சுஜாதா பற்றி ஐகாரஸ் பிரகாஷ்…


கேள்வி 1:  சுஜாதா என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது ?

ஐகாரஸ் பிரகாஷ்:  எல்லோருக்கும் வாத்தியாராய்த் திகழ்ந்தது.

கேள்வி 2:   சுஜாதாவின் படைப்புகளில் உங்களை பாதித்த படைப்பு எது ?

 ரத்தம் ஒரே நிறம் முதல் நாடகம் : நாடகங்கள்

ஐகாரஸ் பிரகாஷ்:  பெரும்பான்மையான படைப்புகள். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில், காகிதச் சங்கிலிகள் (குறுநாவல்), தனிமை கொண்டு ( சிறுகதை), சிலிகான் சில்லுப் புரட்சி ( அறிவியல் தொடர்), ரத்தம் ஒரே நிறம் ( நாவல்), முதல் நாடகம் ( நாடகம்)

கேள்வி 3: மற்றவர்களிடம் இருந்து சுஜாதா வேறுபடுவது எப்படி ?

ஐகாரஸ் பிரகாஷ்:  தன்னை விடுத்து பிற நல்ல படைப்பாளிகளை வாசிக்கச் சொல்லி,  அப்படிப்பட்ட படைப்பாளிகளை தொடர்ந்து அடையாளம் காட்டியது.

கேள்வி 4:    சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர், திரைத்துறை இதில் உங்களுக்கு பிடித்த சுஜாதா யார் ?

sujatha thernth kathaikal 1sujatha thernth kathaikal 2

ஐகாரஸ் பிரகாஷ்:  சிறுகதை ஆசிரியர்

கேள்வி 5:    சுஜாதாவிடம் கேட்க விரும்பிய ஒரு கேள்வி ?

ஐகாரஸ் பிரகாஷ்:  இந்த மாதிரி நடுவிலேயே த்ராட்ல விட்டுட்டுப் போய்டுவேன்னு சொல்லவேயில்லீங்களே ?

–நன்றி தமிழோவியம்

 ரத்தம் ஒரே நிறம்

சிப்பாய்க் கலகம் என்று அழைக்கப்படும் முதல் இந்திய சுதந்திரப் போரின் பின்புலத்தில் எழுதப்பட்டது. சுஜாதாவின் ‘ரத்தம் ஒரே நிறம்.‘ இந்தியா ஒரு புதிய யுகத்தை நோக்கி நகர்ந்த இக்காலகட்டத்தின் பச்சை ரத்தப் படுகொலைகளும் குரூரங்களும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து உயிர்த்தெழுகின்றன. தனிமனித விருப்பு வெறுப்புகளும், இலட்சியவாதமும் ஒன்றிணையும் புள்ளியின் உணர்ச்சிப் பெருக்கையும் துயரங்களையும் பிரமாண்டமாகச் சித்தரிக்கும் சுஜாதா சரித்திரப் புனைகதை வடிவிற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கிறார். குமுதத்தில் ‘கறுப்பு சிவப்பு வெளுப்பு‘ என்ற பெயரில் சில அத்தியாயங்கள் வெளிவந்து கடும் சர்ச்சைகளைத் தோற்றுவித்ததால் நிறுத்தப்பட்டு மீண்டும் ‘ரத்தம் ஒரே நிறம்‘ என்ற பெயரில் எழுதப்பட்டது இந்த நாவல்.

முதல் நாடகம் : நாடகங்கள்

சுஜாதாவின் நாடகங்கள் தமிழின் முக்கியமான இலக்கிய சாதனைகள் என்று நான் நினைக்கிறேன். நாடகம் என்ற கலைவடிவின் மூன்று முக்கியமான சாத்தியக்கூறுகளை மிகச்சிறப்பாக நிரப்பியவை அவை. ஒன்று, நாடகம் நம் கண்முன்னால் ஒரு வாழ்க்கையை நிகழ்த்திக் காட்டுகிறது. வேறு எந்த கலைவடிவத்திலும் நாம் வாழ்க்கையை அபப்டியே ‘ரத்தமும் சதையுமாக’ கண்முன் காண்பதில்லை.

இரண்டு, நாடகம் என்பது அடிப்படையில் நடிகனின் கலை. நம் முன் ஒரு மனிதன் நிற்கிறான், அவன் வழியாக ஒரு கதாபாத்திரம் நிகழ்கிறது. இதுவே நாடகத்தின் அடிப்படை அற்புதம். நவீன நாடகங்கள் தவறவிடும் அம்சம் இதுவே. மூன்று, நாடகம் உரையாடலின் அதிகபட்ச சாத்தியங்களை பயன்படுத்த வாய்ப்புள்ள ஒரு கலை. இலக்கியத்தில் உரையாடல்கள் மிகச்சிறந்த பங்கை வகிக்கின்றன. ஆனால் உரையாடலின் நுட்பங்கள் அங்கே ஊகிக்கத்தான் படுகின்றன. குரலும், பாவனையும் இணையும்போது உருவாகும் உரையாடலின் நுண்ணிய அழகுகள் நாடகத்தில் வெளிப்படும் அளவு எந்தக்கலையிலும் வெளிப்பட முடியாது.

