டோண்டு ராகவன் சார் – அஞ்சலி


டோண்டு ராகவன் சாரை பல ஆண்டுகளாக எனக்குப் பரிச்சயம். ஒரு சிறிய கருத்து மோதலில் துவங்கி பிறகு நெருங்கிய நண்பரானவர் அவர். டோண்டு சார் என்றவுடன் உடனே நினைவுக்கு வருபவை – அவரது கடும் உழைப்பு, போராட்டக் குணம், அவரது அசாத்திய மொழித் திறமை.
அவருடைய blog list-ல் பாலஹனுமானும் இடம் பிடித்துள்ளது எனக்குப் பெரிய கௌரவம். எனது காமாக்ஷியும், காமகோடியும்… என்ற பதிவு அவரை மிகவும் கவர்ந்ததால் அவர் தளத்தில் மறு பதிவு செய்திருந்தார்.
அவருடைய டோண்டு பதில்கள் பகுதியில் பல முறை பங்கு பெற்ற அனுபவம் மறக்க முடியாத ஒன்று.
புற்று நோய்க்கு எதிராக போராடி வென்ற அவருடைய மன உறுதி நாம் அனைவரும் அறிந்ததே. லட்சக்கணக்கில் பணச்செலவு எனினும் தனது மொழிபெயர்ப்பு வேலைகள் மூலமாக  செலவழித்த தொகையை மீண்டும் சம்பாதிக்க முடிந்தது என்று சந்தோஷமாகத் தெரிவித்த அவர், வீட்டம்மாவின் அன்பான கவனிப்புக்கும் நன்றி பாராட்டத் தவறவில்லை.
உடல் நலக் குறைவால் அவர் தவற விட்ட சமீபத்திய முக்கிய நிகழ்வுகள்: துக்ளக் ஆண்டு நிறைவுக் கூட்டம் மற்றும் புத்தகக் கண்காட்சி.
2013-ஆம்-ஆண்டு நல்லபடியாகவே இருக்கும் என்னும் நம்பிக்கையுடன் புத்தாண்டைத் துவக்கிய அவர் ஆச்சாரியன் திருவடி அடைந்து விட்டார். அவரது மனதுக்கு நெருக்கமான மகரநெடும் குழைக்காதர் அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு அமைதியையும் மன நிம்மதியையும் அளிக்கட்டும்.
Advertisements

6 thoughts on “டோண்டு ராகவன் சார் – அஞ்சலி

 1. Mohan Kumar February 8, 2013 at 1:55 AM Reply

  ஆழ்ந்த இரங்கல்கள். அவர் குடும்பத்தாருக்கு மன உறுதியை ஆண்டவன் அருளட்டும்

 2. Raju February 8, 2013 at 4:43 AM Reply

  ஆழ்ந்த இரங்கல்கள். அவர் குடும்பத்தாருக்கு மன உறுதியை ஆண்டவன் அருளட்டும்.

  RIP,Dondu Sir,I had admired your frankness. You will be sorely missed .

  Raju-
  Dubai.

 3. rammalar February 8, 2013 at 6:16 AM Reply

  வருத்தமான செய்தி..

  டோண்டு பதில்கள் பகுதியை நான் விரும்பி படிப்பதுண்டு…

 4. karthik raju February 8, 2013 at 7:01 AM Reply

  அவரது சில பதிவுகள் எனக்கு மிகவும் உபயோகமானது. அஞ்சலி

 5. RAVIKUMAR VARADARAJAN February 8, 2013 at 8:49 AM Reply

  அன்னார் ஆத்மா ஆச்சாரியன் திருவடி அடைந்து அருளட்டும்.

  *Ravikumar Varadarajan*
  *NTPC, Chennai.*

 6. bala1940alagopal February 8, 2013 at 3:15 PM Reply

  என்னுடைய மனமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்கள்

  परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
  परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।

  Meaning: Trees bear fruit for the sake of others, rivers flow for the sake of others, cows produce milk for others. This body is (only) for doing good to others.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s