ஸ்குரில் – சிவா கிருஷ்ணமூர்த்தி


Essex_Siva

Note from BalHanuman…

நண்பர் சிவா எழுதி சொல்வனத்தில் வெளியான இந்தக் கதை என்னைக் கவர மூன்று காரணங்கள்…

சரளமான நடை. யதார்த்தமான கதை மாந்தர்கள். இந்தக் கதையில் வரும் ஸ்குரில் போல பல தெலுங்கு நண்பர்களை எனது 17 வருட அமெரிக்க வாழ்க்கையில் சந்தித்த அனுபவம்.

இதுவரை நீங்கள் படிக்கவில்லையென்றால், இந்தக் கதை இதோ உங்கள் பார்வைக்கு…

ஸ்குரில்

Advertisements

7 thoughts on “ஸ்குரில் – சிவா கிருஷ்ணமூர்த்தி

  1. R. Jagannathan January 2, 2013 at 10:10 AM Reply

    இந்த கதை எனக்கு பிடித்தது. நல்ல நடை. இருந்தும் ஒரு குறை! Squirrel மற்ற இடங்களில் தன் super active பையனுடன் எப்படி சமாளித்தான் என்பது suspense ஆக நிற்கிறது!

    இவரின் ‘வெகுளாமை‘ கதை அல்ல; ஒரு IT professional -ன் ஒரு நாள் அனுபவங்கள். IT பரிச்சயமில்லாத வாசகர்களுக்கு படிப்பது / பிடிப்பது கஷ்டம்!

    -ஜெ .

  2. natbas January 2, 2013 at 4:23 PM Reply

    சிவா கிருஷ்ணமூர்த்தி சென்ற ஆண்டில் எழுதி நான் வாசித்த கதைகள் மூன்று. மூன்றுமே அருமையானவை. அவை அதிகம் பேசப்படவில்லை என்ற வருத்தம் இன்று போய் விட்டது இரண்டு கதைகள் இங்கு கவனிக்கப்பட்டிருக்கின்றன நன்றி 🙂

    அவரது “கண்ணால் காண்பதும்” என்ற கதை இங்கிருக்கிறது – அருமையான கதை, அவகாசமிருந்தால் வாசித்துப் பாருங்கள்.

    http://puthu.thinnai.com/?p=10709

    பகிர்வுக்கு நன்றிகள்.

  3. கருத்திற்கு நன்றி ஜெகன்னாதன். ஸ்குரிலின் குழந்தை ஏற்கனவே நூலகத்தில் செய்யும் சேட்டையை கோடிகாட்டப்பட்டிருக்கும்.
    குழந்தைகள் – இயல்பே அப்படித்தான். பெற்றோருடைய வேலைதான் அவர்களை கட்டுக்குள் வைத்திருப்பது – முக்கியமாக வீட்டிற்கு வெளியே.

    வெகுளாமை – நிறைய கலைச்சொற்களை தமிழில் எழுதியிருக்கலாம். பின்னர் உணர்ந்தேன். தகவல் தொழில் நுட்பக்காரர்களுக்கு எளிதில் புரியும். மற்றவர்களுக்கு சிரமம்தான். ஆனால் அவர்களுக்காகதான் எழுதினேன். அவர்களைப் பொறுத்தவரை அந்தப்பக்கம் பச்சை, அதுவும் கடும் பச்சை! உண்மை அப்படியில்லை, அங்கேயும் அல்லது அங்கேதான் நிச்சயமில்லாத தன்மை, மன அழுத்தம் அதிகம் நிலவுகிறது. முக்கியமாக இந்தியாவில் உள்ளவர்களுக்கு. அந்த சூழ்நிலையை கொஞ்சம் கோடி காட்ட முயன்றிருக்கிறேன்.

    நட்பாஸ் ஸார், உங்களுக்கும் பால ஹனுமான் அவர்களுக்கும் மிக்க நன்றி.

  4. R. Jagannathan January 3, 2013 at 5:13 PM Reply

    திரு சிவா அவர்களுக்கு,

    என் கருத்தை மதித்து பதில் அளித்ததற்கு நன்றி. Squirrel கதையில் அந்த பையனின் கீழ் வீட்டுப் பெண்மணி ரொம்ப அவதிப்பட்டு விட்டாளே, அடுத்து போன இடத்தில் எப்படி சமாளித்தார்கள் என்று யோசித்தேன்! வெகுளாமை எனக்கு பிடித்தது. (நான் ரிடையர்ட் எலெக்ரிகல் இஞ்சினியர்). என் அம்மாவுக்கு புரியாதே என்று எழுதினேன். ‘கண்ணால் காண்பதும்‘ கதையும் படித்துவிட்டேன். மிக நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. பாராட்டுக்கள்.

    – ஜெகன்னாதன்

  5. சிவா கிருஷ்ணமூர்த்தி January 6, 2013 at 4:38 PM Reply

    திரு ஜெகன்னாதன் அவர்களுக்கு,
    ஸ்குரில் அடுத்துதான் வேறு வீடு வாங்கிப்போய்விட்டாரே! தனிவீடாக இருக்கும்!

  6. R. Jagannathan January 6, 2013 at 5:34 PM Reply

    நானே அதை ஊகித்து எழுதியிருக்க வேண்டும்! – ஜெ .

  7. Giri January 11, 2013 at 1:32 PM Reply

    அன்பு பாலஹனுமான்

    தங்களுக்கு நண்பர் சிவாவின் படைப்புகள் பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. நேர் பேச்சில் பல கதை போல வர்ணனைகளைச் சொல்லக்கூடியவர்.

    அவர் கவிதைகளும் எழுதியுள்ளார்..

    http://solvanam.com/?author=187

    சிவா – ஒரு ப்ளாக் தொடங்கி இதையெல்லாம் அங்கு சேமித்து வெக்க முடியுமா பாருங்களேன்?

    நன்றி

    கிரி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s