கடவுளுக்கு உருவமுண்டா? – சேஷாத்ரி ராஜகோபாலன்


ஒருதடவை, ஸ்ரீ ரமண மகரிஷிக்கும் ஒரு பழுத்த முஸ்லிம் பெரியவருக்கும் இடையே கடவுளுக்கு உருவமுண்டா இல்லையா எனும் மிக நேரிடையாக நடந்த, சுவாரசியமான உரையாடலை இங்கு தமிழாக்கம் செய்து கீழே கொடுத்துள்ளேன்.

முஸ்லிம்: கடவுளுக்கு உருவமுண்டா?

ரமணர்: அப்படி யார் சொன்னது?

முஸ்லிம்: கடவுளுக்கு உருவமில்லை என்றால், அவரை ஏன் மக்கள் ‘சிலை’ வடிவில் தொழ வேண்டும்?

ரமணர்: (நீங்களே இதற்கு பதில் சொல்லப் போகிறீர்கள் எனப் பொருள்பட, புன் முறுவலுடன்) சரி, அக் கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். சுலபமான கேள்விகளுடன் முதலில் ஆரம்பிப்போம். உங்களுக்கு உருவமுண்டா? சொல்லுங்கள்.

முஸ்லிம்: (நகைத்து, தன்னிடம் பின்னர் ஏதோ கேட்கப் போகிறார் என்று மட்டும் தீர்மானித்து,

முன் எச்சரிக்கையுடன்; (Anticipating further intricate questions) ஆம். நிச்சயமாக எனக்கு உருவமுண்டு; நீங்களே என்னைப் பார்த்துப் பேசுகிறீர்களே! நானும் உங்களுடன் இவ்வுருவத்துடனே பேசுகிறேனே; ஆனால், நான் கடவுளல்ல.

ரமணர்: ஆக நீங்கள் தான், சதையாலும் எலும்பாலும், ரத்தத்தாலும் ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைக்கப் பட்ட இந்த உடைக்குள் இருக்கும் உடல், எனச் சொல்கிறீர்கள் இல்லையா?

முஸ்லிம்: ஆம், இதை நான் நிரந்தரமாகக் கூற முடியும். இவ்வுடல் என் உடைமை தான்.

ரமணர்:’நீங்கள்’ என்பவர் சுய உணர்வு இல்லாது ஆழ்ந்து தூங்கும் போதும் கூட ” இந்த உடலில் உள்ள நீங்களே தான் இந்த உடல்” எனத் தீர்மானமாகக் கூறமுடியுமா?

முஸ்லிம்: இதெலென்ன சந்தேகம்! தூங்கும் போது இதே உருவில் தூங்கினேன், தூங்கும் வரை இவ்வுடலில் நான் தான் இருந்தேன் எனவும் நானறிவேன். தூங்கி எழுந்த பின், அதே உடலில் நான் இப்போதும் உள்ளேன் எனவும் எனக்குத் தெரிகிறது. ஆக தூங்கும் போதும் இவ்வுடல் என்னிடம் தானே இருந்திருக்க வேண்டும். எங்கும் போய் விட வில்லையே!

ரமணர்: சரி, ”நீங்கள்” ‘நீங்களேதான்’ எனும் உணர்வுடன் இருக்கிறீர்கள் என இப்போது உங்களால் சொல்ல முடிகிறது. நீங்கள் இறந்த பின்னும் ”நீங்கள்” ‘நீங்களேதான்’ எனும் உணர்வுடன் இருப்பீர்கள் என அப்போதும் உங்களால் சொல்ல முடியுமா?

முஸ்லிம்: (ஒரு கணம் யோசித்து) அச்சமயம் நான் இறந்துவிட்டதாக கருதப்பட்டு, பிணமான என் உடலை மக்கள் புதைக்கப் போகிறார்கள்.

