கொஞ்சம் சுய புராணம்!


பெண்ணின் கல்யாணத்திற்காக மூன்று வாரம் இந்தியப் பயணம். எங்கள் குல தெய்வம் ஒப்பிலியப்பன் கோவில் – ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தில் ஜனவரி 18 கல்யாணம்.

சென்னை உட்லண்ட்ஸ்-ல் ஜனவரி 20 மாலை ரிசப்ஷன்.

வரவேற்புக்கு நேரில் வந்து வாழ்த்திய பிரபலங்கள்:

திரு கடுகு அகஸ்தியன் அவருடைய மனைவியுடன்


திரு பாரதி மணி அவர்கள்

Photo: Bharati Mani - Collage I

திருமணம் மற்றும் வரவேற்புக்கு வந்து தம்பதிகளை வாழ்த்தி இசை விருந்து படைத்து அசத்திய குடும்ப நண்பரும் மஹா பெரியவாளின் பரம பக்தருமான திரு. சந்தானகோபாலன் (தனது இல்லத்துக்கே ‘பெரியவா பிச்சை‘ என்று பெயர் வைத்துள்ளார்)

என் அபிமான எழுத்தாளர் சொக்கன் (பெங்களூரில் வசிக்கும் அவர் சில தினங்கள் சென்னை வந்திருந்தார்) – இவரை முதல் முறை நேரில் சந்திக்கிறேன்.

N. Chokkan
அமெரிக்காவிலிருந்து வெளி வரும் தென்றல் மாத இதழின் Associate Editor திரு அரவிந்த் சுவாமிநாதன் (ரமணர் ஆயிரம் மூலம் நமது வாசகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர் தான் இவர். இவரைப் பற்றி ஒரு தனிப் பதிவு விரைவில்…)


துபாய் நண்பர் திரு.ராஜகோபாலன்  (பின் வரிசையில் மின்னல் வரிகள் பால கணேஷ் பக்கத்தில்… முன் வரிசையில் திரு அரவிந்த் சுவாமிநாதன் மற்றும் திரு பாரதி மணி)

IMG_20130120_195840-001
வீடு திரும்பல் மோகன் குமார்


மின்னல் வரிகள் கணேஷ்

[Ganesh-2.jpg]

நேரில் வர இயலாத காரணத்தால் மின்னஞ்சல் மூலம் வாழ்த்துத் தெரிவித்த பிரபலங்கள்:

இங்கிலாந்தில் வசிக்கும் நண்பர் Essex சிவா

Essex_Siva

தாம்பரத்திலிருந்து நண்பர் ஆர்.ஜகன்னாதன்

நண்பர் சுஜாதா தேசிகன்

Desikan Narayanan
எழுத்தாளர் பா.ரா


சிங்கப்பூர் பதிவர் மற்றும் நண்பர் கிரி

Langkawi ஒரு நாளில் ஒரு லட்சம்  கதையல்ல நிஜம்!

அலுவலக விஷயமாக சரியாக அந்த வாரம் பெங்களூர் சென்றதால் வரவேற்பில் கலந்து கொள்ள முடியாத நண்பர் சந்திரமௌலீஸ்வரன்

ரிசப்ஷன் முடிந்து கிடைத்த ஒரே நாள் அவகாசத்தில் சில மணி நேரம் புத்தகக் கண்காட்சி விஜயம்.

வாங்கிய புத்தகங்கள்:

விகடன் பதிப்பகம்
 தென்னாட்டுச் செல்வங்கள் பாகம் 1,2
விகடன் சுஜாதா மலர்கோபுலு ஜோக்ஸ் (பாகம் 1)

சங்கீத சங்கரர் காஞ்சி மகா பெரியவர்
கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்காமகோடி பெரியவா
மகா பெரியவர்ஸ்ரீரமண மகரிஷி
தீட்சிதர் பாடிய திருத்தலங்கள்ஆலயம் தேடுவோம் (பாகம் 2)

கல்கி பதிப்பகம்
பகவான் பாபாகண்ணனைத் தேடி

கங்கை புத்தக நிலையம்
பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள் – கங்கா ராமமூர்த்தி

