ஒரு எளிய கத்திரி ரெஸிபி — வித்யா (கல்கி ரசிகை)


vidya

எளிய கத்திரி ரெஸிபி.

(வேறு யாராவது ஏற்கெனவே முயன்றிருக்கக் கூடுமோ , பாரம்பரிய எண்ணைக்கறி, ரசவாங்கி, பிட்லை ரசிகர்கள் ஒத்துக் கொள்வார்களா என்றெல்லாம் தயக்கங்கள் இருந்தாலும் ஆடின காலும் கமென்ட் டைப் பண்ணின கையும் சும்மா இருக்காது என்று பெரியவர்கள் சொல்லியிருப்பதால் பகிர்ந்து கொள்கிறேன்.)

கத்திரிக்காயை பிட்லைக்கு நறுக்குவது போல் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் அதே அளவுக்கு நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் வெறும் கடுகு மட்டும் தாளித்துக் கொண்டு நறுக்கி வைத்த தக்காளி மற்றும் கத்திரிக்காய்களை ஒரே நேரத்தில் சேர்த்தே போட்டுவிட்டு அதன் தலையில் மஞ்சள் பொடியைத் தூவிக் கிளறி மூடி வைத்து (மூடுவது முக்கியம்) ஸிம்மில் வைத்து விட்டு பால் ஹனுமான் தளத்தில் ஓரிரு பதிவுகள் புரட்டி விட்டுத் திரும்பிப் போய்ப் பார்த்தால் கத்திரி தக்காளிக் கூட்டணி மினுமினுப்பாக ஒன்று சேர்ந்திருக்கும்.
உப்பும் கொஞ்சம் ரசப் பொடியும் போட்டுப் புரட்டி மூடி விட்டு வந்து பால் ஹனுமான் தளத்துக்கு என்னை மாதிரி முந்திரிக் கொட்டைத்தனமாக ஒரு கமென்ட் அடித்துவிட்டு மீண்டும் கிச்சனுக்குள் போனால் ஐட்டம் ரெடி. அதைக் கூட்டு என்பதோ கறி என்பதோ ஸைட் டிஷ் என்று பொதுமைப்படுத்துவதோ அவரவர் விருப்பம். சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். பொங்கல், தயிர்சாதம், சப்பாத்திக்கு நல்ல பொருத்தமான ஜோடி.

vidya

Advertisements

4 thoughts on “ஒரு எளிய கத்திரி ரெஸிபி — வித்யா (கல்கி ரசிகை)

 1. vidya (@kalkirasikai) February 13, 2013 at 6:50 PM Reply

  எனது கமென்டைத் தனிப்பதிவாகப் போட்டதைப் பார்த்துக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. இவ்வளவு பெரிய கௌரவத்தை எதிர்பார்க்கவில்லை பால் ஹனுமான். நன்றி! நன்றி!! நன்றி!!!

 2. ஓ… கருத்துரையே ஒரு பதிவா…?

 3. BaalHanuman February 14, 2013 at 4:21 PM Reply

  அன்புள்ள வித்யா,

  உங்கள் எளிய ரெசிபி இப்போது காபி ரைட் பெற்றுள்ளது 🙂

  ****************
  Copyright :: All Rights Reserved
  Registered :: 2013-02-14 16:00:52 UTC
  Title :: ஒரு எளிய கத்திரி ரெஸிபி — வித்யா (கல்கி ரசிகை)
  Category :: Blog
  Fingerprint :: d2bad2081444c3a7dfc604458a3b7971374da62b86c60673ea6e5d64941db064
  MCN :: EYYQ4-WYB6Q-MTUGM

  ****************

 4. vidya (@kalkirasikai) February 15, 2013 at 4:07 AM Reply

  மிக்க மகிழ்ச்சி. நன்றி பால் ஹனுமான். உங்கள் தளம் ஐந்து புலன்களுக்கும் விருந்து தந்து கொண்டிருக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s