டேய்… நான் சேஷாத்ரி சுவாமிகளைப் போல ஆவேனா ? – மகா பெரியவா


Baranidharan

1956ம் ஆண்டு முதல் ஆனந்த விகடனில் ஸ்ரீதராக கார்ட்டூன்களிலும் மெரினா’ வாக நாடகங்களில் பரிமளித்தவர் என்றாலும் பரணீதரனாக அவர் ஆற்றிய ஆன்மிகத் தொண்டுகள் அநேகம்.தன் உருக்கமான எழுத்தால் பல உள்ளங்களைக் கவர்ந்தவர்.


பரணீதரன் கூறுகிறார்…

ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் பெரிய திருவுருவப்படம் சென்னை வந்து சேர்ந்ததும் ஸ்ரீ பெரியவரிடம் காட்டுவதற்காக அதை தேனம்பாக்கம் எடுத்துச் சென்றிருந்தேன். படத்தின் மிக அருகில் சென்று உட்கார்ந்து பெரியவர் அதை மிக உன்னிப்பாக ஆராய்ந்தார். பின்னர் படத்திலுள்ளது போலவே கால்களை மடித்து, இடக்கையை முகவாயில் வைத்துக் கொண்டு புன்சிரிப்பு அரும்ப, ‘இந்த மாதிரி தானே சுவாமிகள் உட்கார்ந்திருக்கிறார் ?‘ என்று கேட்டார். ஒருகணம் சேஷாத்ரி சுவாமிகளுக்கும், பெரியவாளுக்கும் எனக்கு வித்தியாசமே தெரியவில்லை. இந்த அபூர்வக் காட்சியைக் கண்டு நெகிழ்ந்து போய், பரவசமாகி இருவருக்கும் சேர்ந்து நமஸ்காரம் செய்து எழுந்தேன்.

maha_periyava_1

பின்னர் ஒருநாள், சேஷாத்ரி சுவாமிகளின் பரப்பிரும்ம நிலையை எனக்கு உணர்த்தும் வண்ணம் என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டார் காஞ்சிப் பெரியவர்:

‘டேய்… நான் சேஷாத்ரி சுவாமிகளைப் போல ஆவேனா ? அந்த நிலை எனக்குக் கிடைக்குமா ?’

உணர்ச்சி பொங்க, கண்கள் பனிக்க, பேச்சற்று நின்றேன்.

ஞானப்பித்தர் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள்

கற்களால் திடமாகி இறுகிய பாறைகளாக உயர்ந்து நிற்கிறதே திருவண்ணாமலை – அது வெறும் மலையல்ல, காந்த மலை. மனிதர்களையெல்லாம் தன்பால் இழுத்து ‘கிரிவலம்‘ வரவைப்பது மட்டுமின்றி மகான்களையும் அல்லவா காந்தமாக ஈர்த்திருக்கிறது. பரதேசியாகத் திரிந்து அருணாசலத்தில் பரப்பிரம்மமாக நிலைகொண்ட சேஷாத்ரி சுவாமிகளைக் கண்முன் காட்டுகிறது இந்நூல். பரணீதரன் இதை எழுதியிருக்கிறார் என்று சொல்லும்போதே நூலுக்குப் பூரணத்துவம் கிடைத்துவிடுகிறது.

ஞானப்பித்தர் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் – பரணீதரன் (கிழக்கு வரம் வெளியீடு)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s