‘சிவாஜி’க்கு மறுவாழ்வு! — எஸ்.சந்திரமௌலி


12.12.12 இந்த நாள் ரொம்ப அபூர்வமானது. இதுபோல அடுத்து ஒரு நாள் வருவதற்கு இன்னும் நூறு வருடங்கள் காத்திருக்க வேண்டும். ரஜினி ரசிகர்களைப் பொறுத்தவரை இந்த நாள் சூப்பர் ஸ்டாரின் ரொம்ப ஸ்பெஷலான பிறந்த நாள். காரணம், தேதியைக் கூட்டினால் 36. திருப்பிப் போட்டால் 63. ரஜினிக்கு இது 63வது பிறந்த நாள். கூட்டுத் தொகையான 9 தான் ரஜினிக்கு ராசியான எண். ‘நான் உடல் நலம் குன்றி இருந்த போது, எனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு இந்த வருடம் நான் என்ன பிறந்த நாள் பரிசு தருவது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, ஏவி.எம். நிறுவனம் சிவாஜி படத்தை 3டியில் உருமாற்றி, மெருகேற்றி டால்பி இசையில் வெளியிட முன்வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’ என்கிறார் சூப்பர் ஸ்டார். இனி சிவாஜி 3டி பற்றி ஒரு டிரெயிலர் பார்க்கலாமா?

ஏவி. எம். தயாரித்த சிவாஜி படத்தை 3டியில் உருவாக்கும் ஐடியாவுக்குப் பிள்ளையார் சுழி போடப்பட்டது பிரசாத் லேப்பில்தான் என்றால் ஆச்சர்யமாக இருக்கும். பிரசாத்தில் முப்பரிமாணப் படங்கள் உருவாக்கும் தொழில் நுட்பத்தை நிறுவி, பரிட்சார்த்த ரீதியில் படத்தின் சில பகுதிகளை மட்டும் வெற்றிகரமாக 3டி ஆக மாற்றினார்கள். அடுத்து ஒரு முழுநீளப் படத்தை 3டி ஆக மாற்றிப் பார்க்க முடிவு எடுத்தபோது, எந்தப் படத்தை எடுத்துக் கொள்ளலாம்? என்று பெரிய விவாதமே நடந்தது. கடைசியில் எல்லோரும் ஏகமனதாக முடிவு எடுத்தது சிவாஜி. பிரசாத் லேப்பின் சாய் பிரசாத், ஏவி.எம்.மை அணுக, சரவணனும், அவரது மகன் குகனும் சந்தோஷமாகச் சம்மதித்தார்கள்.

அப்புறம் என்ன நடந்தது? சரவணனும், குகனும் விவரிக்கிறார்கள்:

சிவாஜி படத்தை 3டியாக மாற்றும் விஷயத்தை உடனே வெளியில் சொல்லி பப்ளிசிடி செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தோம். சுமார் 15 மாதங்களுக்கு சைலன்டாக வேலை நடந்தது. எங்களுக்கு இருந்த முதல் சவால் படத்தின் நீளம். சிவாஜி படம் 3 மணி 11 நிமிடம் ஓடும். பிரசாத்தில் படத்தின் நீளத்தை இரண்டு மணி நேரமாகக் குறைக்கும்படி சொன்னார்கள். ஒரு எடிட்டரை வைத்துக் கொண்டு ஃப்ரேம் பை ஃப்ரேம் படம் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக டிரிம் பண்ணி, இரண்டரை மணி நேரத்துக்குக் குறைத்தேன். இப்போது படம் படு விறுவிறுப்பாக இருக்கிறது. படத்தைப் பார்த்துவிட்டு ஒரு நண்பர், ‘இது மாதிரியே டிரிம்மாக படத்தை ரிலீஸ் பண்ணி இருந்தால், படம் இன்னும் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கும்’ என்று சொன்னார்.

