இளையராஜாவுக்கு சங்கீத நாடக அகாதமி விருது – இரா.முருகன்


இளையராஜாவுக்கு சங்கீத நாடக அகாதமி விருது. தாமதமாக வந்தாலும் இசை விழா நேரத்தில் வந்து மனதை நிறைக்கிற விருது.

இளையராஜாவுக்கு எப்போதுமே என் வாழ்த்துகள் இதயத்தில் உண்டு. என் இளமைக் காலத்தின் ஒரு அழகான முகம் இளையராஜா.

அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ என்று ஜானகி அமுத கானமாக விவித பாரதியில் பாடத் தொடங்கி ராஜாவைத் தெரிய வந்த வருடம் தான் நான் ஓவர்சீஸ் பேங்கில் உத்தியோகத்துக்குச் சேர்ந்தது. எத்தனையோ இளையராஜா பாடல்களை வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்ச்சியோடும் பொருத்திப் பார்க்க முடிகிறது. இந்த அளவு என்னைப் பாதித்த இன்னொரு இசைக்கலைஞன் இனி வரப் போவதில்லை.

//
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாத்தென்று..

மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொண்டுருவை போக்கென –

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
//
பாம்பே ஜெயஸ்ரீ குரலில் இதைக் கண்ணீர் மல்கக் கேட்கிறபோது பாரதியோடு ராஜாவும் நினைவு வரத் தவறுவதில்லை.

அகாதமிக்கு வாழ்த்துகள்.

Advertisements

5 thoughts on “இளையராஜாவுக்கு சங்கீத நாடக அகாதமி விருது – இரா.முருகன்

 1. Karunaharamoorthy December 27, 2012 at 1:52 AM Reply

  இசையில் இளையராஜாவுக்கு நிகர்த்த கலைஞன் கிடையவே கிடையாது. உலகில் இசைத்துறையில் என்னவென்ன பட்டங்கள் எல்லாம் உண்டோ அத்தனைக்கும் பொருத்தமானவர். ஹிஹியென்று எதுக்காக மடங்களின் கோடியில் நின்று குழைகிறார் என்பதுதான் தெரியவில்லை. கொஞ்சமாவது சுயமரியாதை வேண்டாம்? இதுமட்டும் எனக்கு பிடிக்கவில்லை அவரிடம்.

 2. BaalHanuman December 27, 2012 at 2:44 AM Reply

  அன்புள்ள கருணா,

  நீங்கள் கூறுவது போல் இளையராஜாவுக்கு நிகரான ஒரு கலைஞன் கிடையவே கிடையாது என்பதில் எனக்கும் 100% உடன்பாடுதான். ஆனால் ஆன்மீகத்தில் நாட்டம் என்பது அவரது சொந்த விருப்பம் அல்லவா ? அதை நாம் மதிக்க வேண்டும் தானே ?

 3. Karunaharamoorthy December 27, 2012 at 1:11 PM Reply

  அல்ல அல்ல. முற்றிலும் தவறான புரிதல் இது. பாரதிகூட ஆத்மீகவாதியாகத்தான் இருந்தான். அவனைப் புறந்தள்ளித் தமிழ்தான் ஏது? சங்கரமடத்துவாசிகள் இவரை ஹரிஜனன் என்பதால் ஒதுக்குகிறார்கள், பாகுபடுத்தியே நடத்துகிறார்கள். அவர்கொடுக்கும் பழங்களன்ன நைவேத்தியப்பொருட்களை மடம் வாங்குவதில்லை எனவும், அவருக்கு அங்கே ஆசனம் தரப்படுவதில்லை எனவும் மடத்துச்செய்திகள் வருகின்றன. மீண்டும் எதற்காக அங்கே வினைக்கெடுகிறார் என்பதே என் ஆதங்கம்.

 4. R. Jagannathan December 27, 2012 at 4:52 PM Reply

  I really doubt if what Mr. Karuna has written had really happened? Can some one vouch for this? If it really had happened, Ilayaraja should come out openly and boycott the Mutt and I will strongly support it. – R. J.

 5. Karunaharamoorthy December 31, 2012 at 11:30 AM Reply

  http://www.keetru.com/index.php?option=com_content&task=view&id=1950

  ஆதாரம்: இ.இளமாறனின் கட்டுரைகீற்று 11.01.2010.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s