and numerous state awards from Tamil Nadu and Karnataka.
 • He is the recipient of civilian awards Padmashri (2001) and Padma Bhushan (2011) from the Government of India.
 • Krishnan Nair Shantakumari Chithra
  • Popularly known as K.S.Chithra or simply Chithra (Born 27 July 1963), is an Indian playback singer.
  • Chithra sings Indian classical, devotional and popular music.
  • She has lent her voice to Malayalam, Kannada, Tamil, Telugu, Oriya, Hindi, Assamese, Bengali, Badaga and Punjabi films.
  • She is a recipient of Six National Film Awards (the most by any female singer), five Filmfare Awards South and more than thiry different state film awards.
  • She is the only singer to have won all the four South Indian state awards till date.
 • Hariharan
  • (Born 3 April 1955) is an Indian playback singer who has sung for Tamil, Hindi, Malayalam, Kannada, Marathi, Bhojpuri and Telugu films, an established ghazal singer and is one of the pioneers of Indian fusion music.
  • His melody is strongly appreciated by the film fraternity.
  • In 2004, he was honoured with Padma Shri by the Government of India.
  • Hariharan is a two time National Award winner.
  • Hariharan, associating with Leslie Lewis, formed Colonial Cousins, a two-member band.
  • They have cut many private music albums and also scored music for few feature films in Tamil cinema and Bolywood cinema.

Advertisements

5 thoughts on “1-San Francisco Bay Area வுக்கு வந்த இசைஞானி இளையராஜா…

 1. தொடர்கிறேன்… நன்றி…

 2. கிரி April 7, 2013 at 11:05 AM Reply

  இது நீங்களே எழுதியதா?

  • BaalHanuman April 8, 2013 at 4:11 AM Reply

   ஆமாம் கிரி. நிச்சயம் மண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை 🙂

 3. கிரி April 8, 2013 at 4:55 AM Reply

  🙂 ஸ்ரீநிவாசன் நீங்க ஏன் இது போல தொடர்ந்து எழுதக் கூடாது. மற்ற செய்திகளை பகிரும் போது நீங்களும் எழுதினால் நன்றாக இருக்கும். ரொம்ப அருமையாக எழுதி இருக்கீங்க அதுவும் குறிப்பாக நிறை குறைகளை எழுதி இருப்பது ரொம்பப் பிடித்தது. நிகழ்ச்சி பிடித்ததோ இல்லையோ உங்கள் எழுத்து ரொம்ப நன்றாக இருந்தது 🙂

  • BaalHanuman April 9, 2013 at 3:44 PM Reply

   கண்டிப்பாக கிரி. நிச்சயம் எழுதுகிறேன். உங்கள் அன்புக்கு நன்றி…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s