மௌனியின் மறுபக்கம் – பொறாமைப்பட வைக்கும் புத்தகம் – சுப்ரபாலன்


கோயிலுக்கு தினம் ரெண்டு வேளை வர்ரேன். ஆனா, சாமி கும்பிடறதில்லையே, ஏன்னு தெரியுமா? நான் ஒருநாள் வரலேன்னாலும் நடராஜரும் மத்த சாமிகளும் ‘ஏன் இன்னிக்கு வரலே’ன்னு கேட்டுக் கோவிச்சுப்பாங்கப்பா! அதனாலதான் நான் நாள் தவறாம அட்டெண்டன்ஸ் கொடுக்கறேன்” என்பாராம் ‘மௌனி’.

ஐம்பது ஆண்டுகளில் இருபத்து நான்கு சிறுகதைகளை மட்டுமே, அதுவும் தனித் தன்மையோடு எழுதி சிறுகதை இலக்கிய உலகில் உயரம் தொட்டவர் ‘மௌனி’ என்று அறியப்படும் எஸ்.மணி. இயற்பெயரை ‘மௌனி’ ஆக்கியவர் சிறுகதை உலகில் மகுடம் சூடிய பி.எஸ்.ராமையா!

மௌனி தாம் எழுதும் கதைகள் எதற்கும் தலைப்பு வைத்ததில்லை. ஒவ்வொரு கதையையும் திரும்பத் திரும்ப பலமுறை எழுதுவாராம். ஒரு சமயம் நள்ளிரவு நெருங்குகிற வரை மௌனியின் கதையைத் திரும்பத் திரும்பப் படியெடுத்துக் களைத்துப்போன அனுபவத்தை எழுதுகிறார் ‘மௌனியின் மறுபக்கம்’ நூலில், ஜே.வி. நாதன். இருவருக்கும் நாற்பது வயது இடைவெளி!

மௌனியை ஒரு பத்திரிகைக்காக ஜே.வி. பேட்டி கண்டார். ‘காதல் சாலை சிறுகதையில் ஏன் அவள் தூக்குப் போட்டுக் கொண்டு செத்தாள் என்று புரியவில்லை என்று எழுத்தாளர் இந்துமதி கேட்டாரே’ என்ற கேள்விக்கு ‘மௌனி’யின் பதில் எனக்கும் புரியலை!”

அந்த அளவுக்குத் தம்முடைய பாத்திரங்களோடு ஒன்றிப் போனவர் அவர்!

அமெரிக்கத் தூதரகத்தில் கான்ஸல் ஜெனரலாகப் பணியாற்றிய டாக்டர் ஆல்பர்ட் பி. ஃபிராங்க்ளின் ஒருசமயம் மௌனியைக் கேட்டாராம், “Why Do You Write?” என்று. அதற்கு மௌனி சொன்ன பதில், என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை. அதனால் எழுதுகிறேன்.”

பல ஆண்டுகள் மௌனியோடு நெருங்கிப் பழகிய ஜே.வி.நாதன், அந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கும் விதம் வெகு சுவாரஸ்யமானது. ஒரு பக்கத்தையும் ஒதுக்கிவிட முடியாது. நிறைய கடிதங்கள் மூலம் ‘உரையாடுகிறவர்’ மௌனி. தமக்குப் பெரியவர் எழுதிய கடிதங்களுள் பலவற்றை இந்த நூலில் சேர்த்திருக்கிறார் ஜே.வி. வித்தியாசமான வரலாறு. இந்த மாதிரி ஓர் இலக்கிய அனுபவம் பெற்ற நாதன் மீது பொறாமைப்படலாம்!

மௌனியின் மறுபக்கம்’, ஜே.வி.நாதன், விகடன் பிரசுரம். போன்: 044-42634283 / 84 விலை: ரூ. 75.00/-

