கமலுக்கு சில கேள்விகள் – சேக்கிழான்


Viswaroopam 3

1. சென்சார் போர்டில் சான்றும் அனுமதியும் பெற்ற பிறகு எந்தப் படத்துக்கு தடை விதிக்க முடியாது என்று சொன்னீர்கள். ஆனால், சென்சார் போர்டு அனுமதித்த படத்தை வெளியீட்டுக்கு முன்னதாக இஸ்லாமிய அமைப்புகளுக்கு ஏன் திரையிட்டுக் காட்டினீர்கள்?  உங்களுக்கே சென்சார் போர்டு மீது நம்பிக்கை இல்லையா?

2. இது தொடர்பான தொலைகாட்சி விவாதத்தில், இயக்குனர் சீனு ராமசாமி, ”எனது நீர்ப்பறவை  படத்துக்கு கிறிஸ்தவர்கள் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தார்கள். படத்தை தங்களுக்கு  திரையிட்டுக் காட்டி ஒப்புதல் பெற  வேண்டும் என்று சொன்னார்கள் .நான் மறுத்து விட்டேன்”  என்றார். அவருக்கு இருந்த தெளிவும் துணிவும் உங்களுக்கு ஏன் இல்லை?

Manmathan ambu

ஹிந்துக்களின் நம்பிக்கை மட்டும் கமலுக்கு இளப்பமா?

3. இந்தப் படத்தை தயாரிக்க சொத்துகள் அனைத்தையும் அடமானம் வைத்துள்ளேன் என்று தான் உருகினீர்களே ஒழிய, கருத்து சுதந்திரம் குறித்து உங்களிடம் தார்மிக ஆவேசம் இல்லாமல்  போனது  ஏன்? ‘மன்மதன் அம்பு’ படத்தில் வரலட்சுமி விரதத்தை கேலி பேசும் வாலியின் பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியபோது படத்தின் தயாரிப்பாளர் அதை  நீக்க ஒப்புக் கொண்டார். ஆனால் அதை ஏற்க மறுத்து,  நீங்கள் கருத்து சுதந்திரம் என்று கொண்டாடினீர்கள். இப்போதும் ‘கருத்து சுதந்திரம் தான் எனது லட்சியம்’ என்று நெஞ்சு நிமிர்த்தி நீங்கள் ஏன் பேசவில்லை?

4. இப்போதும்கூட, தேவையில்லாமல் விநாயகரை (அப்படி ஒரு கடவுள் இல்லையாம்) வம்புக்கு இழுக்கிறீர்கள். அதாவது ஹிந்து தெய்வங்களை கேலி பேசினால் முஸ்லிம்கள் மகிழ்ந்து உங்கள் படத்துக்கு ஆதரவளிப்பர் என்று எதிர்பார்க்கிறீர்களா? இது பச்சையான சந்தர்ப்பவாத அரசியல் இல்லையா?

Dasavatharam

சைவ- வைணவ மோதலை தசாவதாரத்தில் உருவாக்கிய கமல்

5. ‘தசாவதாரம்’ படத்தில் வரலாற்றைத் திரித்து சைவ- வைணவ மோதல் காட்சிகளை திணித்தீர்கள். அதை ஹிந்துக்கள் எதிர்த்தபோதும், நீங்கள் அதை பொருட்படுத்தவே இல்லை. இப்போது மட்டும் முஸ்லிம்களின் எதிர்ப்புக்காக படத்தின் முக்கிய காட்சிகளை வெட்ட எப்படி சம்மதித்தீர்கள்?  இல்லாவிட்டால் அவர்கள் ‘வெட்டி விடுவார்கள்’ என்ற பயம் தானே காரணம்?

6. நிலைமை கைமீறிப் போன பிறகு, மதச்சார்பில்லாத நாட்டுக்கு ஓடிப் போவேன் என்றீர்களே. இந்தியா தவிர வேறெங்கு இளித்தவாய்த் தனமான  மதச்சார்பற்ற நாடு இருக்கிறது என்று சொல்வீர்களா? அதாவது ஹிந்துக்களை நீங்கள் குட்டிக் கொண்டிருந்தபொதெல்லாம் உங்கள் மதச்சார்பின்மைக்கு ஆபத்து நேரவில்லை; முஸ்லிம்களை விமர்சித்தால் ஆபத்தாகி விடுகிறது என்று சொல்கிறீர்கள் என்று இதை எடுத்துக் கொள்ளலாமா?

7. இத்தனைக்குப் பிறகும் இஸ்லாமிய சகோதரர்களை நான் நம்புகிறேன். அவர்கள் தவறு செய்யவில்லை என்று கைப்பிள்ளைத்தனமாக, எவ்வாறு அரசை குற்றம் சாட்டும் விதமாக பேசுகிறீர்கள்? இவன் எத்தனை அடித்தாலும் தாங்குவான் என்று உங்களை எதிர்க்கும் மதவெறிக் கும்பல் கருதி விடாதா?

