தாண்டவ தரிசனம் – பகவான் ரமண மகரிஷி


Ramanar3Nataraja

புற்றுநோயின் உக்கிரம் அதிகமாகி ரமணரின் திருமேனி, நடுங்கத் தொடங்கிய நேரம். அன்பர்கள் கலங்கிப் போனபோது, ரமணர் சொன்னார் நிச்சலனமாக: இதுவரை இந்த தேகம் வெறுமனே நின்ற நிலையில்தான் தரிசனம் கிடைத்தது. இப்போது. பாருங்கள் நடராஜனைப் போல ஆடிக் கொண்டிருப்பதால் தாண்டவ தரிசனம்.

இந்த உதாசீன மன மகாநிலை பகவானின் திவ்ய சரித்திரத்தில், எல்லா இடங்களிலும் பட்டொளி வீசிப் பரிமளிக்கிறது.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!

***

Ramanar2

–நன்றி தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக மாத இதழ்)

இன்று மார்கழி திருவாதிரை – Dec 28, 2012

எந்நாட்டவர்க்கும் இறைவனாம் சிவபெருமான், பஞ்ச பூதங்களில் – எல்லையே காண முடியாத ஆகாயத்தைத் தனதாக்கிக்கொண்டு அருளும் திருத்தலம் சிதம்பரம். இந்தப் புண்ணிய க்ஷேத்திரத்தில், மார்கழி மாதம் திருவாதிரை தினத்தன்று நிகழும் ஆருத்ரா தரிசனம், மிக அற்புதமான வைபவம். ஆருத்ரா என்பது திருவாதிரையைக் குறிக்கும். இந்தத் திருவாதிரை நட்சத்திரத்தன்றுதான் பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதருக்கும் திருநடனம் ஆடிக் காண்பித்தார் ஸ்ரீநடராஜ பெருமான். உலக இயக்கத்துக்குக் காரணமான ஈஸ்வரனின் உன்னத நடனத் திருக்கோலத்தைச் சிறப்பிக்கும் திருநாள்தான் திருவாதிரை. இந்த நாளில் சிதம்பரம் சென்று ஸ்ரீநடராஜரைத் தரிசித்து வழிபட்டு வர, நம் இன்னல்கள் யாவும் அகன்று, வாழ்க்கை இனிமையாகும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s