ஹனுமன் தந்த மந்திரம்!


மாருதி, அஞ்சனாசுதன்… என்று, நாமம் பல கொண்ட நாயகன் ஸ்ரீஹனுமன். ஹனுமனின் பெருமை அளவிடற்கரியது. சீதாபிராட்டியின் துயரம் தீர்க்க ராமாயணத்தில் சேவை புரிந்த ஹனுமனை, கிருஷ்ணாவதார காலத்தில் பலராமன், அர்ச்சுனன், பீமன் ஆகியோருக்கு அடக்கத்தை போதித்தவனாகவும் காண்கிறோம்.

சிரஞ்சீவியான ஹனுமனை வழிபட்டால், சனியின் சஞ்சாரத்தால் ஏற்படும் துன்பங்கள் குறையும் என்பார்கள். ஆற்றல், அறிவு, துணிவு, வெற்றி ஆகியவற்றை அருளும் ஹனுமன், சதா சர்வ காலமும் ‘ஸ்ரீராம் ராம், ஜெய ராம், ஜெய, ஜெய ராம்’ என ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திவ்ய நாமத்தையே சொல்லிக் கொண்டிருப்பவர். அந்த மந்திரத்தைச் சொல்லாவிட்டாலும், ராம ராம என்று ராம நாமத்தைச் சதா ஜபித்துக் கொண்டிருந்தாலும், தாமே தேடி வந்து அருள்பவர் ஸ்ரீஹனுமன்.

அப்படிப்பட்டவர் உலகத்தோருக்கு ஒரு மந்திரம் உபதேசித்திருக்கிறார்.

அந்த ஒரு வரி மந்திரம் இதுதான்…

ஓம் ஸ்ரீ யோகீஸ்வர யாக்ஞவல்க்ய குருவே நமஹ

இந்த மந்திரத்தில், ‘ஓம்’ பிரணவத்தையும், ‘ஸ்ரீ’ சக்தியையும், ‘யோகீஸ்வர’ பரமேஸ்வரனையும், ‘யாக்ஞவல்க்ய’ பரந்தாமன் மகா விஷ்ணுவையும், ‘குரு’ நான்முகனையும் குறிப்பதாகும்.

ஹனுமனின் முதல் குரு சூரிய பகவான். ஆதவனின் முக்கியச் சீடர் யாக்ஞவல்கியர், சுக்ல யஜுர் வேதத்தை சூரியனிடமிருந்து கற்றவர். இவர் ஆஞ்சநேயரின் இரண்டாவது குருவாவார்.

மேற்கண்ட மந்திரத்தை முறையாக உபதேசம் பெற்று ஜபித்தால், சகல நன்மைகளையும் அடையலாம்.

– பா.கண்ணன், புதுதில்லி

–நன்றி தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக மாத இதழ்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s