குமுதம் பதிப்பகம்
பால் நிலாப்பாதைஎனக்கு எதுவோ உனக்கும் அதுவே

கிழக்கு பதிப்பகம்
ஸ்ரீரங்கத்து தேவதைகள்ட்விட்டர் வெற்றிக் கதைஃபேஸ் புக் வெற்றிக்கதைஸ்ரீ வைஷ்ணவம்
captureவிலங்குப் பண்ணை

மதி நிலையம்

MN37328 thoughts on “கொஞ்சம் சுய புராணம்!

 1. vidya (@kalkirasikai) February 9, 2013 at 10:21 AM Reply

  மணமக்களுக்கு வாழ்த்துகள். புத்தகக் கண்காட்சியில் அறுவடை செய்து வந்த பட்டியல்களைப் பார்த்தால் எங்களுக்கு சுவையான விருந்துகள் காத்திருப்பது புரிகிறது. கல்யாண விருந்துக்கு நேரில் வராத குறை தீர்ந்து விடும்.

  • BaalHanuman February 9, 2013 at 5:27 PM Reply

   உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி வித்யா. நீங்கள் அவ்வளவு எளிதில் தப்பித்து விட முடியுமா என்ன 🙂

 2. srinivasan (@sathishvasan) February 9, 2013 at 12:27 PM Reply

  பெண்ணுக்கு கல்யாணமா? மணமக்களுக்கு வாழ்த்துகள். ! #மூன்று வாரம் இந்தியப் பயணம் # ஓ ! முன்பே தெரிந்திருந்தால் சந்திருத்திருக்கலாம் ! “( நான் இன்னும் சென்னையில் 🙂 # ஒப்பிலியப்பன் கோவில் # சூப்பர் பெருமாள் ! புத்தகங்கள் !நீங்கள் வாங்கிய புத்தகங்கள் சிலவற்றை வாங்கினேன் ! சுஜாதா மலர் -ம் ம் விகடன் வியாபார தந்திரம் ! படித்துவிட்டு எழுதுங்கள்!

  அன்புடன்,
  சத்திஷ்

  • BaalHanuman February 9, 2013 at 5:26 PM Reply

   அடடா, தெரியாமல் போய் விட்டதே, சதீஷ்… முன்பே தெரிந்திருந்தால் உங்களை சந்தித்திருக்கலாம் 😦
   உங்கள் வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி…

 3. சுயபுராணம் நன்று… இதில் அறிந்த நண்பர்கள் மூவர் மட்டுமே…

  • BaalHanuman February 9, 2013 at 5:23 PM Reply

   நல்லது தனபாலன். புதிய நண்பர்களை அறிந்து கொள்ள உங்களுக்கு ஒரு வாய்ப்பு 🙂

 4. பாரதி மணி February 9, 2013 at 5:45 PM Reply

  மீரா கல்யாண…..வைபோகமே!


  அன்புள்ள ஸ்ரீனிவாசன்,

  நேற்று குழந்தை கல்யாண ரிஸப்ஷனுக்கு வந்தது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் சந்தித்துப்பேசினேன். அதென்ன…எல்லோருமே நல்லவர்கள் என்ற ISI முத்திரையுடன் இருக்கிறார்கள்? வெகுநாட்களுக்குப்பிறகு என் சொந்தக்குடும்பத்தினரை சந்தித்ததுபோல இருந்தது!

  நெய்வேலி கச்சேரி ரொம்பவே பிரமாதம்! கல்யாணக்கச்சேரி போலவே இல்லை……மனதைத்தொட்டது. இதுவரை பார்த்திராத முகநூல் நண்பர்களையும் பார்க்க வாய்த்தது.

  மணமக்களுக்கு என் மனது நிறைந்த ஆசிகள். உங்கள் நட்பெல்லாம் எனக்கு ஒரு கொடுப்பினை தான்!

