நான் யார் ? – பகவான் ரமண மகரிஷி


அவரது அணுக்க பக்தரான டி.கே.சுந்தரேச ஐயர் ‘அட் தி ஃபீட் ஆஃப் பகவான்‘  ( At the Feet of Bhagavan )என்ற தனது நூலில் இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுள்ளார். திருவண்ணாமலையில் உள்ள மலையில் விரூபாக்ஷ குகையில் ரமணர் தங்கி இருந்த சமயம் நடந்த நிகழ்ச்சி இது. ஒரு நாள் மாலை ஏழு மணி இருக்கும். அருணாசலத்தை கிரிவலம் செய்வதற்காக அனைவரும் மலையிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தனர். மற்ற பக்தர்கள் எல்லோரும் முன்னே சென்று விட்டனர். காவ்ய கண்ட கணபதி முனிவர் மட்டும் பகவான் ரமணருடன் இருந்தார். குகையிலிருந்து மெல்ல மெல்ல இறங்கி வந்து கொண்டிருந்த சமயம் திடீரென்று ரமணர் நின்றார். உடன் வந்த கணபதி முனிவரும் நின்றார். ஆகாயத்தில் பிரகாசமான பூரண சந்திரன் பால் ஒளியை நக்ஷத்திரங்களுக்கு இடையே அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தது.

அந்த அழகிய வானையும் பூரண சந்திரனையும் கணபதி முனிவருக்குச் சுட்டிக் காட்டிய பகவான் கூறினார்:- நாயனா! (பகவான் கணபதி முனிவரை இப்படித்தான் கூப்பிடுவார்) சந்திரனும் மற்ற எல்லா நக்ஷத்திரங்களும் என்னுள் இருந்தால், சூரியன் என்னுடைய இடுப்பைச் சுற்றி அதன் கிரக பரிவாரங்களுடன் வலம் வந்தால், நான் யார்? நான் யார்?”

வேதங்கள் அறைந்த பெரும் அவதாரமே ரமணர் என்பதை உடனடியாக காவ்ய கண்ட கணபதி முனிவர் அறிந்தார். ருத்ரத்திலும் புருஷ சூக்தத்திலும் ஸ்கம்ப சூக்தத்திலும் அதர்வண வேதத்திலும் கூறப்படும் பெரும் புருஷனே ரமணர் என்பதை அவர் ரமணர் வாயாலேயே அறிந்து கொண்டார்.

அவர் கூறிய அவை அனைத்துமே ரமணர் என்பதோடு அவர் அதற்கும் அப்பாற்பட்ட பிரம்மம் என்பதையும் அவர் உணர்ந்து, பின்னால் சக பக்தர்களுக்கும் இந்த நிகழ்ச்சியைக் கூறினார். வானிலுள்ள 27 நக்ஷத்திரங்கள் ஒவ்வொருவருடைய வினைப்பயனுக்குத் தக்கபடி நல்லதையும் கெட்டதையும் வழங்குகின்றன என்பதை நமது சாஸ்திரங்கள் பறை சாற்றுகின்றன. ஆனால் ரமண நக்ஷத்திரமோ நினைப்பவர்க்கும் துதிப்பவர்க்கும் நல்லதை மட்டுமே தரும் நக்ஷத்திரமாக ஜொலிக்கிறது. அதன் ஒளியில் அனைவரும் நனைந்து ஆனந்தமடைய அவரை நினைக்க வேண்டியது நமது கடமை!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!

***

Advertisements

One thought on “நான் யார் ? – பகவான் ரமண மகரிஷி

  1. Vaidheeswaran May 24, 2013 at 4:54 AM Reply

    http://vaidheeswaran-rightclick.blogspot.com/2013/05/blog-post.html
    இந்த உலகில் மிக சிலரே “நான்” என்ற அனுபவத்தை அடைந்ததாக உணருகிறேன், என்னை பொறுத்தவரை “நான்” என்பவன் அவன் நினைப்பதை செய்பவன், யாரையும் எதிர்நோக்காதவன், யாருக்கும் கடமைப்படாதவன், யாரையும் நேசிப்பவன் இங்க திருத்தும் செய்கிறேன் யாவற்றையும் நேசிப்பவன். அவனுடைய உறைவிடம் இந்த உலகம்… அவனுக்கு உள்ள சொந்தம் இந்த பூமி தாய்… அவன் அவளை நேசிக்கிறான். அவளை புரிந்துகொள்ள நினைக்கிறான். ஆனால் அகங்காரம் கொண்ட உலகானது அந்த அனுபவத்தை அவனுக்கு தர மறுக்கிறது, அதன் பக்கத்திலும் நியாயங்கள் இருக்கதான் செய்கிறது என்ன செய்ய ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s