–நன்றி தமிழ் ஹிந்து

கண்களைத் திறந்த கமலுக்கு நன்றி! முழுக் கட்டுரையையும் கீழ்க்காணும் இணைப்பில் நீங்கள் படிக்கலாம்…

Visvaroopam 1

Advertisements

5 thoughts on “கமலுக்கு சில கேள்விகள் – சேக்கிழான்

  1. BaalHanuman February 6, 2013 at 9:08 PM Reply

  2. அர்ஜுன் சம்பத் February 8, 2013 at 2:26 AM Reply

    இந்து அமைப்புகள் ஆட்சேபணைகளைக் கிளப்பினால் அலட்சியப்படுத்தும் திரையுலகம், முஸ்லிம், கிறிஸ்துவ அமைப்புகளுக்கு பயந்துபோய் பதுங்குகிறது என்கிற வருத்தம் இந்து அமைப்புகளுக்கு இருக்கிறது.

    உண்மைதான்,” என்கிறார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத். நீர்ப்பறவை படத்தில் பைபிள் வரிகள் உள்ள பாடல் வரிகளை கிறிஸ்துவர்கள் எதிர்த்தவுடன் எடுத்து விட்டார் வைரமுத்து. ஆனால், பெரியார் படத்தில் சீதையைக் குறித்த மோசமான வரிகளை ஆட்சேபம் தெரிவித்தும் எடுக்கவில்லை. ‘மன்மதன் அம்பு’ படத்தில், கமல் எழுதிய ஒரு பாட்டு, வைணவர்களைப் புண்படுத்துகிறது. ‘அன்பே சிவம்’ படத்தில் சிவனடியாராக வரும் நாசர், தென்னாடுடைய சிவனே போற்றி என்கிற மாணிக்கவாசகரின் வரிகளைச் சொல்லிக் குற்றங்களைச் செய்கிறார். இதற்கெல்லாம் எதிர்ப்புத் தெரிவித்தால், கலையைக் கலையாகப் பாருங்கள் என்றார் கமல். தமிழ்நாட்டில், திரைப்படங்கள் அரசியல் போக்கையும் வாழ்க்கை முறையையும் மாற்றும் அளவுக்கு தாக்கத்தை உருவாக்கும்போது, கலையைக் கலையாகவோ பொழுதுபோக்காகவோ எப்படி பார்க்கமுடியும்?” என்கிறார் அர்ஜுன் சம்பத்.

  3. ஞானி February 8, 2013 at 5:33 PM Reply


    விஸ்வரூப கேள்விகள்!

    கேள்வி 1: தணிக்கை வாரியத்தின் மீது நீதிமன்றத்திலேயே ஊழல் புகார் சொன்ன தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஆதாரம் காட்டவேண்டும் அல்லது மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தணிக்கை வாரியம் கோரியிருப்பதற்கு பதில் சொல்லாமல் தமிழக அரசு மௌனமாக இருப்பது ஏன்?

    கேள்வி 2: படத்தில் ஏழு வெட்டுகள் இருந்தால் படம் தங்களுக்கு எதிரானதல்ல என்று திருப்தி அடையும் தமிழக முஸ்லிம் தலைவர்களுக்கும், எந்த வெட்டும் இல்லாமலே படத்தைப் பார்க்கத் தயாராக இருக்கும் இதர மாநில முஸ்லிம்களுக்கும் இருக்கும் ஏழு வித்தியாசங்கள் என்ன?

  4. BaalHanuman February 9, 2013 at 1:27 AM Reply

    –கல்கி கார்ட்டூன்

  5. BaalHanuman February 9, 2013 at 1:42 AM Reply

    ? ‘விஸ்வரூபம்’ திரைப்படத்துக்கு தடை போட்டதன் மூலம் கமலுக்கு அரசு இலவச விளம்பரம் கொடுத்துவிட்டதே?

    ! 100 கோடி செலவு செய்திருந்தாலும் இந்த விளம்பரம் கிடைத்திருக்காது என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில். கமல் இப்போது ஏக மகிழ்ச்சியில் இருப்பார்!

    ‘வாழ்க்கையில் மூன்று முறை நிதி நெருக்கடியில் சிக்கினேன். அனைத்தையும் இழந்து சைபரில் இருந்து வாழ்க்கையைத் தொடங்கினேன். இப்போதும் என் நிலைமை அப்படித்தான் ஆகிவிட்டது’ என்று சில நாட்களுக்கு முன் கமல் சொன்னார். ‘விஸ்வரூபம்’ வசூல், அந்த நிதி நெருக்கடிகளில் இருந்து கமலை காப்பாற்றிவிடும் போலத்தான் தெரிகிறது!

    –கழுகார் பதில்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s