  அன்புடன்,

  பாரதி மணி
  Bharati Mani

 5. PSR (கடுகு) February 9, 2013 at 5:49 PM Reply


  Dear Sir,

  Meera’s wedding reception was a beautiful event. Not only Mrs Uppili and you attended the guests with warmth and smile. your daughter Meera went one step ahead. As we entered the lawn, She saw us and next second she addressed me Mama and introduced Ram to us.

  When we were waiting to go to the stage, she came down from the stage, and asked us to come up. I can never imagine a bride to personally atttend guests. It not only shows her real character but also tells a lot about her upbringing. We wish her a very happy married life and bright future. Ram looks smart and handsome.

  PSR

 6. Pa Raghavan February 9, 2013 at 5:55 PM Reply


  அன்புள்ள ஸ்ரீனிவாசன்

  நிச்சயமாக ரிசப்ஷனுக்கு வரவே விரும்புகிறேன். எனது பெரும் பிரச்னை, என் வேலையின் தன்மை. எந்த நேரமும் கழுத்து நெரிப்பு வரும். அதனால்தான் மனைவி உள்பட யாருக்குமே வாக்களிக்க மிகவும் யோசிப்பேன்.

  இருப்பினும் எப்படியாவது உங்கள் மகள் திருமண வரவேற்புக்கு வர முயற்சி செய்கிறேன்.

  தங்கள் மகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்து. எம்பெருமானின் பூரண அருள் அவர் வாழ்வெல்லாம் தொடரப் பிரார்த்திப்பேன்.

  அன்புடன்
  பாரா/

 7. Sujatha Desikan February 9, 2013 at 5:59 PM Reply


  Convey my best wishes to your daughter and son in law.

 8. Arvind Swaminathan February 9, 2013 at 6:07 PM Reply


  திரு. உப்பிலி ஸ்ரீனிவாஸ்.

  மிக்க நன்றி.

  உங்கள் மகள் திருமண நிகழ்வு ஒரு மறக்க முடியாத தருணம். பாரதிமணி, கடுகு, சொக்கன், நீங்கள் என பலரைச் சந்திக்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி மற்றும் நிறைவு.

  என்றும் அன்புடன்
  அரவிந்த்

 9. raju February 9, 2013 at 6:09 PM Reply

  Dear Sri. Uppili Srinivasan,

  Namaskarams.

  We had a pleasant evening on 20-Jan-13, attending Meera’s wedding reception.

  It was made memorable by the meeting with Sri. BharathiMani, Aravin Swaminathan, chokkan.Mr. Bharathi Mani has invited me home during my next visit.

  During Dinner, I met a fellow CA by name Ganesan, who was your sammandhi’s colleague at Riyadh.

  All in all, a truly memorable day.

  Heading back to Dubai tomorrow night, a very satisfying and fulfilling visit.

  Anbudan,

  raju

 10. R. Jagannathan February 9, 2013 at 6:14 PM Reply

  Dear Sri Srinivasan,

  Our hearty congratulations to Sow. Meera and Chi. Ramakrishnan on their getting married. May Lord Ranganatha and Thayar Bless them with a long, happy, understanding and prosperous wedded life. May all their dreams come true. It seems that Meera – (R)Krishnan make a natural, wonderful pair made for each other.

  I read about the reception in Balaganesh’s blog. Note that Sri Bharathi Mani too has enjoyed the reception and has asked you for a post on the function. I eagerly look forward to your sharing some photos of the wedding day and the reception. We missed the opportunity to meet Sri & Smt Kadugu, Bharathi Mani and others. Hoping we will meet some other time.

  Our regards to your wife and other elders in the family. With best wishes to Meera – Krishnan once again,

  Regards,

  R. Jagannathan

 11. venkat February 10, 2013 at 7:45 AM Reply

  வர முடியாததில் வருத்தம் தான்…..

  மணமக்களுக்கு வாழ்த்துகள்.