–நன்றி கல்கி

தொடர்புடைய பதிவுகள்:
மௌனி – அழியாச் சுடர்கள்

மௌனி – தமிழ்த் தொகுப்புகள்

மௌனி – ஓபன் ரீடிங் ரூம்

மௌனியின் மறுபக்கம்

“மௌனியின் சிறுகதைகளைப் படிப்பது ஒரு புது அனுபவமாக அமைகிறது. ஒவ்வொரு தடவையும் படிக்கிறபோது ஒரு புது அனுபவமாக அமைகிறது. உலகத்தில் நல்ல இலக்கியம் எனப்படுவதெல்லாமே இப்படி முதல் தடவையாகப் படிக்கும்போது புது அனுபவமும், மறுபடியும் மறுபடியும் படிக்கும்போது புதுப்புது அனுபவங்களையும் உண்டாக்கவல்லது என்பது விமர்சகர்கள் கண்டுள்ள உண்மை. பிரும்மத்தைக் கண்டவர்கள் அவசியம் நேர்ந்தால் அதை வேறு வேறு விதமாக வர்ணிப்பதுபோல, மௌனியின் கதைகளைப் படிப்பவர்கள் அதை வேறு வேறு விதமாக வர்ணிக்க இயலும். இதுவும் இது மிகச் சிறந்த இலக்கியம் என்பதற்கு ஓர் அத்தாட்சியே ஆகும்.” – இலக்கிய விமர்சகர் க.நா.சுப்ரமண்யம் 1967-ம் ஆண்டு மௌனியின் சிறுகதைகள் பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிட்ட வரிகள் இவை. 24 சிறுகதைகள் மட்டுமே எழுதி, தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத இடம் பிடித்திருப்பவர் ‘சிறுகதைத் திருமூலர்’ மௌனி ஒருவர் மட்டுமே. சிறுகதைகளைத் தவிர, ‘ஆனந்த விகடன்’ இதழில் ‘எங்கள் ஊர் செம்மங்குடி’ என்று ஒரு கட்டுரையும், பி.எஸ்.ராமையா மணிவிழா மலரில் ‘எனக்குப் பெயர் கொடுத்தவர்!’ என்று ஒரு கட்டுரையும் மட்டுமே மௌனி எழுதி உலகுக்கு அறிமுகமாகியுள்ளவை. அவர் எழுதியதாகச் சொல்லப்படும் ஒரு குறுநாவல் காணாமற் போய்விட்டதாக அவரே குறிப்பிட்டுள்ளார். பொதுவாகவே, மௌனியின் எழுத்து இலக்கிய உலகில் தனித்துவமானதும் புதுத் தடம் போட்டுக்கொண்டு போனதும் ஆகும். அவரைப்பற்றிய அனுபவ உண்மைகளும் அவ்வாறே. இலக்கிய ரசிகர்கள் மற்ற எழுத்தாளர்களைப்பற்றி அறிந்த அளவுக்கு மௌனியை அறிந்துகொள்ள இயலவில்லை. அவரோடு சுமார் 16 வருடங்கள் பழகிய எழுத்தாளர் ஜே.வி.நாதன் இந்த நூலின் மூலம் மௌனியின் மறு பக்கத்தை அனுபவபூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும் வெளிப்படுத்தி இருக்கிறார்.ஜே.வி.நாதனின் எழுத்து நடையில் மௌனியின் பேட்டியைப் படிக்கிறபோது சிலிர்க்கிறது மனது. மௌனியின் ‘தவறு’, ‘அத்துவான வெளி’ ஆகிய சிறுகதைகளுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த மொழி வளர்ச்சி இயலாளரான திரு.ஆல்பர்ட் பி. ஃபிராங்க்ளின் அளித்துள்ள ஆங்கில விமர்சனம் இந்த நூலில் தரப்பட்டுள்ளது. ஜே.வி.நாதனுக்கு மௌனி எழுதிய கடிதங்கள், அவரின் கையெழுத்து ஆகியவை வாசகர்களுக்கு அபூர்வ பொக்கிஷமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை!

Advertisements

5 thoughts on “மௌனியின் மறுபக்கம் – பொறாமைப்பட வைக்கும் புத்தகம் – சுப்ரபாலன்

 1. பாரதி மணி December 11, 2012 at 3:22 AM Reply

  நான்குமுறை இந்த மாமனிதரை சிதம்பரத்தில் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. வயிற்றுப்பக்கம் பை வைத்த கதர் பனியன், துண்டோடு அவருடன் சிதம்பரம் கோவிலினுள் காற்றாட உட்கார்ந்து கதைத்த அனுபவம் உண்டு.

  எங்கோ எழுதியிருக்கிறேன்…..மெளனியும், சி.சு. செல்லப்பாவும் என்னை, வாய் நிறைய ‘மாப்ளே……மாப்ளே!’ என்று தான் அழைப்பார்கள். க.நா.சு ஒருமுறை கூட அப்படி அழைத்ததில்லை!

  • BaalHanuman December 11, 2012 at 11:58 PM Reply

   மிக்க மகிழ்ச்சி பாரதி மணி சார் உங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும்…

 2. R. Jagannathan December 11, 2012 at 9:22 AM Reply

  KNS would have treated BM more as a son and heir apparent than son-in-law! – R. J.

  • BaalHanuman December 11, 2012 at 11:59 PM Reply

   அன்புள்ள R.J,

   உங்கள் கருத்துடன் எனக்கும் உடன்பாடே…

 3. R. Jagannathan December 11, 2012 at 9:39 AM Reply

  Just read ‘Kaathal Saalai’ by Mouni – written in 1936. I find it difficult to read it fully (nevertheless, I did read it fully to have a final opinion) and the style is truly outdated and it seems that a short story worthy of just a paragraph or two has been expanded to so many pages – like a mega serial but without any interesting part in it. I am a Pamaran, just excuse my comments. – R. J.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s