சில நாட்களுக்கு முன்பு, திடீரென்று ரஜினிக்கு போன் செய்து, ‘உங்களைப் பார்க்க வேண்டுமே’ என்று சொன்னதும், அவர் ‘என்ன விஷயம்? உடனே கிளம்பி வரட்டுமா?’ என்று கேட்டார். நான் அவர் வீட்டுக்கு வந்து சந்திப்பதாகச் சொன்ன போது, அதை மறுத்துவிட்டு, மறுநாள் காலை எதற்காக நான் அவரைச் சந்திக்க விரும்பினேன் என்ற சஸ்பென்சோடு, அவரே என் வீட்டுக்கு வந்தார். ‘சிவாஜியை 3டி படமாக மாற்றி இருக்கும் விஷயத்தைச் சொன்னதும், ‘அப்படியா? எப்படி சார் பண்ணீங்க?’ என்று ஆச்சர்யமாகக் கேட்டார். ‘ஆரம்பத்தில் பப்ளிசிடி வேண்டாம்; முழுத் திருப்தியாக படம் வந்தபிறகு சொல்லலாம் என்று காத்திருந்தோம்’ என்றதும் ‘நான் படத்தைப் பார்க்கலாமா?’ என்று மிகவும் ஆர்வமாகக் கேட்டார். அடுத்த நாள் பிரசாத் லேபிலிலேயே அவருக்கு ஸ்பெஷலாகப் படத்தைப் போட்டுக் காட்டினோம்.

படத்தைப் பார்த்து விட்டு, ரொம்ப திரில்லாயிட்டார். பல காட்சிகளைக் கைதட்டி ரசித்தார். ‘என் படத்தை இப்படி 3டியில் பார்க்க எனக்கே ரொம்ப சந்தோஷமாய் இருக்கு’ என்றார். அவருடைய பிறந்த நாளான 12.12.12 அன்று படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னதும், ‘என்னுடைய கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு, நீங்க ஓர் அற்புதமான பிறந்த நாள் பரிசைக் கொடுத்திருக்கீங்க’ என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.”

‘ஒரிஜினல் படத்தில் ஆம்பல்… ஆம்பல் பாடலில் ரஜினி ஒரு ஆப்பிளை கேட்ச் பிடித்து, ஒரு கடி கடித்துவிட்டு, ஸ்டைலாக பின்பக்கமாக விட்டெறிவார். ஆனால், இப்போது 3டியில், ரஜினியிடமிருந்து அந்த ஆப்பிள், தியேட்டரில் அமர்ந்திருக்கும் ரசிகர்களை நோக்கிப் பறந்து வருகிறது. இன்னொரு காட்சியில், ரஜினி கைகளை அசைக்கிற ஆக்ஷனில், அவர் ஆடியன்சை நோக்கி அம்பை வீசுவது போல மாற்றி இருக்கிறார்கள். இதுபோல, 3டி ஸ்பெஷலாக ரசிகர்களைக் குஷிப்படுத்த சில ஸ்பெஷல் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.

சிவாஜி 3டி படத்தின் இரு பாடல் காட்சிகளையும், ஒரு சண்டைக் காட்சியையும் பத்திரிகையாளர்களுக்குப் போட்டுக் காட்டுவதற்காக சத்யம் காம்ப்ளெக்சில் உள்ள சுபம் தியேட்டரில் கடந்த திங்களன்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்தியாவிலேயே முதல் முறையாக சுபம் தியேட்டரில் நிர்மாணிக்கப் பட்டிருக்கும் டால்பி அட்மாஸ் ஒலி அமைப்பில், 3டி சிவாஜி காட்சிகளைப் பார்த்தது இதுவரை இல்லாத ஒரு ஸ்பெஷல் அனுபவம்.

