அருணாச்சல மகாத்மியம் – பகவான் ரமண மகரிஷி


அதுவே தலம் அருணாசலம் தலம் யாவினும் அதிகம்!
அது பூமியின் இதயம் அறி! அதுவே சிவன் இதயப்
பதியாம் ஒரு மருமத் தலம்! பதியாம் அவன் அதிலே
வதிவான், ஒரு ஒளி மலையா(ய்) நிதம் அருணாசலம் எனவே!
(அருணாச்சல மகாத்மியம்: 1)

பொருள்: எல்லாத் தலங்களையும்விட அதிக மகிமை வாய்ந்ததான அருணாசலம் எனப்படும் திருவண்ணாமலையே திருத்தலமாகும். அது பூமியின் இதயத்தைப் போன்றது என்பதை அறிவாயாக. சிவனின் இதயத்திலே ஒரு மருமத்தலமும் ஆகும். அவன் அத்தலத்தில் அருணாசலம் என்ற பெயரோடு ஓர் ஒளி பொருந்திய மலையாக உறையும் இறைவனுமாக இருக்கிறான்.

(தமிழில் கவிதையாக்கம்: பகவான் ஸ்ரீ ரமணர்)

இவ்வாறு அருணாச்சல மகாத்மியம் போற்றிப் புகழும் அந்த அற்புதத் தலத்திலே, தானே ஒரு நெருப்பு மலையாக சிவன் நின்றிருக்கிறான். தவிர அங்கே அண்ணாமலையப்பனும் உண்ணாமலைத் தாயாரும் அமர்ந்து, வருகின்ற அடியார்க்கெல்லாம் பேரருளை அள்ளி அள்ளித் தந்து கொண்டு இருக்கின்றனர்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!

***

ரமண சரிதம் – மதுரபாரதி

ரமணரின் வாழ்க்கை, அவரது பக்தர்களுக்குச் சிலிர்ப்பூட்டிக்கூடியுது. நுணுக்கமாக அவரது தத்துவங்களோடு இணைத்து ஆய்வு செய்து அலச விரும்புவோருக்கு வியப்பூட்டக்கூடியது. புரிந்துகொள்ள முடியாத புதிர்மூட்டை இல்லை அவர். மாறாக, தம் வாழ்க்கைக்கும், வெளிப்படுத்திய பேருண்மைகளுக்குமான இடைவெளிகளை அறவே களைந்தவர்.

இந்தியத் தத்துவஞானிகள் வரிசையில், ரமணரை முதலில் நிறுத்துவதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. அவற்றை, அவரது வாழ்க்கை உதாரணங்கள் மூலமாகவே சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது இந்நூல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s