1-பரிசு – சுஜாதா


Madhyamar

இங்கேயும்இல்லாமல் அங்கேயும் செல்ல முடியாமல் ஒரு வர்க்கமே இருக்கிறது.  ஏறக்குறைய நல்லவர்.

மத்யமர்.
இவர்களை பற்றிய கதை இது.
– சுஜாதா.
சந்துக்குள் ஒரு கார் செல்வதற்கு மட்டும்தான் இடம் இருந்தது. சைக்கிள்காரர்கள் சாக்கடையோரமாக ஒதுங்கிக் கொண்டார்கள். அந்தப் பிரதேசத்தில் கார் நுழைவது அசந்தர்ப்பமாக இருந்தது. வெள்ளை உடை அணிந்து, தொப்பி போட்ட டிரைவர் வேறு! பின் ஸீட்டில் இருந்த இளைஞன் டை கட்டியிருந்தான். நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டு ஓர் இடத்தில் நிறுத்தச் சொல்லி சன்னல் கண்ணாடியை இறக்கி, “36 பார் 48 எந்த வீடுங்க ?”
“அதோ அரை கேட் போட்டிருக்கே, தபால் பெட்டி தொங்குதே அதுக்கு அடுத்த வீடு. அங்கே எட்டுப் பேர் குடியிருக்காங்க. உங்களுக்கு யாரைப் பார்க்கணும் ?”
“கிருஷ்ணசாமின்னு ஸ்டேட் வேர்ஹௌசிங் கார்ப்பரேஷன்ல…”
“அங்கதான். போங்க.!”
குறிப்பிட்ட வீட்டு வாசல் தாத்தா, “நேரே உள்ளே போங்க. கடைசி போர்ஷன், அதுக்கப்புறம் பாத்ரூம்தான்!”
மெல்ல நடையைத் தாண்ட, இருபுறமும் சின்னச் சின்ன அறைகளிலிருந்து பனியன் அணிந்த சீனிவாசன்களும் ராமசாமிகளும் எட்டிப் பார்த்தார்கள். பம்ப் அடிக்கும் குழாய் அருகில் அவர்கள் மனைவிமார் குழந்தைகளை அலம்பிக் கொண்டிருந்தார்கள். ஒரு வீட்டில் தையல் இயந்திரமும் மற்றொரு வீட்டில் ட்ரான்சிஸ்டரும் ஒலித்துக் கொண்டிருந்தன. வயது வந்த பெண்கள் கையகலக் கண்ணாடிகளின் எதிரில் நெற்றிக்குப் போட்டு ஒட்டிக் கொண்டே நேற்றைய இளையராஜாவை முணுமுணுத்துக் கொண்டிருந்தனர். குறுக்கே சிறுவர்களின் அட்டை கிரிக்கெட் நடந்து கொண்டிருந்தது.
கிருஷ்ணசுவாமி தன் வாசலில் மோடா போட்டு உட்கார்ந்துகொண்டு செய்தித் தாளில் லாட்டரி ரிசல்ட் பார்த்துக்கொண்டிருந்தான்.
“மிஸ்டர் கிருஷ்ணஸ்வாமி?”
“ஆமா, நீங்க ?”
“என் பேர் அனில்குமார். லிண்டாஸ் கம்பெனிலேருந்து வர்றேன்.”
“என்ன விஷயம்?” என்றான் சாமி நெற்றியைச் சுருக்கிக் கொண்டு, ஏதாவது விற்பதற்கு வந்திருக்கிறான் போலும்.
“நீங்க எங்க வின்னி சோப் விளம்பர வாக்கியப் போட்டிக்கு எழுதிப் போட்டிருந்தீங்களா?”
“ஆ… ஆமாம். ஞாபகம் வருது.”
சொர்க்கத்தை எண்ணி செய்தது வின்னி…” இதுதானே நீங்க எழுதி அனுப்பின வாக்கியம்?”
“ஆமாம். அது வந்து ஏதோ கிறுக்கினது…” என்றான் அசட்டுத்தனமாக மன்னிப்பு விரும்பி…
“கங்க்ராஜுலேஷன்ஸ்! வாழ்த்துக்கள்!  உங்களுக்கு முதல் பரிசு கொடுத்திருக்காங்க. நடுவர்ங்க.”
“முதல் பரிசுன்னா?”
“உங்களுக்கும் உங்க மனைவிக்கும்… கல்யாணம் ஆனவர் தானே?  அஞ்சு நாள் டில்லி ஆக்ரா சுற்றுப் பயணம். அஞ்சு நட்சத்திர ஓட்டலிலே தங்குவீங்க. எல்லாச் செலவும் லிண்டாஸ் நிறுவனத்தின் பொறுப்பு.””
“அப்படியா! பூர்ணிமா! பூர்ணிமா, எங்கே போய்ட்டா, டேய் பாச்சு?”
“உங்க ரெண்டு பேருக்கு மட்டும்தான்!”
சுவாமியின் முகம் மலர்ந்தது. உட்கார்ந்து, ‘ஸார், என்ன சாப்பிடறேள். பாச்சு, பூர்ணிமாவைக் கூப்பிடு. முன் கட்டில முதலியார் வீட்டில் டீ.வி. பார்த்துண்டு இருப்பா.”
இளைஞன் மோடா மேல் கர்ச்சீப் போட்டு உட்கார்ந்து, “இந்தாங்க, எங்க மார்க்கெட்டிங் டைரக்டர் கிட்டேயிருந்து லெட்டர். இதில் கையெழுத்துப் போட்டுடுங்க, வெள்ளிக்கிழமை எல்லாப் பேப்பர்லேயும் உங்க பேர் வரும். ஒரு போட்டோ வேணும், இருக்கா ? அசோக் ஹோட்டல் வவுச்சர், ஏர் டிக்கெட் எல்லாமே அதே தேதிக்கு அனுப்பிச்சிடுவோம்…”
“இவங்க…?”
“பார்த்தசாரதி. என் பிரதர்.”
அவனிடம் தன் கார்டைக் கொடுத்தான் அந்த டை இளைஞன். பாச்சா, “நான் கோ-ஆப்பரேடிவ் கிரெடிட் பாங்கில – டெம்பரவரி அசிஸ்டென்ட் – செலெக் ஷன் கிரேடு.”
“ஐ’ ம் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், லிண்டாஸ்.”
“ஏர் டிக்கெட்னா, ஏரோப்ளேனா?”
“ஆமாம்.”
“ஹய்யா, பாச்சா, கூப்பிடுறா பூர்ணிமாவை.”
“வெள்ளிக்கிழமை சாயங்காலம் அழைச்சிட்டுப் போவோம். டில்லி போன உடனே விமான நிலையத்தில் என் கலீக் வேணுமாதவன் வருவார்.”
இப்போது பூர்ணிமா அவசரமாக ஓடி வந்து, “என்ன?” என்றாள் கவலையோடு.
“பூர்ணிமா, நான் எழுதி அனுப்பிச்சேனோல்லியோ? அதுக்கு ப்ரைஸ் விழுந்திருக்கு.”
“அப்புறம் ப்ரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் கூப்பன் தந்துடுவோம்.”
“என்ன ப்ரைஸ் ? என்ன எழுதி அனுப்பிச்சீங்க?”
Advertisements

