சீசன் சபேசன் (Ver 1.0) – சிமுலேஷன்


111204-Sunday Mag-Chennai Music season

“ஹலோ ரவி, எப்படியிருக்கே?” குரல் கேட்டுத் திரும்பினேன்.

கேட்ட குரல் சபேசனுடையது. சபேசன் கிராமத்தில் எனது பள்ளி நண்பன். பள்ளிப் படிப்பை முடித்தவுடன், கல்லூரிக்குச் செல்ல வசதி இல்லாததால் அத்துடன் படிப்பை நிறுத்திக் கொண்டவன். கல்லூரிப் படிப்பு முடித்தவர்களுக்கே வேலை கிடைப்பது திண்டாட்டமாக இருக்கும் போது இவன் என்ன செய்யப் போகின்றான் என்று நான் கவலைப்பட்டதுண்டு.

“டேய் சபேசா. நான் சென்னையில்தான் வேலையாக இருக்கேன். நீ எப்ப சென்னைக்கு வந்தே? இப்ப என்ன பண்றே?”

“ரவி. நம்ம கிராமம்தான் தெரியுமே. அங்க பிழைக்க பெரிசா வழி ஒண்ணும் இல்லே. அதனால இங்கே வந்துட்டேன். நிரந்தரமா வேலை ஒண்ணும் கெடைக்கல. சீசனுக்குத் தகுந்தாப் போலே ஒரு தொழில் செய்யறேன்”/

“என்னடா சொல்றே? புரியலையேடா”

“இப்ப பள்ளிக்கூடம் தொறக்கற சீசன் இல்லையா? ஒரு குழந்தை ஸ்கூலுக்குப் போறதுன்னு தெரிஞ்சவுடனே, அதனோட அம்மா, அப்பாவை சினேகம் புடிச்சு, குழந்தையோட புத்தகங்களுக்கு பைண்ட் பண்றது, புத்தகங்களுக்கு அட்டை போட்டுத் தர்றது, இது மாதிரி பண்ணிப் பிழைப்பை நடத்தறேன். எதோ காலம் ஓடறது. இப்ப கூட பைண்டிங் பண்ணத்தான் போயிட்டிருக்கேன். அவசரமாப் போறேன். அப்புறமாப் பாக்கலாமா, வரட்டா” என்று ஓட்டமும் நடையுமாகச் சென்று விட்டான்.

சபேசனை அதன் பின் அவ்வப்போது சந்திப்பதுண்டு. சீசனுக்குத் தகுந்தாற் போல் தொழில் செய்வதாக அவன் சொன்னது உண்மைதான். ஒரு மாம்பழ சீசனில் அதனை ஓரிடத்திலிருந்து வாங்கி மற்றொரு இடத்துக்கு அனுப்புவதை மேல்பார்வை பார்ப்பது செய்வதாக ஒரு முறை கூறினான். ஓரளவு சுமாராக வண்டி ஓட்ட முடிகிறது என்றும் சொன்னான்.

Chennai Music season 2

எங்கள் ஆஃபீசர் வெங்கடேசன் ஒரு நாள் எங்களையெல்லாம் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்தார்.

“என் அக்கா பெண் அமெரிக்காவிலிருந்து வந்து டிசம்பர் சீசனில் சென்னையில் கச்சேரி செய்கின்றாள்.. நீங்களெல்லாம் குடும்பத்தோடு அவசியம் வர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

சங்கீதக் கச்சேரிகளில் பெரிதும் ஆர்வம் இல்லாவிட்டாலும் கூப்பிட்டிருப்பது ஆஃபீசராயிற்றே என்று அன்று குறித்த நேரத்திற்கும் முன்பாகவே அகாடெமி வாசலில் ஆஜாராகி விட்டோம். அங்கே பார்த்தால் படு பிசியாக சபேசன்.

“என்னடா இது ஆச்சரியமா இருக்கு! உனக்குக் கூட சங்கீதத்லேயெல்லாம் இண்ட்ரஸ்ட் வந்து விட்டதா?”

“”ரவி இது என்ன மாசம்? என்ன சீசன்? டிசம்பர் சங்கீத சீசன் இல்லையா? நாந்தான் சொன்னேனே, சீசனை ஒட்டித்தான் நம்ம பிழைப்புன்னு.”

“சரி. கொஞ்சம் புரியும்படியா சொல்லு.”

