சுஜாதா பற்றி ராம்கி…


கேள்வி 1:  சுஜாதா என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது ?

ராம்கி:  ரைட்டிங் ஸ்டைல். நாலு வரியில் நாற்பது விஷயம் சொல்லும் விறுவிறு ஸ்டைல்..

கேள்வி 2:   சுஜாதாவின் படைப்புகளில் உங்களை பாதித்த படைப்பு எது ?

ராம்கி: நகரம்

கேள்வி 3: மற்றவர்களிடம் இருந்து சுஜாதா வேறுபடுவது எப்படி ?

ராம்கி:  சிறுகதை எழுத்தாளர், வெற்றிகரமான சினிமா கதை வசனகர்த்தா ஆனது வரையிலான சமரசத்துடன் கூடிய பயணம்.

கேள்வி 4:    சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர், திரைத்துறை இதில் உங்களுக்கு பிடித்த சுஜாதா யார் ?

ராம்கி:  சிறுகதை. அங்குதான் சுஜாதாவின் விஸ்வரூப தரிசனம் பெறமுடியும் என்பதால்.

கேள்வி 5:    சுஜாதாவிடம் கேட்க விரும்பிய ஒரு கேள்வி ?

ராம்கி:  அந்நியன் ரீலிஸான நேரம். நேருக்கு நேர் பார்த்து, சந்திரமுகி பார்த்துட்டீங்களா என்று கேட்டபோது பதில் வரவில்லை. கேள்வியை சாமர்த்தியமாக தவிர்த்தார். இரண்டு மாதம் கழித்து மெரீனாவில் எதிர்ப்படும்போது, பரஸ்பர குசல விசாரிப்புகளுக்கு பின்னர் திரும்பவும் கேட்க நினைத்து ஏனோ கேட்கவில்லை. கேட்டிருந்தாலும் பதில் சொல்லாமல் தவிர்த்திருப்பார். ஒரு மாதம் கழித்து விஷயம் தெரிந்தது. சிவாஜி பட அறிவிப்பு.

ஜெ. ராம்கி என்னும் ஜெ. ராமகிருஷ்ணன். முதலில் ரஜினி ரசிகன், மனிதன், இந்தியன், தமிழன். வரிசையில் எப்போதும் மாற்றமில்லை. சிதம்பரத்தில் பிறந்து சென்னையில் வாழ்ந்தாலும் மனது எப்போதும் மயிலாடுதுறையில்தான். படிப்பு, ஏவிசி கல்லூரியில் எம் சி ஏ. தொழில் மென்பொருள் கட்டமைப்பு. ஒரே ஒரு மனைவியும், ஒரே ஒரு குழந்தையும் உண்டு.

https://balhanuman.files.wordpress.com/2010/10/9.jpg?w=300

டிசம்பர் 12, 1995 அன்று ரஜினியை கேள்வி கேட்டதிலிருந்துதான் எழுத்து வாழ்க்கை ஆரம்பமாகிறது.அதற்கு முன் யாருக்கும் கடிதம் எழுதிய அனுபவம் கூட கிடையாது. கல்கண்டில் ஆரம்பித்து குமுதம், ஆனந்த விகடன் என சகல பத்திரிக்கைகளிலும் வாசகர் கடிதங்களாய் எழுதிக் குவித்ததில் எழுத்து ஆர்வமும், மீடியா பரிச்சயமும் ஒட்டிக்கொண்டது.

ஆதர்ஷ குரு, வாத்யார் சுஜாதா. இன்னொரு சுதாங்கனாய் வரவேண்டும் என்ற கனவை, விகடனின் மாணவ நிருபர் திட்டம் கலைத்து போட்டது. லேனா தமிழ்வாணன், வாசக எழுத்தாளராக்கினார். முதல் கேள்வி பதில், முதல் ஜோக்ஸ், முதல் கட்டுரை, முதல் சிறுகதை அனைத்துமே இதயம் பேசுகிறது இதழில்தான்.  எதை எழுதினாலும் உடனே பிரசுரித்து மணியன் உற்சாகப்படுத்தினார்.

2003-ல் மாலன் வலையுலகை அறிமுகப்படுத்தினார். வலைப்பூவில் எழுத ஆரம்பித்த பின்னர், வாசகர் கடிதங்கள் குறைந்து போய் கட்டுரைகள் எழுதும் பிரமோஷன் கிடைத்தது. 2004-ல் தமிழோவியத்திற்காக காந்தீய விழுமியங்கள் என்னும் தொடர் எழுத முடிந்தது. கல்கி, இந்தியா டுடே போன்ற பத்திரிக்கைகளுக்காக பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது.

ரஜினி : சப்தமா சகாப்தமா

பா.ராகவன் புத்தக உலகை அறிமுகப்படுத்தினார். தமிழகத்தின் முக்கியமான ஆளுகைகள் பற்றி புத்தகம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினி – சப்தமா? சகாப்தமா? (2005); மு.க (2006), பாகவதர் (2007), ஜெ (2008 ) போன்ற புத்தகங்களின் மூலமாக நல்ல அறிமுகம் கிடைத்தது.

மன்மோகன் சிங்காவிரி

தொடர்ந்து எழுதிய காவிரி, மன்மோஹன்சிங், மதிமுக புத்தகங்களுக்கும், ஒரு சில பரீட்சார்த்த மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்த பின்னர் ஒரு வழியாக தமிழ் எழுத்தாளர்கள் வரிசையில் ஓரமாக நிற்க முடிந்ததிருக்கிறது.

வாழ்த்துகளும் வசவுகளும் வரவேற்கப்படுகின்றன.  E-mail :  Ramkij அட் gmail.com

ரஜினி : சப்தமா சகாப்தமா

ரஜினியின் வாழ்க்கையை, அவரது அரசியல் – ஆன்மிக ஈடுபாடுகளை, அவரது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை, தமிழக அரசியல் சூழலை முன்வைத்து அலசிப் பார்க்கும் இந்நூல். ரஜினி என்கிற மிகப்பெரிய ஆளுமையின் முழுப் பரிமாணத்தைத் துல்லியமாக வெளிக்கொண்டு வருகிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s