படத்தின் இயக்குனர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த், வைரமுத்து, படத்தில் நடித்த சுமன் போன்றவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். ‘2டியில் எடுக்கப்பட்டு, அதன் பிறகு 3டி ஆக மாற்றப்பட்ட சில ஹாலிவுட் திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அவற்றை விட சிவாஜி மிகப் பிரமாதமாக வந்திருக்கிறது. சிவாஜி படத்தை எடுக்கும்போதே முப்பரிமாணமாக மாற்றுவதற்குரிய வகையில் காட்சிகளைப் படம் பிடித்த ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் பாராட்டுக்குரியவர்’ என்றார் ஷங்கர். ‘3டி சிவாஜி, தமிழ்த் திரையுலகத்தில் தொழில் நுட்பத்தில் ஒரு மைல் கல். இதனை தமிழ் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்’ என்றார் வைரமுத்து.

3டி சிவாஜி தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் 65 தியேட்டர்களில் மட்டுமே 3டி படங்களைத் திரையிட வசதி உள்ளது, அதை அதிகரிக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம். கேரளாவில் சில மாதங்கள் தள்ளி வெளியிடப்படுகிறது. 3டியில் ஒரு பெரிய அனுகூலம் என்னவென்றால், படம் பார்க்க தியேட்டருக்குத்தான் வர வேண்டும். திருட்டு வி.சி.டியில் பார்த்து ரசிக்க முடியாது” என்றார் குகன்.

‘ஏவி.எம். எடுத்த மற்றொரு படத்தை 3டியாக மாற்ற வேண்டுமென்றால் உங்கள் சாய்ஸ்?’ என்று சரவணனிடம் கேட்டபோது சட்டென்று அவர் சொன்ன பதில்: ‘அன்பே வா.’

–நன்றி கல்கி

3 thoughts on “‘சிவாஜி’க்கு மறுவாழ்வு! — எஸ்.சந்திரமௌலி

 1. Karunaharamoorthy December 12, 2012 at 3:55 AM Reply

  I am sorry to say………………….Sivaji is Rajini’s usual Kindergarten type film and no technology can salvage it. Unnecessary sheds and unbelievable fights……………. totally a waste product like a Sivakasi Cracker ! Only the God Rajini believes can save Tamil audience from this sort of nuisance!

 2. ரெங்கசுப்ரமணி December 12, 2012 at 8:06 AM Reply

  ரஜினி படங்கள் அனைத்தும் பொழுது போக்கு படங்கள் என்று அனைவருக்கும் தெரியும். அது அறிவுஜீவிகளுக்கான படமில்லை. அவர்களுக்காகவே பலர் நடந்து போவதையே பத்து நிமிடங்களுக்கு காட்டி படமெடுக்கின்றார்கள். அவர்கள் அதைப் பார்த்து திருப்தி அடையலாம்.

  சிவகாசி வெடியை பார்க்கும் ஞானிகள் அதை பார்த்து ஒரு தெய்வீக புன்னகையோடு “இது என்ன விளையாட்டு” என்று க்டந்து போகலாம். குழந்தைகளுக்கும், குழந்தை போல வாழ்வை அழகுணர்ச்சியுடன் அனுபவிக்கும் சிலருக்கு சிவகாசி பட்டாசு என்றால் குஷிதான்.

  இலக்கிய உலகில் பாலகுமாரன், சுஜாதா போன்றவர்களின் எழுத்துக்களை திட்டினால் கிடைக்கும் அறிவுஜீவிப் பட்டம், சினிமாவில் ரஜினியை திட்டினால் கிடைக்கும். வைத்து பறக்கவிடுங்கள்.
  ( எனக்கு கமல் படங்களும் பிடிக்கும் 🙂 )

 3. R. Jagannathan December 12, 2012 at 2:44 PM Reply

  Rajini is beyond criticism! The print media and now the TV channels including north indian news channels have given a very high pedestal to him! All in their own interest to create and maintain a set reader / audience base!

  Coming to Sivaji 3D, I really think that K.V.Anand deserves kudos, as, many shots – particularly the song and fight sequences are picturised suitable for 3D conversion.

  – R. J.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s