படிப்பிலே ‘மக்கு’ ன்னு நீ நெனச்சியோ ?


  A Very Rare Photo of Sri Maha Swamigal

Baranidharan

1956-ம் ஆண்டு முதல் ஆனந்த விகடனில் ஸ்ரீதராக கார்ட்டூன்களிலும் மெரினா’ வாக நாடங்களில் பரிமளித்தவர் என்றாலும் பரணீதரனாக அவர் ஆற்றிய ஆன்மிகத் தொண்டுகள் அநேகம்.தன் உருக்கமான எழுத்தால் பல உள்ளங்களைக் கவர்ந்தவர்.
பரணீதரன் கூறுகிறார்……

நான் திண்டிவனம் பள்ளிக்கு சென்று பெரியவா படித்ததற்கு அடையாளமாக ஏதாவது கிடைக்குமா என்றஆர்வத்தில் தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் பழைய ரெக்கார்ட்கள் வைக்கப்பட்டிருந்த அறையை துழாவினேன். அதிசயத்திலும் அதிசயமாக ஒரு வருகை பதிவேட்டின் ஒரே ஒரு காகிதம் மட்டும் கிடைத்தது. அது 1904 ஆம் வருடம், பெரியவா ரெண்டாம் பாரம் படித்தபோது, அந்த வகுப்பின் வருகை பதிவேட்டின் ஒரு ஷீட்.

அதில் ‘சுவாமிநாதன்‘ என்ற பெயரை கண்டபோது எனக்கு மகிழ்ச்சி நிலைகொள்ளவில்லை. மறுநாளே,ஆந்திராவில் இருந்த பெரியவாளை தரிசிக்க சென்றேன்.

நடுநிசி, பூர்ண நிலா, பெரியவா ஓர் ஊரில் இருந்து வேறோர் கேம்ப் க்கு மேனாவில் பயணித்து கொண்டிருந்தார்.கூடவே ஓடி, திண்டிவனம் சென்ற விவரத்தையும், ‘வருகை பதிவேடு‘ காகிதம் கிடைத்த செய்தியையும் கூறினேன். சற்று தொலைவு சென்றதும் மேனா நின்றது. உடன் வந்தவர்களையும் மேனாவை தூக்கி வந்தவர்களையும் ஆகாரம் செய்து விட்டு, வரும்படி பணித்துவிட்டு, பெரியவா அந்த வருகை பதிவேட்டு ஷீட்டை வாங்கி டார்ச் லைட் லென்ஸ் உதவியோடு பார்த்தார். முகம் மலர்ந்தது.

இது எப்படிடா உனக்கு கிடச்சுது? என்று ஆச்சரியத்துடன் கேட்டு விட்டு, அதில் இருந்த பெயர்களைஒவ்வொன்றாக படித்தார். அறுபத்து நான்கு வருடங்கள் முந்தய நாட்களின் நினைவுகளில் ஒரு கணம் மூழ்கிபோனார். தம்முடன் ரெண்டாம் பாரத்தில் படித்த மாணவர்களை நினைவு கூர்ந்தார்.

அவர்களில் யார் யார் அப்போது உயிருடன் இல்லை என்பதையும் மற்றவர்கள் எந்த ஊரில் இருக்கிறார்கள் என்பதையும் சொன்னார்.

இறுதியாக, ‘என் பேர் எல்லோருக்கும் கடைசிலே இருக்கே, பெரியவா படிப்பிலே ‘மக்கு‘ன்னு நீ நெனச்சியோ?’என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.

‘இல்லே, பெரியவா பேர் ஏன் கடைசிலே இருக்குன்னு நெனச்சிண்டேன்’ என்ற உண்மையை சொன்னேன்.

‘என் பூர்வாச்ரம தகப்பனாருக்கு ஸ்கூல் இன்ஸ்பெக்டர் உத்தியோகம். அடிக்கடி அவரை, ஊர் மாத்திடுவா.சிதம்பரத்திலேருந்து திண்டிவனத்துக்கு செப்டம்பர் மாசம் மாத்தலாயி வந்தார். பாதியிலே வந்து இந்த ஸ்கூல்லே சேர்ந்தேன். அதனால தான் என் பேரு கடைசிலே இருக்கு’ என்று விளக்கம் தந்தார்.

பரமாச்சாரியாருக்கோ, அவரது அன்புக்கும் அருளுக்குமோ அறிமுகம் தேவையில்லை. அவ்வண்ணமேதான் பரணீதரனின் மயிலிறகு எழுத்துக்கும். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த பரணீதரனின் இந்நூல், படிக்கும்போது உருவாக்கும் பரவசத்தைச் சொற்களில் விவரிக்க முடியாது. பக்தியின் மிகக்கனிந்த நிலையைத் தொட்டு லயித்து, அதிலேயே நீந்திக்கொண்டிருப்பவர் அவர்.

பரமாச்சாரியாருடனானஅவரது பரவச அனுபவங்கள், வெறும் வார்த்தைகளாக அல்லாமல் மகாபெரியவரின்ஆசியாகவே நம்மை ஆட்கொண்டுவிடுகின்றன. 1956-ம் ஆண்டு முதல் ஆனந்த விகடனில் ஸ்ரீதராக கார்ட்டூன்களிலும், மெரீனாவாக நாடகங்களிலும் பரிமளித்தவர் என்றாலும், பரணீதரனாக அவர் ஆற்றிய ஆன்மிகத் தொண்டுகள் அநேகம். இந்நூல்,பரமாச்சாரியாரின் பேரருளைச் சுமந்து வருகிறது. அள்ளிப் பருகுங்கள்! ஆனந்தமாக!

3 thoughts on “படிப்பிலே ‘மக்கு’ ன்னு நீ நெனச்சியோ ?

 1. venkat February 11, 2013 at 3:01 AM Reply

  சிறப்பான புத்தகம் பற்றிய அறிமுகம்…. அடுத்த பயணத்தின் போது வாங்கிவிடுகிறேன்…..

  • BaalHanuman February 12, 2013 at 12:42 AM Reply

   கண்டிப்பாக நீங்கள் படிக்க வேண்டிய புத்தகம் இது, வெங்கட்.

 2. sivasubramaniam September 17, 2014 at 3:53 AM Reply

  Sri Sankara Baktha Jana Sabha Trust Thenambakkam, Kanchipuram has published a book called “Sri Divya Darshan of Sri Kanchi Mahaswami” containing more than 550 photographs of Sri Mahaperiyava arranged chronologically right from His school days till Kanakabhishekam. The uniqueness of the book is that every photo is captioned with details of the photo like who is accompanying Mahaperiyava, what was the event when it was taken like, its just like a pictorial biography of Mahaperiyava. The book is given free of cost to devotees who donate 2000 to the Thenambakkam veda patashala. Those interested can contact 9840865408

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s