டி.டி.எஸ்.ஸில் இளையராஜா பாடல்கள்!


இளையராஜாவின் பழைய பாடல்களைப் புதுப் பொலிவோடு 6.1 சவுண்ட் டிராக்கில் ஒலிப்பதிவு செய்திருக்கிறார் கோவை சவுண்ட் இன்ஜினீயர் முத்துச்சாமி. அந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்:

இந்த ஐடியா எப்படி வந்தது?

இளையராஜாவின் பாடல்களை ஸ்டீரியோ முறையில் இசைக்கருவிகளின் அதிர்வுகளை லெப்ட் சானல், ரைட் சானல் மூலம் தெளிவாகக் கேட்க முடிந்தது. தொழில் நுட்பம் காரணமாக ஸ்டீரியோ முறை மேக்னட்டிக் கேசட்டாக மாற்றப் பட்டு பேஸ், ட்ரபிள், பாலன்ஸ் வழியாக இன்னும் தெளிவாக ரசிக்க முடிந்தது. அடுத்து டிஜிட்டல் முறையில் சி.டி.களாக இசைக் கருவிகளின் இசை டிராக்குகளாக மட்டுமே வைக்கப்பட்டது. இதில் ஸ்டீரியோவில் உள்ளது போல ட்ராக்குகள் சானல்களாகப் பிரிக்கப்படவில்லை. அடுத்த கட்டமாக டி.டி.எஸ். வந்தது. இதில் ஹாலிவுட் படங்கள், தமிழ்ப்படங்கள் வெளிவந்தன. டி.டி.எஸ். சவுண்ட்டில் இசை டிராக்குகள் 6 சானல்களாக வைக்கப்பட்டு தியேட்டரில் கேட்கும்போது நமக்குப் புதிய அனுபவத்தைத் தந்தது. 2011-க்குப் பிறகு டிஜிட்டல் வீடியோ வந்தது. இதில் சானல்கள் இல்லாத ஒலி மட்டுமே கிடைத்தது. இவை எம்.பி.3க்களாகவும், டவுன் லோட் ஆடியோ பார்மட்டாகவும் மாறிவிட்டன. இதில் இளையராஜாவின் ஒரிஜினல் இசையைக் கேட்க முடியாது. எனவே ஹை-பி. ஸ்டீரியோ மற்றும் டி.டி.எஸ். தொழில்நுட்பத்தில் இளையராஜாவின் பழைய பாடல்களை மாற்ற வேண்டும் என முடிவு செய்தேன்.”

இளையராஜாவின் ஒப்புதல்?

இளையராஜாவைச் சந்தித்து ஹை-பி. ஸ்டீரியோ மற்றும் டி.டி.எஸ். தொழில்நுட்பத்தில் பழைய பாடல்களை மாற்ற அனுமதி தரும்படி கேட்டேன். மகிழ்வுடன் அனுமதி தந்தார். அதன்பிறகு அவரின் மேற் பார்வையில் 1976-ம் ஆண்டு முதல் 1981வரை உள்ள 100 படங்களின் அதாவது அன்னக்கிளி முதல் சங்கர்லால் வரை 500 பாடல்களை ஹை-பி. ஸ்டீரியோ மற்றும் டி.டி.எஸ். தொழில்நுட்பத்தில் மாற்றினோம். மற்ற படங்களின் பாடல்கள் மாற்றும் பணி நடந்து வருகிறது.”

எவ்வளவு காலம்?

ஒரு பாடலை டி.டி.எஸ். முறையில் மாற்ற குறைந்தது 10 முதல் 20 மணி நேரமாகிறது. சில நேரங்களில் 3 நாள் ஆகிறது. இப்படிப் பல நாட்கள் இரவு பகலாக கண்விழித்து டி.டி.எஸ்.சவுண்ட்டுக்கு மாற்றியுள்ளோம்.”

வித்தியாசம்?

பாடலை கம்போசிங் செய்யும் போது உள்ள இசைக்கருவிகளின் இசையைத் தெள்ளத் தெளிவாக துல்லியமாக டி.டி.எஸ். சவுண்ட்டில் 6 சானல்களில் ஆனந்தமாகக் கேட்டு ரசிக்கலாம்.”

வெளியாகி விட்டதா?

டி.டி.எஸ். சவுண்டில் ரசிகர்களுக்கு முன்னோட்டமாக 4 சி.டி.க்கள் வெளியிடப் பட்டுள்ளன. இசைப் பிரியர்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர். ”

வேறு?

இளையராஜாவின் பாடல்களைத் தொகுத்து மியூசியமாக வைக்க வேண்டும்.

–நன்றி கல்கி

Advertisements

13 thoughts on “டி.டி.எஸ்.ஸில் இளையராஜா பாடல்கள்!

