ரமணர் சொன்ன வேதாந்த விளக்கம்…


Ramanar1

வேதாந்த விளக்கத்தை, புரியும்படி சொல்வதற்கு கதை உத்தியைப் போல் மிருகங்களையும் பறவைகளையும் கையாண்டார் ரமணபகவான்.

தாய்மையும் தந்தைமையும், குருத்துவமும் ஒருசேர எந்த மகானிடத்தில் மின்னி மிளிர்கிறதோ, அவரே சத்குரு என்கின்றன குருலட்சண நூல்கள்.

ரமணரின் காருண்ய விஸ்தீரணம், அளவுகோல்களுக்கு அப்பாற்பட்டதாய் இருந்தது. மந்தியும் மனிதர்களும் என்ற ஸ்தூல வடிவ நிர்ணயங்களைத் தாண்டிப் படர்ந்திருந்தது ரமணரின் கருணைக்கொடி.

Ramanar5

ஆசிரமத்தில் கொலு வீற்றிருக்கிறார் ரமணர். அவரிடம் சமர்ப்பிக்க வாழைப் பழங்களை கைகளில் வைத்து அமர்ந்திருக்கிறார்கள் பக்தர்கள். ஒரு குறும்புக்காரக் குரங்கு, ஜன்னல் வழியாக நுழைந்து, சட்டென்று பழத்தைப் பறித்துக் கொண்டு ரமணர் அருகில் வந்து அடைக்கலமாய் அமர்ந்து சுவாதீனமாய்த் தின்ன ஆரம்பித்தது. அதை விரட்ட முயன்றவர்களைத் தடுத்துவிட்டு, அருணாசலர் சொன்னார்: “ஒன்றும் செய்யாதீர்கள். இது அவர்களது இடம். முக்கியமாக கவனியுங்கள். லட்சியமே நோக்கமாக – ஒரு வேதாந்தி எப்படி சிரத்தையாய் இருக்க வேண்டும் என்பதை, இந்த குரங்கு உங்களுக்கு சொல்லித் தரவில்லையா? நீங்கள் அதன் கண்ணில் தென்படவில்லை. உங்கள் கையில் இருக்கும் பழம் மட்டும்தானே அந்த கூர்மையான கண்ணுக்கு தெரிந்தது.” ரமணரின் அற்புதமான விளக்கத்தில் பரவசித்து நின்றார்கள், அந்த பாக்கியவான்கள்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!

***

Ramanar2

–நன்றி தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக மாத இதழ்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s