இந்த மூன்று அம்சங்களிலும் சுஜாதாவின் நாடகங்கள் மிக வெற்றிகரமானவை.

—ஜெயமோகன்

sujatha thernth kathaikal 1

சுஜாதாவின் தலைசிறந்த ஐம்பது கதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. சமூகத்திலும் தனிமனிதர்களின் அந்தரங்கங்களிலும் உறைந்திருக்கும் தீமைகள், முரண்பாடுகள், விசித்திரங்கள், பாசாங்குகள் இக்கதைகளின் ஆதார சுருதியாக இருக்கின்றன. வெளிவந்த காலத்தில் வாசகர்களிடம் ஆழ்ந்த சலனங்களை உருவாக்கிய ‘நகரம்’, ‘பார்வை’, ‘ரேணுகா’, ‘எல்டொராடோ’, ‘கால்கள்’, ‘தீவுகள் கரையேறுகின்றன’ உள்ளிட்ட பல முக்கியக் கதைகள் அடங்கியது இத்தொகுப்பு. வாழ்வின் சில ஆதார குணங்களையும் அபத்தங்களையும் மிக நெருக்கமாகத் தொட்டுச் செல்லும் இக்கதைகள் காலமாற்றத்தால் புதுமை குன்றாதவை.

sujatha thernth kathaikal 2

சுஜாதாவின் தேர்ந்தெடுத்த அறுபது சிறுகதைகள் இந்த இரண்டாவது தொகுப்பில் இடம்பெறுகின்றன. கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆச்சரியங்கள்தான் சுஜாதாவின் கதைகளின் ஆதார ஈர்ப்பாக இருக்கின்றன. வாழ்வின் எதிர்பாராத திருப்பங்களும் மனிதர்களின் எதிர்பாராத நடத்தைகளும் உருவாக்கும் அர்த்தமின்மையும் அங்கதமும் இக்கதைகளைத் தனித்துவமுள்ளதாக்குகின்றன. மனித மனதின் இருள்வெளிகள், தனிமைகள், அவமானங்கள், சிறுமைகள், வினோதங்கள், சமூகச் சீரழிவுகள் எனப் பல்வேறு தளங்களில் இக்கதைகள் சஞ்சரிக்கின்றன. எழுதப்பட்ட காலத்திலிருந்து சுஜாதாவின் வாசகர்களின் நினைவுகளில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் ‘பாலம்’, ‘குதிரை’ ‘ஒரு இலட்சம் புத்தகங்கள்’, ‘இரு கடிதங்கள்’, ‘தனிமை கொண்டு’ உள்ளிட்ட பல புகழ்பெற்ற கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

sujatha thernth kathaikal 3

சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் வரிசையில் இது மூன்றாவது தொகுதி. இதற்கு முன்பு வெளிவந்த இரண்டு தொகுதிகளும் வாசகர்களின் பெரும் கவனத்தைப் பெற்றதுடன் சுஜாதாவின் இலக்கிய ஸ்தானத்தை அவை திட்டவட்டமாக உறுதி செய்தன. இத்தொகுதியில் அவர் மத்தியமர் கதைகள் வரிசையில் எழுதிய கதைகளுடன் வேறு சில கதைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. சமகால மத்தியதர வாழ்வின் பல்வேறு நெருக்கடிகளையும் முரண்பாடுகளையும் வெளிப்படுத்தும் இக்கதைகளில் சில அவை வெளிவந்த காலத்தில் சர்ச்சைகளை உருவாக்கின. அபூர்வமான கதைசொல்லும் முறை, மின்னலைப் போல் வெட்டிச் செல்லும் நடை, அசலான மனிதர்களை மறுபடைப்புச் செய்யும் நுட்பம் ஆகியவற்றால் இக்கதைகள் தமிழ்ச் சிறுகதை மொழிக்கு பெரிதும் வளம் சேர்த்தவை.
Advertisements

2 thoughts on “சுஜாதா பற்றி ஐகாரஸ் பிரகாஷ்…

 1. Ravikumar Varadarajan December 14, 2012 at 8:30 AM Reply

  சுஜாதா அவர்களின் “வானமெனும் வீதியிலே” ஒரு மாபெரும் விஞ்ஞான கதை கலந்த கவிதை. சாதாரணமான மனிதனுக்கும் புரியும் வகையில் தெளிவுபடுத்திய ஒரு மாமனிதர் அவர்.

 2. BaalHanuman December 23, 2012 at 6:49 PM Reply

  யார் இந்த ஐகாரஸ் பிரகாஷ் ?

  http://about.me/icarusprakash

  அவருடைய தளம் இதோ…
  http://icarusprakash.com/tamil/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s