ரமணர்: இவ்வுடல் உங்களுடையது. அதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இது உங்கள் தனிப்பட்ட சொத்து என நீங்கள் சற்று முன் தான் சொன்னீர்கள். இப்படி இருக்கும்போது, உங்கள் உடலைப் புதைப்பதை எதிர்த்து, “ இவ்வுடல் என்னுடையது. நான் உடுத்தி இருக்கும் உடை என்னுடையது, என்னுடன் கூட இருக்கும் குழந்தைகள், என் குழந்தைகள். இவர் என் மனைவி. நான் வாழும் வீடு என் சொந்த செலவில் நானே கட்டியது. நான் இவர்களுடனேயே இங்கேயே இருந்து விடுகிறேன். என் உடலை அப்படியே விட்டு சென்று விடுங்கள், இதை எடுத்துப் புதைக்க வேண்டாம்” எனும் உங்களுக்குள்ள உரிமையை மற்ற நேரங்களில் நிலை நாட்டிக் கொள்வது போல ஏன் இறந்த பின்னும் நிலை நாட்டிக்கொள்ள முடியாதா?”

முஸ்லிம்: (உடல் சார்ந்த அணுகுமுறை தவறு என உணர்ந்து, சற்று திகைத்து, மெதுவாக), என்னைப் புதைக்க வேண்டாம் என, பிணமான நான் எப்படி எதிர்த்துச் சொல்ல முடியும்? ஆக, என்னை இது வரை பேச வைத்தது வேறு: அதாவது, என் உடலை இதுவரை ஆட்டி வைத்துச் சொல்ல வைத்த ஏதோ ஒன்று இறந்த பின்னர், அதைக் காணவில்லை, ஆதலால் தான் பிணமான என்னால் பேச முடியாது. என்னை இதுவரை ஆட்டி ஓட வைத்தது ஏதோ ஓர் உள்-அமைப்பு, எனத் தெரிகிறது. ஆக என் உடல் உரிமையைப் பற்றி, என் எல்லையையும் இப்போது உணர்ந்து கொண்டேன்.

ரமணர்: (புன் முறுவலுடன், இப்போது விளக்கத்தையும் அளிக்கிறார்): இதுவரை உங்கள் உடலை ’நீங்கள்’தான் அது என நினைத்திருந்தீர்கள். அதுதான் உங்களுடைய அடிப்படை அறியாமை. பின்னர் உடல் அமைப்பில் ஏதோ உங்கள் ’உள்’ உள்ளது எனவும் பின்னர் சொன்னீகிறீர்கள். உங்களைப் போல ’உருவ வழிபாடு’ சச்சரவில் ஈடுபடும் எல்லோருடைய கேள்விகளுக்கு, நீங்கள் முன் சொன்ன அறியாமை தான் ஆரம்ப கட்டம். எதுவரை நீங்கள் இந்த அறியாமையை முற்றிலும் அகற்றாத வரை, அதாவது உங்கள் உடலுக்குள் உங்களை ஆட்டி ஓட வைக்கும் ஒரு ’உள்’ அமைப்பு உள்ளது, அது யார்? என்ன? ஏன்? என்பதைப் பற்றி முழுதும் அறியாதவரை அநாவசியமாகப் பகட்டு ஆரவார நூலறிவைக் (pedantry) காட்டுவதில் எந்த பயனுமில்லை. நான் சொன்னதில் பொதிந்த உண்மையைப் புரிந்து கொண்டவுடன், நீங்களே என்னைத் தேடியோ, அல்லது இதைப்பற்றி, மீண்டும் எவரிடமும் கேள்வி கேட்கும் சந்தர்ப்பம் நிச்சயமாக உங்களுக்கு என்றும் ஏற்படாது. நல்லது உண்டாகட்டும். போய் வாருங்கள்.

என மறை பொருளான கடவுளைப்பற்றி, ரத்தினச் சுருக்கமாக தன் இயல்பான பண்பினால், விளக்கினார். (”Some times, Ramana Maharshi’s answers given were terse and cryptic, sometimes full and explanatory but always adopted to the questioner and always marvelously apt”).

(Based on ‘Ramana Maharshi’ and the path of self-knowledge by Arthur Osborne-Jaico publication – page 121 & 122)

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!

***

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s