“சங்கீத சீசன்லே பாட்டு, டான்ஸ் கச்சேரிகளுக்கு ரசிகர்களைப் பிடிச்சுக் கொண்டு வருவதுதான் என்னோட வேலை இப்ப.”

“என்னடா ஒளர்றே? ரசிகர்களை பிடிச்சுக் கொண்டு வர்றதா? அது எப்படி முடியும்?

“ஆமாம்பா. எல்லா ரசிகாளும் தங்களுக்குப் பிடிச்ச பாடகர்கள் பாடறதைக் கேட்க ஓடிடறாங்க. அதுனால பல சபாக்கள்லே காத்து வாங்குது. அந்த மாதிரி இடத்திலே ரசிகர்களை பிடிச்சுக் கொண்டு வருவது என் பொறுப்பு.”

Chennai Music season 3

“யார் உனக்கு இந்தப் பொறுப்பை கொடுத்தது?”

“யாரு? வெளிநாட்டிலேர்ந்து வர்ற பாடகாள்தான். அவர்களுக்குப் பணம் பெரிசில்லை. அங்கீகாரம் தான் முக்கியம். எக்கச்சக்கமாக செலவு செய்து கொண்டு அமெரிக்காவிலேர்ந்தும், ஆஸ்ட்ரேலியாவிலேர்ந்தும் வந்து பாடும்போது, சபாவிலே ஒரு ஏழெட்டுப் பேர் மாத்திரம் இருந்தாங்கன்னா எப்படி இருக்கும்? அவர்களுக்கு இந்த மாதிரி கஷ்டம் வரக் கூடாதுன்னுதான் ரசிகர்களை கொண்டு வந்து சேக்கறதை இந்த சீசன் சமயத்திலே தேர்ந்தெடுத்திருக்கேன். “

“முந்தி அரசியல் கூட்டங்களுக்கு ஆள் சப்ளை பண்ணிட்டிருந்தேன். ஆனால் அரசியல்வாதிகள் சமாச்சாரம்தான் தெரியுமே. இந்த வெளியூர்ப் பாடகர்கள் அப்படியில்லே. ப்ராம்ப்டா பணம் கொடுத்துடுவாங்க. நம்ம ரசிகர்களும் உண்மையான ரசிகர்கள் என்பதால், பாடகர், ரசிகர் இரண்டு பேருக்குமே திருப்தி. ரசிகர்கள் எந்த இடத்திலே “பலே” போடணுமோ, எந்த இடத்திலே கை தட்டணுமோ, அதெல்லாம் கரெக்டாச் செய்வாங்க.”

சீசன் சபேசன் பிழைக்கத் தெரிந்தவன்தான்.

சிமுலேஷன்

கச்சேரி பஸ் சங்கீத ஸ்பெஷல் நாளிதழுக்கு நண்பர் சிமுலேஷன் அனுப்பிய சிறு கட்டுரைகள் சில உங்கள் பார்வைக்கு…

Advertisements

9 thoughts on “சீசன் சபேசன் (Ver 1.0) – சிமுலேஷன்

 1. simulationsundar December 17, 2012 at 12:53 AM Reply

  Thank you so much. This is getting more visibility because of your post!

 2. பாரதி மணி December 17, 2012 at 4:45 AM Reply

  சுந்தர ராமன்: என்னுடைய விண்ணப்பத்தையும் இங்கே வெளியிடுங்களேன். ஏதாவது பதில் வருகிறதா…பார்ப்போம்!

  பாரதி மணி

  எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி வந்தனமு!

  நான் விரும்பி எதிர்பார்க்கும் சங்கீத சீஸன் தொடங்கிவிட்டது. தில்லியிலிருக்கும்போது, ஒரு மாத லீவு எடுத்து, சென்னைவந்து டேரா போடும் நான், சென்னையிலிருந்துகொண்டே கச்சேரி விளம்பரங்களை பத்திரிகைகளில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இந்த ‘தள்ளாத’ வயதில் தனியாக தினமும் கால் டாக்சி பிடித்து காலை லெக்சர்-டெமான்ஸ்ட்ரேஷன் தொடங்கி நாள் பூராவும் ஒவ்வொரு சபாவாக ஏறி இறங்கி சங்கீதப்பிரவாகத்தை அனுபவிப்பது என்பது சிரமமாக இருக்கிறது.