 12. Arvind February 11, 2013 at 11:23 AM Reply

  //ரமணர் ஆயிரம் மூலம் நமது வாசகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர் தான் இவர். இவரைப் பற்றி ஒரு தனிப் பதிவு விரைவில்…//

  ஏனுங்க.. ஏற்கனவே நானு பயந்துபோய் இணைய வெளில ’தலை’ காட்டாம இருக்கேன். நீங்க திருஷ்டி பூசணி போட்டோல்லாம் வேற போட்டு, இன்னும் என்னென்னமோ சொல்லி பயமுறுத்துறீங்களேய்யா.. நிசமாலுமே பயமாருக்குதேய்யா… எதுனா பாத்து செய்யுங்கப்பு… 😉

  • BaalHanuman February 12, 2013 at 12:48 AM Reply

   பல பிரபலங்களை தென்றலுக்காக நேர்காணல் செய்து எப்போதும் பின்னணியிலேயே உள்ள உங்களை நம் வாசகர்களுக்கு சிறப்பு அறிமுகம் செய்ய ஒரு சின்ன ஆசை 🙂

   • Arvind February 12, 2013 at 7:07 AM

    உப்பிலிஜி..

    ”There are no Others” எனும்போது முன்னணியாவது, பின்னணியாவது எல்லாம் பிரமை. ”வந்த” வேலையைப் பார்ப்போம்.

 13. BaalHanuman February 14, 2013 at 4:09 AM Reply

  உண்மைதான் நீங்கள் கூறுவது. It was an eye-opener for me 🙂

  • Arvind February 15, 2013 at 4:19 AM Reply

   ஸ்ரீனிவாஸ் ஜி

   நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். சீரியஸா எடுத்துக்கிட்டீங்க போலிருக்கு.(எனக்கு மனசுக்கு நெருக்கமாக உணர்பவர்களிடம் இப்படி உரிமையாக விளையாடுவது வழக்கம்) ”There are no Others” என்பதெல்லாம் நம்மை மாதிரி சாதாரண ஆசாமிகளுக்குச் சரிப்பட்டு வருமா என்ன? 8)

   மற்றபடி நான் சொன்ன ”எல்லாம் பிரமை”; ” ”வந்த” வேலையைப் பார்ப்போம்” என்பதற்கான விளக்கத்தை கொஞ்ச நேரம் கழிச்சு சொல்கிறேன். 🙂

  • Arvind February 15, 2013 at 10:08 AM Reply

   எல்லாம் பிரமை : நிழலை நிஜமாகவும் நிஜத்தை நிழலாகவும் நினைப்பதுதான் பிரமை – இதைப் பாருங்கள். குறிப்பாக 0:29:30 முதல் 0: 30:05 வரை

   🙂

   ”வந்த வேலையைப் பார்” – நாம் அனைவருமே ’வந்த’ வேலையைப் பார்க்காமல் ’வந்த வேலையை’த் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் இல்லையா?

   • BaalHanuman February 17, 2013 at 2:33 AM

    நீங்கள் கூறியிருப்பது முற்றிலும் உண்மை…

 14. கிரி February 14, 2013 at 4:25 AM Reply

  ஸ்ரீநிவாசன் அனைவரும் கூறுவதைப் படிக்கும் போது உங்கள் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது. உங்கள் நல்ல எண்ணம் போலவே திருமணமும் சிறப்பாக நடந்து இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வந்து இருந்தால் பாரதிமணி சார் போன்றவர்களை சந்தித்து இருக்கலாம்.

  என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி ஆனால் நான் பிரபலம் அல்ல.

  நீங்கள் வாங்கி இருக்கும் புத்தகங்களை பார்த்தால் எனக்கு கண்ணை கட்டுகிறது. இத்தனை புத்தகம் எப்படித்தான் படிக்கிறீர்களோ! உண்மையிலே நீங்கள் புத்தக காதலர் தான். நான் எரியும் பனிக்காடு வாங்கி நேற்று தான் படித்து முடித்தேன். இது பற்றிய விமர்சனம் எழுத நினைத்து இருக்கிறேன்.

