வைகுண்ட ஏகாதசி – Dec 24, 2012


srirangam2

தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பெருந்துன்பம் கொடுத்து வந்த அசுரன் முரன். அவனை வீழ்த்தியது, ‘ஏகாதசி’ என்ற விஷ்ணு சக்தி. அந்த ஏகாதசியை திதியாக்கி, அந்த நாளில் உண்ணா நோன்பு (உபவாசம்) இருந்து வழிபடுபவர்களுக்கு வைகுண்டப் பேறு அளிப்பேன்” என்றார் பெருமாள். இந்த ஏகாதசி ஆரம்பமானது மார்கழி மாதம் தேய்பிறை கிருஷ்ண பட்சத்தில். இதன் பெயர் உற்பத்தி ஏகாதசி. அதையடுத்த மார்கழி மாத வளர்பிறை ஏகாதசிதான், ‘வைகுண்ட ஏகாதசி.’ அன்று முழுவதும் உபவாசமிருந்து மறுநாள் துவாதசி அன்று உணவு அருந்த வேண்டும். துவாதசி அன்று அதிகாலை நீராடி, பெருமாளைப் பிரார்தித்த பிறகு, உப்பு மற்றும் புளிப்பு இல்லாத உணவை சுண்டைக்காய், நெல்லிக்காய், அகத்திக்கீரை சேர்த்து, பற்களில் படாமல், ‘கோவிந்தா’ என்று கூறி, சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். ‘ஏகாதசி அன்று உணவு அளிப்பவரும், அந்த உணவை ஏற்பவரும், கடுமையான பாவச் செயலைச் செய்தவர்களாகிறார்கள்’ என்கிறது சாஸ்திரம். குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகளுக்கு உணவு விஷயத்தில் விலக்கு உண்டு.

ஸ்ரீமகாவிஷ்ணுவால் வதம் செய்யப்பட்ட மது, கைடபர்கள் பகவானிடம் பரமபதம் வேண்டினர். பெருமாளும் அவர்களுக்கு பரமபதம் அளித்தார். ‘இந்தப் பேறு உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்க அருள் வேண்டும்’ எனக் கேட்டனர் அவர்கள். அதன்பொருட்டே அனைத்து ஆலயங்களிலும் பரமபதவாசல் வைகுண்ட ஏகாதசி நாளில் திறக்கப்படுகிறது என்பார்கள்.

குறிப்பாக ஸ்ரீரங்கத்தில், வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலை 4.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பக்தர்களோடு அவ்வாசல் வழியே வருவார்.

தாமே வந்து, தம் அடியாரை, உடனழைத்துச் செல்லும் நீர்மையன் பகவான். அந்தத் தூயவனை மனமொன்றித் தொழுவோம். நம் பிறவி பயன்பெறும்.

–நன்றி தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக மாத இதழ்)

Advertisements

2 thoughts on “வைகுண்ட ஏகாதசி – Dec 24, 2012

  1. பா. ராகவன் December 24, 2012 at 1:19 AM Reply


    வாசக நல்லவர்களுக்கு வைகுந்த ஏகாதசி தின நல்வாழ்த்துகள்.
    (Note from BalHanuman:அவருடைய சிலேட்டு குறுவரிகளில் வாழ்த்துகிறார்…)

  2. பா. ராகவன் December 24, 2012 at 3:37 PM Reply


    வைகுந்த ஏகாதசி, சிவராத்திரி என்றால் ஒரே டிக்கெட்டில் இரண்டு படம் பார்த்த காலம்தான் நினைவில் முந்துகிறது. இன்று எங்கே அது சாத்தியம்?
    (Note from BalHanuman:அவருடைய சிலேட்டு குறுவரிகளில்…)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s