மிருகங்கள் — M.P.Pandit


mother-sitting

நகரத்திற்கு ஒரு சர்க்கஸ் வந்திருந்தது.  எங்களில் சிலர் ஸ்ரீ அன்னையுடனிருந்தபோது ஒரு சிங்கத்தின் கர்ஜனையும். உறுமல்களும் எங்கள் செவிகளில் விழுந்தன.  ஸ்ரீ அன்னை நிமிர்ந்து பார்த்தார்.  அப்பொழுது ஒருவர் அந்த ஒலிகள் சர்க்கஸ் கம்பெனியின் கூடாரத்திலிருந்து வருவதாகக் கூறினார்.  மேலும் அவர் மிக்க ஆர்வத்துடன் அந்த சிங்கங்கள் மிக அழகாக உள்ளனவென்றும், அவை மிகச் சிறந்த முறையில் வித்தைகள் செய்து காட்டுகின்றனவென்றும் கூறினார்.

ஸ்ரீ அன்னை தனது வழக்கமான புன்சிரிப்புடன் அவர் கூறியதைப் பாராட்டி மறுமொழி கூறவில்லை.  மாறாக, அவர் முகத்தில் உள்ளார்ந்த அக்கறை காணப்பட்டது.  அவர் தன் தலையை ஆட்டி, “ஒரு மாமனிதன் (சூப்பர்மேன்)  உங்களைச் சிறைப்பிடித்து ஒரு கூண்டில் அடைத்தால் உங்களுக்கு எப்படி இருக்கும் ?”  என்று வினவினார்.  சூழ்நிலை உடனே மாறியது.  எங்கள் மனோபாவத்தைத் திருத்திக் கொண்டோம்.
=

சாதகர் ஒருவர் தன் பராமரிப்பிலுள்ள மட்டக்காளை முரண்டு பிடிக்கிறதென்றும், அதனால் அவர் அதனிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டியுள்ளதென்றும் அடிக்கடி குறை கூறிக் கொண்டேயிருந்தார்.  ஸ்ரீ அன்னை அவரிடம் அந்த மட்டக்காளையை ஆசிரமத்தின் மாடியின் முன் முகப்பிற்கடியில் கொண்டு வந்து நிறுத்துமாறு பணித்தார்.  அவர் அவ்வாறு செய்ததும் ஸ்ரீ அன்னை வந்து அந்த மட்டக்காளையை சிறிது நேரம் உற்றுப் பார்த்தார். பிறகு அவர் கூறினார்  “கோளாரெதுவும் மட்டக்காளையிடம் இல்லை”  என்று.  ஏமாற்றமடைந்த அந்தச் சாதகரின் மனக்குழப்பத்தைக் கற்பனை செய்து பாருங்கள்!

Tamil Translation by R. Srinivasagopalan of
SIDELIGHTS ON THE MOTHER by M. P. Pandit

About the Author:

https://i0.wp.com/www.infobuddhism.com/infobuddhism/panditmp.png

Sri M. P. Pandit served as the personal secretary to the Mother at the Sri Aurobindo Ashram, and the Mother became the entire focus of his life. He studied the classical scriptures and living spiritual traditions of India, following in the footsteps of Sri Aurobindo and Sri T.V. Kapali Sastry.

His writing career spanned six decades, publishing over 150 books and many articles on subjects as diverse as philosophy, spirituality, social and political thought, science, religion, mysticism and the classical texts themselves. At the same time he became a commentator on the teachings whose powerful insights went right to depths and essence of the meaning.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s