  • BaalHanuman February 14, 2013 at 4:25 PM Reply

   அன்புள்ள கிரி,

   நீங்களும் வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். “எரியும் பனிக்காடு” படித்து விட்டு அவசியம் விமர்சனம் எழுதுங்கள். உங்கள் அனுமதி இல்லாமலேயே நீங்கள் உங்கள் அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பிரசுரித்து விட்டேன். தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன் 🙂

 15. R. Jagannathan February 14, 2013 at 5:24 PM Reply

  உங்கள் பெண் திருமணம் பெருமாள், தாயார், பெரியோர், உறவினர், நண்பர்கள், பிரபலங்கள் ஆசியுடன் சிறப்பாக நடந்ததில் சந்தோஷம் . சில போட்டோக்களையும் , ஸ்ரீ ஒப்பிலியப்பன் கல்யாண வீடியோவையும் வெளியிட்டதற்கு நன்றி.

  புத்தகக் கண்காட்சியில் ஏதாவது மிஞ்சியதா! நானும், தம்பியும் சுமார் 20 புத்தகம் வாங்கினோம் – சுஜாதா மலர், ஸ்ரீவைஷ்ணவம் உட்பட!

  -ஜெ .

  • Arvind February 15, 2013 at 4:22 AM Reply

   //நானும், தம்பியும் சுமார் 20 புத்தகம் வாங்கினோம் – சுஜாதா மலர், ஸ்ரீவைஷ்ணவம் உட்பட//

   சுஜாதா மலர் வாங்கி ஏமாந்தவன் நான். அதுபற்றி முகநூலில் எழுதியிருக்கிறேன். சுஜாதா பற்றி நாமே ஒரு மலர் தயாரித்து விடலாம் போல. ஸ்ரீனிவாஸ் ரெடியா? 🙂

   • R. Jagannathan February 15, 2013 at 5:39 AM

    சுஜாதா மலரை ஒரு தொகுப்பாகத்தான் பார்த்தேன். புக் கலெக்ஷனுக்கு ஒரு அடிஷன்! தேசிகன் அவர்களுக்கும் எழுதியிருந்தேன் – அவர் பங்களிப்பு இந்த கலெக்ஷனில் அதிகம். தமிழ் வாசகர்களுக்கு சுஜாதா என்ற பெயர் ஒரு வசீகரம். விகடன் ஒரு பக்கா வியாபார நிறுவனம்! – ஜெ .

 16. Raju February 16, 2013 at 4:08 AM Reply

  ஸ்ரீ ஸ்ரீனிவாசன் ,

  கேட்க மறந்துவிட்டேன் இவ்வளவு புஸ்தகங்கள் அள்ளிண்டு போயிருக்கேளே ,luggage பிரச்சனை ஏதும் வரலையே?

  ராஜு-துபை

  • BaalHanuman February 17, 2013 at 2:32 AM Reply

   அன்புள்ள ராஜூ,

   luggage பிரச்சனை இல்லாமல் இருக்குமா ? கண்டிப்பாக இருந்தது.
   Cabin Baggage – ல் அனுமதி 15lbs தான். நான் வாங்கிய புத்தகங்கள் மொத்த எடை 25lbs. Main Culprits – சில்பியின் தென்னாட்டுச் செல்வங்கள் – 2 volumes – hardbound மற்றும் இளையராஜாவின் ‘எனக்கு எதுவோ உனக்கும் அதுவே’ கவிதைத் தொகுப்பு. இதுவும் hardbound. திரும்ப வரும்போது நாங்கள் நான்கு பேரும் சேர்த்து பயணித்ததால் (நான், மனைவி மற்றும் புதுமணத் தம்பதிகள்) சமாளிக்க முடிந்தது.

   அடுத்த முறை வாங்க வேண்டிய புத்தகங்கள்…

   நாஞ்சில் நாடன் படைப்புகள்
   ரா.கி.ரங்கராஜனின் ‘Lights On’
   சுஜாதா குறிப்பிட்டுள்ள டி.கே.சி யின் கம்ப ராமாயணம் – மூன்று தொகுதிகள்
   இந்த முறை விட்டுப் போன சொக்கனின் சில புத்தகங்கள்
   மனோகர் தேவதாஸின் ‘எனது மதுரை நினைவுகள்’

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s