  இதை இங்கே எழுதுவதன் நோக்கம் விருகம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி ஏரியாக்களில் இருக்கும் நல்ல உள்ளம் படைத்த, வாகன வசதியுடைய ரிட்டையர்டு ஆன ’சங்கீதப்பைத்தியங்கள்’ இந்த பழங்கிழத்தையும் கூட்டிச்சென்று கொண்டுவிடுவார்களா என்பதை ஆராயத்தான். எனக்கு ஆசை இருக்கிறது தாசில் பண்ண!

  வெளி ஊரிலிருந்தோ, வெளிநாட்டிலிருந்தோ இதற்காகவே சென்னை வரும் சங்கீத ரசிகர் ஒருவருக்கு என் வீட்டில் கெஸ்ட் ரூம் இருக்கிறது. அதில் இலவசமாக தங்கிக்கொள்ளலாம். போக வர வசதியாக இருக்கும். இன்னொரு போனஸ்….. தினமும் கேன்டீன் செலவுகளும் என்னதே! கச்சேரிகளில் கேட்கும் ராகங்களின் பெயர்களை உடனுக்குடன் என்னிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்! மற்றபடி என்னால் அவர்களுக்கு ஒரு தொந்தரவும் இருக்காது. நான் காரன்ட்டீ!

  இதைப்படிக்கும் முகநூல் நண்பர்கள் யாராவது இந்த வருஷமாவது எனக்கு உதவி செய்தால், தலைப்பிலுள்ள ஸ்ரீ ராகத்தில் அமைந்த எந்தரோ வை அபஸ்வரமாக பாடவும் தயார்!

  என் செல்: 9444003332

  அன்புடன்
  பாரதி மணி

 3. R. Jagannathan December 17, 2012 at 9:17 AM Reply

  Paid audience for Kutcheris! Some food for thought!

  ‘Deiva machaans’ – I couldn’t get it, sorry.

  -R. J.

  • BaalHanuman December 17, 2012 at 3:48 PM Reply

   அன்புள்ள R.J,

   உண்மையிலே ஒரு வித்தியாசமான சிந்தனை தான். போன டிசம்பர் சீசனுக்கு நண்பர் சுந்தர் எழுதிய சிறிய நகைச்சுவை கதை இது. இதற்குப் பொருத்தமான ஹிந்து கேஷவ் கார்ட்டூன்ஸ் – இணைத்தது மட்டும் அடியேன் 🙂

   நண்பர் சிமுலேஷன் கர்நாடக சங்கீதத்தில் ஆழ்ந்த அறிவுடையவர். அபூர்வ ராகங்கள் என்ற தலைப்பில் அவருடைய பல கட்டுரைகளை நீங்கள் அவரது தளத்தில் காணலாம்.

   அவருடைய தளத்தின் சுட்டி இதோ…

   http://simulationpadaippugal.blogspot.com/

 4. vidya (@kalkirasikai) December 17, 2012 at 9:38 AM Reply

  தெனாலியில் கமல் டாக்டர் ஜெயராமை நீங்கள் எனது தெய்வ மச்சான் என்று கூறுவார். திரு கார்த்திக் அதைத்தான் குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன்.

 5. R. Jagannathan December 17, 2012 at 5:50 PM Reply

  Thank you for the link to Sri Sundar. I visited his site and read a couple of posts. Seems he is not frequently writing – but I find the posts interesting.

  As to Ghatam Kartik’ s relationship with Poongulam Subramaniyan as ‘Deiva Machaan’ still eludes me! (even after reading fellow reader ‘vidhya’s ‘ comment!)

  -R. J.

  • BaalHanuman December 17, 2012 at 6:03 PM Reply

   You are right R.J about this ‘Deiva Machaan’ comment by Ghatam Karthik. I hope Simulation Sundar will come to our rescue and explain the relationship between Ghatam Karthik and Poongulam Subramaniyan.

 6. srinivasan (@sathishvasan) December 18, 2012 at 6:18 PM Reply

  சுஜாதாவின் இசை விழா சிறுகதையை நினவூட்டுகிறது 🙂

  • BaalHanuman December 18, 2012 at 6:37 PM Reply

   உண்மை தான் சதீஷ் 🙂

   காலி நாற்காலிகளைப் பார்த்து பாடும் அந்த NRI நாயகியின் கதை இந்தக் கதை எழுத நண்பர் சிமுலேஷன் சுந்தருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கலாம்…

   சுஜாதா தேசிகன் கை வண்ணத்தில் வெளியாகியுள்ள இந்தக் கதையின் வெர்ஷன் 2.0-வையும் படியுங்களேன் 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s