6 thoughts on “1-பரிசு – சுஜாதா

 1. vidya (@kalkirasikai) January 22, 2013 at 3:28 AM Reply

  இதை… இதைத்தான் இத்தனை நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். கல்கியில் (மசெ ஓவியத்துடன் என்று ஞாபகம். தங்களுக்கு நினைவிருக்கிறதா?) படித்ததை ஏறக்குறைய 21 வருடங்கள் கழித்துப் படித்ததில் மிக்க மகிழ்ச்சி! பரிசுக்கு நன்றி பால்ஹனுமான்.

 2. பாரதி மணி January 22, 2013 at 4:20 AM Reply

  ஓய்….பால்ஹனுமான்! இருந்தாலும், உமக்கு இத்தனை தன்னடக்கம் வேண்டாமைய்யா! கடந்தவாரம் உங்கள் மகளுக்கு திருமணமும், அதையொட்டி ஒரு ரிஸப்ஷனும் நடந்ததே……அதைப்பற்றி ஒரு வார்த்தை இந்த ப்ளாகில் எழுதினீரா? வேறெ எதுக்கய்யா இந்த ப்ளாக் வெச்சு நடத்தறீர்? (என்னை மாதிரி) ஒண்ணுமில்லாதவன் எல்லாம் தம்பட்டம் அடிச்சுக்கறான்……பொழைக்கத்தெரியாத ஆளா இருக்கிறீரே!

  சரி……உடனே குழந்தைகள் கல்யாண போட்டோக்களையும், ரிஸப்ஷன் போட்டோக்களையும் போட்டு, உம்ம நடையில் ஒரு குறிப்பும் உடனே எழுதுய்யா! கல்யாணத்துக்கு வரமுடியாத வாசகர்களும் பார்த்து, மணமக்களை உள்ளன்போடு வாழ்த்தட்டும்!

  ம்ம்ம்ம்….சீக்கிரம்!

  பாரதி மணி

 3. N Rajaram January 22, 2013 at 6:53 AM Reply

  அதானே. சாப்பாடுதான் இல்லேன்னு ஆயிடுத்து 🙂
  ஆசீர்வாதமாவது வழங்கறோம். Photo வை போடுங்கோளேன்.

 4. vidya (@kalkirasikai) January 22, 2013 at 7:44 AM Reply

  ஓ! ஜனவரி ஐந்துக்குப் பிறகு சில நாட்கள் பதிவே காணோமே என்று பார்த்தேன். இது தான் காரணமா? வாழ்த்துக்கள் பால் ஹனுமான். ( உங்கள் பதிவுகளைப் பார்த்து உங்கள் வயது முப்பதுக்குள் தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். உங்கள் வயதை அம்பலப்படுத்தியதற்காக பாரதி மணி அவர்களை எதுவும் செய்து விடாதீர்கள்!)

 5. ரெங்கசுப்ரமணி January 22, 2013 at 5:59 PM Reply

  நெடு நாட்களாக பதிவையே காணோமே என்று பார்த்தேன். புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் / வாழ்த்துகள். நான் உங்கள் வயது நாற்பதிற்குள் இருக்கும் என்று நினைத்தேன். இனிமேல் இன்னும் கொஞ்சம் பவ்யமாக இருக்கலாம். பாரதிமணி சாருக்கு நன்றிகள். இதற்குதான் வயது தெரியாமல் இருக்க இட்லி வடை மாதிரி ரகசியமாக தளம் நடத்த வேண்டும்.

 6. rathnavelnatarajan February 1, 2013 at 1:16 AM Reply

  அருமையான பதிவு. நன்றி.
  உங்கள் மகள் திருமணம் சிறப்பாக நடந்தமைக்கு மகிழ்ச்சி. மணமக்களுக்கு எங்கள் இதயங்கனிந்த திருமண வாழ்த்துகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s