தட்சிணாமூர்த்தி!


பேசாமல் பேசியவர்!

பேசாமலே மாணிக்கவாசகருக்கு முக்தி நிலைக்கான பாதை காட்டிய தெய்வம் யார் என்றால் சிவனின் தட்சிணாமூர்த்தி கோலம் என்போம். அந்த தட்சிணாமூர்த்தியே நம் மத்தியில் சமீபகாலத்தில் வாழ்ந்து விட்டும் சென்றிருக்கிறார். இதோ! அந்த அதிசயம்! திருவண்ணாமலையைச் சேர்ந்த ராகாவாச்சாரியார் என்ற பக்தர், ஆஸ்ரமத்தில் இருந்த ரமணரைப் பார்க்க வந்தார். அவர் பிரம்ம சமாஜம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர். பகவத்கீதை அவரது கையில் இருக்கும்.

யாருமில்லாத போது, ரமணரிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்பது அவரது விருப்பம். அவர் ரமணரை நெருங்கவும், ஏற்கனவே அவருடன் பேசிக்கொண்டிருந்தவர்கள் புறப்பட்டு விட்டனர். ஆஹா…எதிர்பார்த்து வந்த தனிமைச்சூழல் கிடைத்து விட்டதே! என்று ஆவலுடன் அவர் அருகே நெருங்கியவுடன், நீங்கள் பிரம்மசமாஜத்தைச் சேர்ந்தவர் என்பது உங்கள் கையிலுள்ள கீதையைப் பார்த்தாலே புரிகிறது. கேளுங்கள், உங்களுக்கு என்ன வேண்டும்?என்றார்.

உங்களது உண்மையான வடிவத்தை தரிசிக்க எனக்கு ஆசை, காட்டுவீர்களா? என்ற ராகவாச்சாரியார் கண்முன் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ரமணரின் பின்னால் தோன்றிய ஒளிவட்டத்தில், தட்சிணாமூர்த்தி வடிவம் தெரிந்தது. மவுனமாக இருக்க வேண்டும் என்பதை அதிகமாக வலியுறுத்தியவர் ரமணர். ராகவாச்சாரியாருக்கு இதன் மூலம் ஒரு விஷயம் தெளிவானது. தட்சிணாமூர்த்தியும் அமைதியே வடிவாக சின்முத்திரை காட்டி, ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை விடுத்து, தன்னைச் சரணடைவோருக்கு முக்திநிலை அருள்கிறார். இதையே ரமணர் தன்னிடம் பேசாமல் பேசிவிட்டதாக உணர்ந்தார்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!

***

Advertisements

One thought on “தட்சிணாமூர்த்தி!

  1. vathsala December 14, 2012 at 3:53 PM Reply

    arputham.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s