 1. கேட்டுப் பார்க்க வேண்டும்…

  கோவை சவுண்ட் இன்ஜினீயர் முத்துச்சாமி அவர்களின் அயராத உழைப்பிற்கு, ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள்…

 2. Ramesh.S March 19, 2013 at 4:44 PM Reply

  Sir, where can I get the Audio CDs?

 3. BaalHanuman March 19, 2013 at 4:49 PM Reply

  Dear Ramesh,

  I just shared this article from Kalki. You may want to contact Kalki office to get more details on this.

  Thanks for your understanding.

 4. BaalHanuman March 19, 2013 at 5:00 PM Reply

  வெளியாகி உள்ள நான்கு ஆடியோ “சிடி’களும், “5 டிராக்’ மற்றும் “2 டிராக்’ என, இரு வடிவங்களில் வெளியாகியுள்ளன. 14 பாடல்கள் கொண்ட ஒரு “சிடி’யின் விலை ரூ.125. மதுரையில் விற்பனைக்கு வந்த ஒரு வாரத்தில், பெரும்பாலான “சிடி’கள் விற்பனையாகியுள்ளன.

  மதுரை கீஷ்டுகானம் உரிமையாளர் துளசிராம் , ’’கோவை சவுண்ட் இன்ஜினியர் முத்துசாமி என்பவர், கடும் முயற்சிக்கு பின், இந்த வடிவத்தில் தயாரித்துள்ளார். தற்போதைய தலைமுறை, “டி.டி.எஸ்.,’ ஒலியை விரும்புவதால், வந்த வேகத்தில், “சிடி’கள் விற்பனையாகி வருகின்றன’’ என்கிறார்.

  கீஷ்டுகானம் .. மதுரை பெரியார் நிலையம் வர்த்தக வளாகத்தில் உள்ள ஒரு ஒலிநாடா கடை. பல ஆண்டுகாலமாக இந்த கடை உள்ளது. மற்ற கடைகளில் விட இங்கு விலை குறைவு என்று சொல்ல முடியாது இருப்பினும். இவர்கள் இங்கு தவிர டவுன் ஹால் ரோடு மற்றும் கோரிப்பாளையம் ஆகிய இடங்களில் கடை திறந்து உள்ளனர்.

 5. RameshS March 20, 2013 at 6:01 PM Reply

  Thanks a lot for the information! In fact, whenever I travel to Madurai, don’t miss to visit Keeshtu Gaanam, Will try through my friends in Madurai!

 6. RameshS May 10, 2013 at 2:07 PM Reply

  Today I bought the CDs – both HiFI Stereo and DTS versions at Keeshtu Gaanam,. Thank you so much!!

 7. Arvind May 12, 2013 at 2:05 PM Reply

  i am not satisfied with that music. nothing spl there.

 8. Arvind Swaminathan June 25, 2013 at 1:37 AM Reply

  இவர் தயாரித்தளித்த நான்கு சிடிக்களையும் மதுரை கீஷ்டு கானத்தில் வாங்கினேன். அது டிவிடி ப்ளேயரிலும் இயங்கவில்லை. கணிணியிலும் இயங்கவில்லை. வேறு ஒரு சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்து கணிணியில் கேட்டேன். ஏனோ ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை. என்னிடம் இருப்பது 4 ஸ்பீக்கர் மட்டுமே. ஆறு இருந்தால் தான் அந்த எஃபெக்ட் வருமோ?

  சிறுவயதில் ராஜாவின் பாடல்களை ஸ்டீரியோ எஃபெக்டில் கேட்பதற்காக ஸ்பீக்கரை தனியாக எடுத்து ப்ளாஸ்டிக் குடத்தின் வாயில் வைத்துக் கேட்டது ஞாபகத்திற்கு வருகிறது சார்.

 9. PRAKASH.D April 1, 2016 at 8:53 AM Reply

  இந்த 5.1இசைதட்டுக்கள் எங்கு கிடைக்கும். எனக்கு வேண்டும்

 10. PRAKASH.D April 1, 2016 at 8:57 AM Reply

  கோவையில் எங்கு கிடைக்கும் சார்

  • BaalHanuman April 3, 2016 at 2:21 AM Reply

   If you are in CBE You can visit the below office & get the CD’s

   HIFI +Stereo – Cars & all players + Home theatre
   DTS Cd’s – will only work in the following players & home threaters ,
   3D Blue-Ray, Sony,Yamaha,Denon,Onkyo,
   OPTICAL & HDMI home theatre only

   For Cars – HIFI + Stereo

   Please specify Wether you want DTS or HIFI+ Stereo
   Note : There are 8 Hi-fi and 6 Dts Collections available .
   14 Cd’s at INR110 each will be available for Oversea Sale ,
   Courier Charges is applicable .

   Pls refer honeybeemusicstudio.com for more information

   Muthusamy,
   HONEY BEE MUSIC ,
   34, Grey town ,
   COIMBATORE – 18
   9443708290

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s