இளையராஜா பற்றி சொக்கன்…


தமிழ்த் திரைக் கலைஞர்களில், இளையராஜா அளவுக்குத் தனது கலைத் திறமையின் சகல சாத்தியங்களையும் முழுமையாகப் பயன்படுத்துகிற / நிரூபிக்கிற வாய்ப்புக் கிடைத்தவர்கள் அநேகமாக யாருமே இல்லை. ஓர் திரை இசையமைப்பாளராக என்னவெல்லாம் செய்யமுடியுமோ அத்தனையையும் செய்து பார்த்துவிட்ட இளையராஜா, பணம், புகழ், ரசிகர்கள், பாராட்டுகள், விருதுகள் என எல்லாமே நிறைய சம்பாதித்துவிட்டார், அதன்பிறகும் தொடர்ந்து பாடல்களை உருவாக்கிக்கொண்டிருக்க அவருக்கு எது ஊக்கம்? திரும்பத் திரும்ப அதே சூழ்நிலைகள், அதே பல்லவி, அனுபல்லவி, சரணக் கட்டமைப்பு என்று போரடிக்காதா?

அடுத்தபடியாக, ஒருகாலத்தில் நிஜமான ‘ராஜா’வாக இருந்த இளையராஜா, இப்போது பத்தோடு பதினொன்றுதான். உணர்ச்சிவயப்படாமல் யோசித்தால், அவர் பாடலைத் தேடிப் பிடித்துக் கேட்கிற ரசிகர்களைத்தவிர, மற்றவர்கள் ராஜாவைப் பொருட்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை.

இந்தச் சூழ்நிலையை அவர் எப்படிப் பார்க்கிறார்? தன்னுடைய சொந்த மகன், மற்ற புதிய இசையமைப்பாளர்களின் பாடல்கள் அடைகிற பிரபல்யத்தில் ஒரு சின்னத் துளியைக்கூடத் தன்னால் எட்டிப்பிடிக்கமுடிவதில்லையே என்று அவர் வருந்துவாரா? பிரபல்யம் என்பது தரத்துக்கான அளவுகோல் இல்லைதான். என்றாலும், தான் ராஜாவாக வாழ்ந்த வீட்டில் இன்னொருவர் கொடி பறப்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்காதா? அதற்கும் இசைதான் அவருக்கு மருந்தா?

இப்போதைய மனோநிலையில், இளையராஜா தனது சுயசரிதையை எழுதினால் ஒரு ஜீனியஸின் மனம் எப்படி இயங்குகிறது என்பதை நாம் புரிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும்.

***

என். சொக்கன் …

17 01 2009

N. Chokkan

என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாகசுப்பிரமணியன் சொக்கநாதன், பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றுபவர். நோக்கியா நிறுவனம் வெற்றிபெற்ற கதையை விரிவாக விவரிக்கும் நோக்கியா: கொள்ளை கொள்ளும் மாஃபியா’ என்ற புத்தகம் இவரது சமீபத்திய ஹிட். சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.

2 thoughts on “இளையராஜா பற்றி சொக்கன்…

 1. ரெங்கசுப்ரமணி February 21, 2013 at 5:30 PM Reply

  இளையராஜவை இன்றைய இளைஞர்கள் அவ்வளவாக பொருட்படுத்துவது இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. இன்றும் நான் கேட்பது இளையராஜாவைத்தான். எனக்கு பத்து வயதிருக்கும் போது ஏ.ஆர். ரகுமான் வந்துவிட்டார். அனைவரும் சொல்வது போல் இளையராஜா காலத்து ஆட்கள்தான் அவரை விரும்புகின்றர்கள் என்பதெல்லாம் சும்மா. இளையராஜாவை கேட்ட பின், வேறு யாரையும் கேட்கப் பிடிக்கவில்லை.

  கேட்க கேட்கதான் பிடிக்கும் என்றால அது என்ன மாதிரியான இசையோ. முதல் முறை கேட்டவுடன் உள்ளே சென்று அமர வேண்டும். இளையராஜாவின் பிண்ணணி இசை போல் வேறு யாராலும் செய்ய முடியவில்லை. ஒரு ஐந்து செகண்ட் கேட்டால் உடனே சொல்லி விடலாம் என்ன படம் என்று. யுவன் மட்டும்தான் கொஞ்சம் நெருங்கி வருகின்றார். இதோ இதை டைப் செய்யும் போது பின்னால் ஹவ் டு நேம் இட் ஓடுகின்றது. அந்த வயலின் உள்ளே சென்று என்னமோ செய்கின்றது.

  //தன்னுடைய சொந்த மகன், மற்ற புதிய இசையமைப்பாளர்களின் பாடல்கள் அடைகிற பிரபல்யத்தில் ஒரு சின்னத் துளியைக்கூடத் தன்னால் எட்டிப்பிடிக்கமுடிவதில்லையே என்று அவர் வருந்துவாரா? // இந்த வரி உண்மையில் புரியவில்லை. ஏ.ஆர்.ரகுமான் தவிர வேறு எந்த இசையமைப்பாளார் இந்தியாவை தாண்டிவிட்டார். தமிழகமே கொண்டாடிய தியாகராஜ பாகவதர் இப்போது சிம்புவை பார்த்து வருந்துவாரோ என்பது போல் இருக்கின்றது.

  ஒரு சின்ன டாம்டாம். இளையராஜா எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்.

  இன்னும் நிறைய எழுதலாம், பின்னூட்ட பெட்டியில் கட்டுரை எழுதக்கூடாது என்பதால் அந்தே

 2. SatheeshPrince February 23, 2013 at 10:52 PM Reply

  இளையராஜா இளையராஜா தான்.நீங்கள் அவரை மற்றவர் உடன் பொருத்தி பேசுவதே தவறு.விட்டால் M.S.V யும் இப்போது வருத்த படுகிறார் என்று சொல்லுவீர்கள் போல. உங்கள் உள்உணர்வுடனும், உங்கள் ஆத்மா விடமும் பேசும் ஒரே இசை இளையராஜாவின் இசை தான். இப்போது இருக்கும் இசையில் வெறும் சத்தமும் , தொழில்நுட்பமும் மட்டுமே உள்ளது…உயிர் இல்லை…இன்னும் நிறைய சொல்லிகொண்டே போகலாம்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s